Friday, August 7, 2020

CATEGORY

படமும் கவிதையும்

உயிர்க் கொல்லி கொரோனாவே | கவிதை | வே.ம.அருச்சுணன்

உயிர்க்கொல்லி கொரோனாவே ஏன்வந்தாய்? ஊரையழிப் பதுனக்கு சுகம்தருமா மயிர்க்கூச் செரியும் சம்பவங்களால் மாண்டோர் எண்ணிக்கை அறிவாயோ? பொறுப்பற்ற அற்பர்களின் செயல்தனிலே போர்தனில் வீழ்வதுபோல் அழிகின்றாரே மறுப்பேதும் கூறாமலே மாள்கின்றாரே மாமணியாய்ப் பிறந்ததன் பயன்யாது? உன்பொல்லா குணத்தாலே உலகமினி உருப்படியாய் இருக்காதென மனிதகுலமும் நன்றேயினி வாழ்தலும் இயலாதென்றே நாதியற்றே மடிதல்தகுமா...

நிலவு மகள் | கவிதை

இருண்ட வானையும் அன்னாந்து ரசிக்க வைக்க அவளால் மட்டுமே சாத்தியம்!! நன்றி : tamilsms.blog

மௌனம்! | கவிதை | பிரபாகரன் கணேசன்

  என் மௌனத்தை திறக்கும் சாவி உன்னிடம்.... என் ஆயுள் தீரும் வரை மாறாது உன் இடம்.... என் அன்பை மெய்ப்பிக்க ஒரு ஆயுள் போதுமா.... அதனால் தான் எனக்கு பிரிவென்னும் சாபமா.... இன்னும் ஒரு ஜென்மம் கடன் கேட்டாலும்...

துணிச்சல் | கவிதை

  ஒரு நொடி துணிச்சல் இருந்தால் இறந்து விடலாம்...! ஒவ்வொரு நொடியும் துணிச்சல் இருந்தால் ஜெயித்து விடலாம்...! நன்றி : கவிதைக்குவியல்

வாழ்க்கை | கவிதை

  வாழ்க்கையைப் பற்றி யோசிப்பவன் காதலிப்பதில்லை காதலிப்பவன் வாழ்க்கையை பற்றி யோசிப்பதில்லை இதை புரிந்தவன் இரண்டிலும் தோற்பதில்லை...! நன்றி : தமிழ் கவிதைகள் 2019

நானும் மழையும் | கவிதை

ஒவ்வொரு முறையும் என் கைகள் பிடிக்கும்போது நழுவி விலகி செல்கிறது மழை… ஒவ்வொரு முறையும் மழை என் முகத்தில் விழுந்து எழுந்து என் இதழை முத்தமிடும் முயற்சியில் விலகி செல்கிறேன் நான்… ஒவ்வொரு முறையும் தோல்விகளில் முடிவதை வேடிக்கை பார்க்கிறது மழைக்கும் எனக்கும் இடையேயான குடை…   நன்றி : மழை பயணம்

மதிப்பு! | கவிதை | தீபி

முத்துக்களை உருவாக்கும் சிப்பிக்கு மாலையாகும் வாய்ப்பு கிடைப்பதில்லை...! சிப்பியை மறந்தவர்களே முத்துக்களை நிறைவாக கொண்டாட முடியும்..! சிப்பியை மறந்துவிட்டு உன் கைசேர்ந்த முத்தினைக் கொண்டாடு...! மதிப்பு அதிகமாகும்..!   நன்றி : தீபி | எழுத்து.காம்

மறவாமல் இருக்க… | கவிதை

மலருக்கு ஆசை மண்ணில் விழாமல் இருக்க... சூரியனுக்கு ஆசை மறையாமல் இருக்க... நிலவுக்கு ஆசை தேயாமல் இருக்க... எனக்கு ஆசை நீ என்னை மறவாமல் இருக்க...   நன்றி : கவிதைக்குவியல்

ஒரு ரோஜா! | கவிதை | தபு ஷங்கர்

என்னிடம் பரிசுப் பொருளாக ஒரு ரோஜாவை கேட்கிறது உன் மௌனம் ஆனால் உன்னை காதலிக்க ஆரம்பித்தபோதே பூக்களயும் நேசிக்க ஆரம்பித்துவிட்டது மனசு எப்படி பறிப்பேன் ஒரு ரோஜாவை..   நன்றி : தபு ஷங்கர் | எழுத்து இணையம்

கண்ணீர்… | கவிதை

முதியோர் இல்லத்தில் ஒரு தாயின் கண்ணீர்...! நீ இருக்க ஒரு கருவறை இருந்தது என் வயிற்றில்... நான் இருக்க ஒரு இருட்டறை கூடவா இல்லை... உன் வீட்டில்... நன்றி : ரேகா

முதல் மழை | கவிதை | மழை பயணம்

ஜூன் மாதத்தின் முதல் மழையில் சில்லென மாறியது சூழல் சில மணித்துளிகள் பெய்த மழையில் வெயிலின் வியர்வை துளிகள் மழைத் துளிகளாய்… முதல் மழையோடு முடிந்து போவதில்லை வானிலை அடுத்தடுத்து மழை பெய்யும் ஆம் அடுத்த சந்திப்பு எப்போது காதலோடு காத்துக்கிடக்கிறது பூமி…   நன்றி : மழை பயணம்

பெண்ணே | கவிதை

இவ்வளவு வெறுமையாய் ஏன் உணர்கிறேன்? சாமக்குளிரில் உறக்கமில்லா இரவில் மேகம் இழந்த வானோடு தனித்திருக்கும் நிலவின் அமைதி கொடூரமாய் இருக்கிறது.. என் மடல்கள் உன்னைச்சேர்வதே இல்லை எனத்தெரிந்தும் எழுதிக்கொண்டே இருக்கிறேன்.. பிரிவின்முன் நீ பேசிய வார்த்தைகள்.. 'உனை வெறுத்திட மனமில்லை பேசாமலிருக்காதே' உன் மறதியில் அனுப்பிய மடலின் தாமதத்தில் அசந்தர்ப்பமாய் நீ விலக நேர்ந்தது புரிகிறது.. உனைப்பற்றிய...

அன்பு | கவிதை | சசிகுமார்

அன்பெனும் செய்முறை கல்விதேர்வில் ஆயிரம் மதிப்பெண்கள் உனக்கு !!! ஆசிரியர்களே இல்லாமல் நீ பயின்ற பாடத்துக்கு!!! நன்றி : சசிகுமார் | எழுத்து.காம்

புன்னகை | கவிதை

  பொய்யான உறவுகளுக்கு முன்னால் புன்னகையும் ஒரு பொய் தான்...! உண்மையான உறவுகளுக்கு முன்னால் கோபம் கூட புன்னகை தான்...! நன்றி : கவிதைக்குவியல்

காதல் உணர்வுகள்! | கவிதை | சு.சங்கத்தமிழன்

தீண்டி செல்லும் காற்றின் முகவரியை தேடி பயணம் இல்லாத பாதையில் சென்று மனதோடு மனம் பேசும் இரவில் வரும் நிலவை பார்த்து அவளின் முகமோ என்று எண்ணி தூங்காமல் விழித்திருக்கும் விழி மூடும் நேரமும் அவளின் நினைவுகள் தூங்காமல் என்னுள்ளே இம்சைகள் செய்யும் காதலின் நினைவுகள் ஆயிரம்...

நேசம் | கவிதை | கவிதைக்குவியல்

  நீ உனக்காக அழுகிறாய் என்றால் யாரையோ நேசிக்கிறாய் என்று அர்த்தம்...! நீ மற்றவர்களுக்காக அழுகிறாய் என்றால் யாரோ உன்னை நேசிக்கிறார்கள் என்று அர்த்தம் ...! நன்றி : கவிதைக்குவியல்

முதல் மழை | கவிதை | மழை பயணம்

ஜூன் மாதத்தின் முதல் மழையில் சில்லென மாறியது சூழல் சில மணித்துளிகள் பெய்த மழையில் வெயிலின் வியர்வை துளிகள் மழைத் துளிகளாய்… முதல் மழையோடு முடிந்து போவதில்லை வானிலை அடுத்தடுத்து மழை பெய்யும் ஆம் அடுத்த சந்திப்பு எப்போது காதலோடு காத்துக்கிடக்கிறது பூமி…   நன்றி : மழை பயணம்

மாட்டுப் பொங்கல் வாழ்த்துக்கள்! | 2020

மனிதனுக்காய் பால் கொடுத்து மனிதனுக்காய் தோள்(ல்) கொடுத்து மனிதனுக்காய் தனைக் கொடுத்து மாண்டு போவது மாடு...! இரத்தமெல்லாம் பிழிஞ்சி விட்டு ஏறேற்றி உழுது விட்டு எடையேற்றிப் படுத்தி விட்டு ஏமாற்றி வாழ்வதே மனிதன்...! மாடு போற்றும் ஒருநாள் உழைப்பை போற்றும் ஒருநாள் மணிகள் கட்டி வண்ணமிட்டு போற்றுவோம் இந்த...

பொங்கலோ பொங்கல்!

மஞ்சளும் குங்குமமும் கலை கட்டியதே வானமும் அதைக்கண்டு மழையாய் கொட்டியதே நெற்கதிர் பூத்துக்குலுங்க கதிரவன் கண்சிமிட்ட கரும்பும் பொங்கற்பானையும் பந்தமும் சொந்தமும் விவசாயிக்கு வழிகாட்ட பொங்கல் பொங்கியதே நன்றி : கவிராஜா | எழுத்து.காம்

நட்பு!

பூக்கள் மென்மையானவை. அதன் மீது வாழும் பனித்துளி தூய்மையானது. நல்ல நட்பைப்போல். பூவிடம் தேனை கொள்ளையடிக்க  வரும் வண்டு , பூவை பறிக்காமல் நட்பு பாராட்டி செல்வதே உண்மை நட்பு நன்றி : ஏ.குமரன்.எம்.ஏ.,எம்.பில்.| காகிதப் பூக்கள்

மழை பயணம்! | கவிதை

ஆத்த மூடி அணையை மூடி குளத்தை மூடி ஏரியை மூடி இதையெல்லாம் வெட்டி மூடிவிட்டு ஏன் மழை வரலன்னு மல்லாக்க படுத்து யோசிக்கிறான் முட்டாப்பய மனிதன்! நன்றி : mazhaipayanam.wordpress.com

ஆங்கில புத்தாண்டே வருக வருக! | 2020

அ ழிவை ஏற்படுத்தாமல் ..... அன்பை பெருக்கிட..வருக வருக ....!!! ஆ க்ரோயத்தை காட்டாமல் ..... ஆனந்தத்தை ஏற்படுத்த ..வருக வருக ....!!! இ ழப்புகளை ஏற்படுத்தாமல் .... இன்பத்தை தோற்றுவிக்க ..வருக வருக ....!!! ஈ னச்செயல் புரியாமல் .... ஈகையை...

காதல் பார்வை!

நான் உன்னை ஆயிரம் முறை பார்த்திருந்தாலும் நீ என்னைப் பார்த்த அந்த நொடியில் தான் விதையாய் விழுந்தது என் காதல்....! நன்றி : tamilsongslyricss.blogspot.com

அந்தமே ஆரம்பம் | கவிதை | பா.க்ரிஷானி

இன்னலின் இடுக்கில் ஒடுங்கி விடாதே… இடையூறு கண்டு பயந்து விடாதே… துன்பத்தைக் கண்டு துவண்டு விடாதே… தீயவை கண்டு ஒதுங்கி விடாதே… தடைகளை தகத்தெறி தானாக மார்க்கமுண்டாகும்.. ஒன்றின் அந்தமே…                         ...

பிந்திய செய்திகள்

கர்ப்பக்காலத்தில் சர்க்கரை நோய் உண்டாவதற்கான காரணம் என்ன…?

கர்ப்பகாலத்தில் பாதிக்கும் சர்க்கரைநோய் பிரசவம் நடைபெற்றதும் சரியாகிவிடும். பிரசவத்துக்குப் பிறகு, ரத்த சர்க்கரையின் அளவு இயல்பான நிலைக்கு வந்துவிடும். ஆனால், சில பெண்களுக்கு அது நிரந்தர சர்க்கரை நோயாக மாறிவிடும். 

தலைமையின் செயல் திறனின்மையே தோல்விக்கு காரணம் | சுமந்திரன்

இலங்கை தமிழ் அரசு கட்சியை பொறுத்தவரை, கட்சியின் தலைவர், செயலாளர் தோற்றிருக்கிறார்கள். ஆகவே, தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் உள்ள பிரதான கட்சியான தமிழ்...

சசிகலாவுக்கு தேசியப் பட்டியலில் எம்.பி பதவி வழங்க வேண்டும்!

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் பாராளுமன்றத் தேர்தலில் போட்யிட்டு, சுமந்திரனால் பதவி பறிக்கப்பட்ட சசிகலா ரவிராஜிற்கு தேசிய பட்டியல் வாயிலாக எம்.பி பதவி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

பாரதிராஜாவை சங்கத்தில் இருந்து நீக்க கோரிக்கை!

பாரதிராஜாவை சங்கத்தில் இருந்து நீக்கக்கோரி பத்திரப்பதிவு துறை தலைவருக்கு பட அதிபர்கள் மனு அனுப்பி உள்ளனர். பாரதிராஜாஇயக்குனர் பாரதிராஜா தமிழ்...

பாலியல் மிரட்டல் வருகிறது | குஷ்பு பரபரப்பு புகார்

நடிகை குஷ்பு வலைத்தளத்தில் அரசியல், சமூக விஷயங்கள் சம்பந்தமான பதிவுகளை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். காங்கிரஸ் செய்தி தொடர்பாளராகவும் இருக்கும் குஷ்பு தனக்கு பாலியல் ரீதியாக மிரட்டல் வந்திருப்பதாக கூறி...

துயர் பகிர்வு