நடிகர் விஜய் சேதுபதியின் டிவிட்டர் பக்கத்தில் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை ஒரு மில்லியனை கடந்தது. இதற்காக ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் முகமாக புகைப்படம் ஒன்றை வெளியிட்டார்.
தற்போது மனிதன் என்ற பெயரில் புதிய போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார் விஜய் சேதுபதி. இதற்கான வீடியோ ஒன்றை விஜய் சேதுபதி தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.
விஜய் சேதுபதி, தற்போது விஜய்யுடன் இணைந்து நடித்திருக்கும் மாஸ்டர் திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. மேலும் மாமனிதன்,லாபம், துக்ளக் தர்பார் உள்ளிட்ட படங்களில் விஜய் சேதுபதி நடித்துள்ளார்.