நகுல் ஸ்ருதி தம்பதினருக்கு குழந்தை பிறந்தது

தமிழில் பல படங்களில் நடித்திருக்கும் நகுல் – ஸ்ருதி தம்பதினருக்கு குழந்தை பிறந்துள்ளது.நகுல் - ஸ்ருதி தம்பதினருக்கு குழந்தை பிறந்ததுநகுல் – ஸ்ருதி2003-ம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் படத்தில் அறிமுகமானவர் நகுல். பின்னர் 2008-ம் ஆண்டு காதலில் விழுந்தேன் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இந்தப் படம் அவருக்கு மாபெரும் வெற்றியைத் தேடித்தந்தது.
இவர் கடந்த 2016-ம் ஆண்டு தான் காதலித்து வந்த ஸ்ருதி என்ற பெண்ணை திருமணம் செய்தார். தனது 35-வது பிறந்தநாளன்று தன் மனைவி கர்ப்பம் தரித்திருப்பதாக அறிவித்தார்.

நகுலின் குழந்தை

இந்நிலையில் நகுல் – ஸ்ருதி தம்பதினருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இவர்களுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

ஆசிரியர்