புற்று நோயால் அவதிப்படும் அங்காடித்தெரு நடிகை

வசந்த பாலன் இயக்கிய அங்காடித்தெரு படத்தில் நடித்து பிரபலமான நடிகை சிந்து புற்று நோயால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்.புற்று நோயால் அவதிப்படும் அங்காடித்தெரு நடிகைவசந்தபாலன் இயக்கத்தில் மகேஷ், அஞ்சலி நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படம் அங்காடித் தெரு. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து புகழ்பெற்றவர் சிந்து. தொடர்ந்து சினிமா, டிவியில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். 

கொரோனா காலகட்டத்தில் சக கலைஞர்களுக்கு உதவிகள் செய்தும் வந்தார். இந்நிலையில் சிந்துவுக்கு புற்றுநோய் என தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் பிளாக் பாண்டி வெளியிட்டுள்ள வீடியோவில் அவரும் சிகிச்சையில் இருக்கும் சிந்துவும் பேசி இருக்கிறார்கள். 

சிந்து

மருத்துவ உதவிக்காக சிரமப்படும் நிலையில் இருக்கும் அவர் பொருளாதார உதவி கேட்டு வீடியோ வெளியிட்டுள்ளார்.

ஆசிரியர்