Tuesday, December 7, 2021

இதையும் படிங்க

சூப்பரான ஸ்நாக்ஸ் வெங்காய சமோசா

மாலை நேரத்தில் டீ, காபியுடன் சாப்பிட அருமையாக இருக்கும் இந்த வெங்காய சமோசா. இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

சூப்பரான முட்டை பப்ஸ்!

தேவையான பொருட்கள் :மைதா மாவு - 2 கப்உப்பு - 1/2tspவெண்ணெய் - 150 கிராம் பூரணம் வைக்க :எண்ணெய் - 2 tspவெங்காயம் -...

இரும்பு சத்து நிறைந்த முருங்கைக்கீரை சாதம்

முருங்கைக்கீரை 300 வகையான நோய்கள் வராமல் தடுக்கவும், 67 வகையான நோய்களை குணப்படுத்தவும் உதவுவதாக ஆயுர்வேத மருத்துவம் குறிப்பிடுகிறது.

வீட்டிலேயே செய்யலாம் பன்னீர் டிக்கா!

தேவையான பொருட்கள்பன்னீர் - 250 கிராம்தயிர் - 1/2 கப்மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்மிளகாய் தூள் - 1 ஸ்பூன்கரம் மசாலா - 1/2 ஸ்பூன்சீரகத் தூள் -...

அரிசி மாவு தேங்காய் ரொட்டி

அரிசி மாவு, தேங்காய் சேர்த்து செய்யும் இந்த ரொட்டி மிகவும் சுவையானது. ஆரோக்கியம் நிறைந்தது. இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று...

வெஜிடபிள் ஊத்தாப்பம்!

வெஜிடபிள் ஊத்தாப்பத்தில் பலவகையான காய்கறிகள் சேர்ப்பதால், அதில் வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் போன்றவை அதிகம் நிறைந்திருக்கும். இதை காலை வேளையில் சாப்பிடும் போது, அந்நாளுக்குத் தேவையான ஆற்றல் உடலுக்கு கிடைக்கும்.

ஆசிரியர்

ஆரோக்கியம் தரும் கீரை சாதம் இப்படி செஞ்சு பாருங்க.

மணக்க மணக்க கலர்ஃபுல்லான கீரை சாதம் ரெசிபியை தான் இன்னைக்கு நாம தெரிஞ்சுக்க போறோம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கீரை என்றாலே அதை ஒதுக்கி வைக்க தான் பார்ப்பார்கள். ஆனால் கீரையில் இருக்கும் சத்து நம்முடைய உடல் ஆரோக்கியத்துக்கு மிக மிக அவசியமானது. நிறைய பேர் வீடுகளில் இன்று கீரையை சமைக்கும் பழக்கமே மறந்து போய்விட்டது என்று சொன்னாலும் அதில் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. கீரையை வைத்து ஒரு கீரை புலாவ் ரெசிபியை சீக்கிரமா தெரிஞ்சுக்கலாம் வாங்க.

முதலில் இந்த ரெசிபியை செய்வதற்கு பாலக் கீரையை நாம் பயன்படுத்திக் கொள்ளலாம். ஒரு கட்டு பாலக் கீரையை சுத்தம் செய்து கொஞ்சம் பெரிய பெரிய துண்டுகளாக வெட்டி தண்ணீரில் அலசி தண்ணீரை வடித்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இது அப்படியே இருக்கட்டும். (இதுதவிர சிறுகீரை, முளைக்கீரை களிலும் இந்த கீரை சாதத்தை ட்ரை பண்ணி பார்க்கலாம்.)

1 கப் அளவு பாஸ்மதி அரிசியை தண்ணீரில் போட்டு, 20 நிமிடங்கள் ஊறவைத்து எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். இதுவும் அப்படியே இருக்கட்டும். பொடியாக நறுக்கிய கேரட் – 1, பச்சை பட்டாணி – 1 கைப்பிடி அளவு, இந்த இரண்டு பொருட்களையும் எடுத்து தனியாக வைத்துக் கொள்ளுங்கள். கேரட்டும் பச்சைபட்டாணி சேர்ப்பது என்பது அவரவர் விருப்பம்தான். தேவைப்பட்டால் சேர்த்துக் கொள்ளலாம். இல்லை என்றால் இதை தவிர்த்து கொள்ளலாம்.

இப்போது அடுப்பில் ஒரு குக்கரை வைத்துக் கொள்ளுங்கள். அந்த குக்கரில் எண்ணெய் – 1 ஸ்பூன், நெய் – 1 ஸ்பூன், ஊற்றிக் கொள்ளவேண்டும். எண்ணெய் காய்ந்ததும் பட்டை – 1, அன்னாசிப்பூ – 1, கிராம்பு – 2, சோம்பு – 1 ஸ்பூன், ஏலக்காய் – 2, மராத்தி மொக்கு – 1, இந்த பொருட்களை சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும். இந்த பொருட்கள் அனைத்தும் சிவநது வந்த உடன், மீடியம் சைஸில் இருக்கும் – 1 பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் வெட்டி எண்ணெயில் சேர்த்து கண்ணாடி பதம் வரும் வரை வதக்கிக் கொள்ள வேண்டும்.

வெங்காயம் நன்றாக வதங்கியவுடன் பச்சை மிளகாய் – 3 குறுக்கே கீறி சேர்த்துக் கொள்ள வேண்டும். அதன் பின்பு இஞ்சி பூண்டு விழுது – 1 ஸ்பூன், சேர்த்து இஞ்சி பூண்டு விழுது பச்சை வாடை போகும் வரை 2 நிமிடம் வதக்கி விடுங்கள். அடுத்தபடியாக புதினா – 1 கைப்பிடி அளவு, மல்லித்தழை – 1 கைப்பிடி, அளவு சேர்த்து வதக்கி விட்டு ஊற வைத்திருக்கும் அரிசியை சேர்த்து, தயாராக இருக்கும் கீரையையும் அரிசியோடு போட்டு, ஒரு முறை பக்குவமாகக் கலந்து விடவேண்டும். அரிசியை உடைத்து விடாதீர்கள்.

அடுத்து 1 கப் அளவு பாசுமதி அரிசிக்கு, 1 1/2 கப் அளவு தண்ணீர் நமக்கு சரியாக இருக்கும். தண்ணீரை குக்கரில் ஊற்றி சாதத்திற்கு தேவையான அளவு உப்பை போட்டு, மீண்டும் ஒருமுறை நன்றாக கலந்து விட்டு குக்கரை மூடி விசில் போட்டு அடுப்பை முழு தீயில் வைத்து, 2 விசில் வைத்தால் போதும். கமகம வாசத்தோடு கீரை சாதம் நமக்கு தயாராகி வந்திருக்கும். இந்த கீரை சாதத்தை லஞ்ச்பாக்ஸிலும் நாம் கொடுத்துவிடலாம். தொட்டுக்கொள்ள ஒரு சிப்ஸ் அல்லது கிழங்கு வகைகளில் ஏதாவது இருந்தால் அட்டகாசமாக இருக்கும்.

இந்த ரெசிபியை பாஸ்மதி அரிசியில் தான் செய்ய வேண்டும் என்ற அவசியம் கிடையாது. உங்கள் வீட்டில் இருக்கும் சாதம் வடிக்கும் அரிசி, பச்சரிசி எதில் வேண்டுமென்றாலும் செய்யலாம். அதற்கேற்றவாறு தண்ணீரின் அளவுகளை மட்டும் மாற்றிக் கொள்ளுங்கள். உங்களது அரிசி எத்தனை விசில் வைத்தால் வேகமோ அத்தனை விசில் வைத்துக்கொள்ள வேண்டும். அவ்வளவு தான். உங்களுக்கு இந்த ரெசிபி பிடிச்சிருந்தா உங்க வீட்ல ட்ரை பண்ணி பாருங்க.

நன்றி | தெய்வீகம்

இதையும் படிங்க

சத்தான சுவையான கம்பு அல்வா

கம்பில் புட்டு, உப்புமா, தோசை என்று பல்வேறு ரெசிபிகளை செய்து சாப்பிடலாம். இன்று கம்பில் வித்தியாசமான சுவையான அல்வா செய்வது எப்படி என்று...

மணிப்பூரக சக்கரா தியானம்…!

நிமிர்ந்து அமரவும். தரையில் விரிப்பு விரித்து அதில் காலையில் கிழக்கு திசை நோக்கியும், மாலையில் மேற்கு திசை நோக்கியும் அமரவும். தரையில் அமர முடியாதவர்கள் ஒரு நாற்காலியில் நிமிர்ந்து அமரவும்....

சூப்பரான கத்திரிக்காய் சட்னி..!

தேவையான பொருட்கள்:பெரிய கத்திரிக்காய் - 1புளி - 1 சிறிய அளவுஎண்ணெய் - 1 டீஸ்பூன்உளுத்தம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்வரமிளகாய் - 3பூண்டு - 4 பல்மஞ்சள்...

சூப்பரான மட்டன் கீமா சமோசா

அசைவப் பிரியர்களுக்கு மட்டன் சமோசா என்றாலே கொள்ளை பிரியம். குறிப்பாக மாலை நேரத்தில் குழந்தைகளுக்கு மட்டன் கீமா சமோசா செய்து கொடுத்தால் விரும்பி...

கினுவா வெஜிடபிள் சாலட்!

தேவையான பொருட்கள் :கினுவா - கால் கப்வெங்காயம், வெள்ளரிக்காய், குடைமிளகாய் - தலா ஒன்றுப்ராக்கோலி - பாதியளவுகெட்டியான தக்காளி - 2ஆலிவ் ஆயில் - 2 டேபிள்ஸ்பூன்பூண்டு - 2...

சோயா குழம்பு…!

தேவையானவை:சோயா உருண்டைகள் - 20,பச்சைப் பட்டாணி (விருப்பப்பட்டால்) - கால் கப்,பெரிய வெங்காயம் - 2,தக்காளி - 4,கறிவேப்பிலை - சிறிதளவு,உப்பு - தேவையான அளவு.

தொடர்புச் செய்திகள்

பேரறிவாளன் விவகாரத்தில் ஆளுநர் காலம் தாழ்த்தியது ஏற்க முடியாத விடயம்!

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பேரறிவாளனை முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரும் விவகாரத்தில், ஆளுநர் காலம் தாழ்த்தியது ஏற்க முடியாத விடயம் என உச்ச...

ஐக்கிய இராச்சியத்தின் உயர்ஸ்தானிகருக்கும் ஹாபிஸ் நசீருக்கும் இடையில் சந்திப்பு!

ஐக்கிய இராச்சியத்தின் இலங்கை தூதுவர் ஷாராஹ் ஹல்டன், இன்று (செவ்வாய்க்கிழமை) மட்டக்களப்பு மாவட்டதிற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். இதன்போது மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மட்டக்களப்பு மாவட்ட...

ஆங் சான் சூகிக்கு விதிக்கப்பட்ட தண்டனை கவலை அளிக்கிறது | இந்தியா

மியான்மர் தேசத்தின் எதிர்காலத்தை மனதில் வைத்துக் கொண்டு, நாட்டை முன்னேற்றுவதற்கான அனைத்து தரப்பிலும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என இந்திய தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

இறந்தவர்கள் கனவில் வருவதற்கு இப்படியும் கூட ஒரு அர்த்தம் உண்டு.

நம்முடன் வாழ்ந்து இந்த பூமியை விட்டு மறைந்த நம் முன்னோர்கள் கனவில் வந்தால் போதும், அப்படியே பயந்து நடுங்கி என்ன பரிகாரம் செய்வது?...

குழந்தைகளின் பேச்சு தாமதமாவதற்கான காரணங்கள்

பெற்றோர்களிடம் இருந்து எந்தவொரு பழக்கத்தையும் புரிந்து கொள்வது குழந்தைகளுக்கு எளிதானது. பெற்றோரின் செயல்பாடுகளையும், பேசும் வார்த்தைகளையும் கூர்ந்து கவனித்து அதன்படியே செயல்படுவதற்கு முயற்சிப்பார்கள்.

கருப்பு உளுந்து இட்லி பொடி

கருப்பு உளுந்தில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. கருப்பு உளுந்தை கொண்டு செய்யப்படும் உணவுகளை குழந்தைகளுக்கு அடிக்கடி உண்ணக் கொடுப்பதால் ரத்த சோகை நோய்...

மேலும் பதிவுகள்

உடலுக்கு தேவையான ஆற்றலை தரும் வெஜிடபிள் ஊத்தாப்பம்

சுவையாகவும், அதே சமயம் சத்து நிறைந்ததாகவும் ஒரு காலை உணவை சாப்பிட விரும்புகிறீர்களா? அப்படியானால் அதற்கு வெஜிடபிள் ஊத்தாப்பம் சிறந்த தேர்வாக இருக்கும்.

இரும்பு சத்து நிறைந்த முருங்கைக்கீரை சாதம்

முருங்கைக்கீரை 300 வகையான நோய்கள் வராமல் தடுக்கவும், 67 வகையான நோய்களை குணப்படுத்தவும் உதவுவதாக ஆயுர்வேத மருத்துவம் குறிப்பிடுகிறது.

சத்தான சுவையான கம்பு அல்வா

கம்பில் புட்டு, உப்புமா, தோசை என்று பல்வேறு ரெசிபிகளை செய்து சாப்பிடலாம். இன்று கம்பில் வித்தியாசமான சுவையான அல்வா செய்வது எப்படி என்று...

துணியால் ஆன முககவசத்தை சுழற்சி முறையில் பயன்படுத்தலாமா?

துணியால் ஆன முககவசத்தை சுழற்சி முறையில் பயன்படுத்துவது குறித்து திருப்பூர் அரசு ஆஸ்பத்திரி டாக்டர் கோபாலகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார்.

இளமை கொலுவிருக்க.. இதழ்கள் விரியட்டும்..

உண்மையான வயதை மறைக்க முடியாது என்பது நிஜமாக இருந்தாலும் உடலைப் பேணுவதிலும், ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்தினால் பெரும்பாலானவர்களால் இளமையை தக்கவைத்துக்கொள்ள முடியும்.

குழந்தைகளின் பேச்சு தாமதமாவதற்கான காரணங்கள்

பெற்றோர்களிடம் இருந்து எந்தவொரு பழக்கத்தையும் புரிந்து கொள்வது குழந்தைகளுக்கு எளிதானது. பெற்றோரின் செயல்பாடுகளையும், பேசும் வார்த்தைகளையும் கூர்ந்து கவனித்து அதன்படியே செயல்படுவதற்கு முயற்சிப்பார்கள்.

பிந்திய செய்திகள்

பேரறிவாளன் விவகாரத்தில் ஆளுநர் காலம் தாழ்த்தியது ஏற்க முடியாத விடயம்!

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பேரறிவாளனை முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரும் விவகாரத்தில், ஆளுநர் காலம் தாழ்த்தியது ஏற்க முடியாத விடயம் என உச்ச...

ஐக்கிய இராச்சியத்தின் உயர்ஸ்தானிகருக்கும் ஹாபிஸ் நசீருக்கும் இடையில் சந்திப்பு!

ஐக்கிய இராச்சியத்தின் இலங்கை தூதுவர் ஷாராஹ் ஹல்டன், இன்று (செவ்வாய்க்கிழமை) மட்டக்களப்பு மாவட்டதிற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். இதன்போது மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மட்டக்களப்பு மாவட்ட...

ஆங் சான் சூகிக்கு விதிக்கப்பட்ட தண்டனை கவலை அளிக்கிறது | இந்தியா

மியான்மர் தேசத்தின் எதிர்காலத்தை மனதில் வைத்துக் கொண்டு, நாட்டை முன்னேற்றுவதற்கான அனைத்து தரப்பிலும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என இந்திய தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஜினியை சந்தித்து பேசினார் சசிகலா

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழியும், அ.தி.மு.க.வின் முன்னாள் பொதுச் செயலாளருமான சசிகலா, நடிகர் ரஜினிகாந்தை சந்தித்தார். சென்னை போயஸ்...

சங்க இலக்கியப் பதிவுகள் 04 | திருமண நிகழ்வும் விருந்தும் | ஜெயஸ்ரீ சதானந்தன்

ரோகினி நிறைமதி நாளில் விடியற்காலையில் திருமணம் நடைபெறுகின்றது. அழகிய காலை நேரத்தில் உளுத்தம் பருப்பை கூட்டி சமைத்த...

பாடசாலை மாணவர்களுக்கு வீதி விழிப்புணர்வு கருத்தரங்கு

பாடசாலை மாணவர்களுக்கான வீதிப்பாதுகாப்பு 02வது கருத்தரங்கு நிகழ்வு கிளி புனித திரேசா பாடசாலையில் இன்று நடைபெற்றது. வீதி...

துயர் பகிர்வு