December 7, 2023 4:08 am

உலகில் அதிக கோடீஸ்வரர்களைக் கொண்ட நாடு கட்டார்!உலகில் அதிக கோடீஸ்வரர்களைக் கொண்ட நாடு கட்டார்!

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

எண்ணெய் வளம் மிக்க கட்டார்  நாட்டில் 14.3 சதவிகிதத்தினர் கோடீஸ்வரர்களாக உள்ளதாக அண்மையில் நடைபெற்ற ஆய்வொன்றின் முடிவுகள் தெரிவிக்கின்றன.

இந்த ஆய்வறிக்கையின்படி, கட்டாரில் உள்ள ஒவ்வொரு ஆயிரம் பேரிலும் 143 பேர் ஒரு கோடிக்கும் அதிகமான சொத்துடையவர்களாக இருகின்றனர்.

இது உலக நாடுகளின் செல்வந்தர்களின் சதவிகிதத்தை விட அதிகமாகும்.

மற்ற அரபு நாடுகளில், குவைட் 11.5 சதவிகிதத்துடன் மூன்றாவது இடத்திலும், பஹ்ரைன் 4.9 சதவிகிதத்துடன் ஏழாவது இடத்திலும், ஐக்கிய அரபுக் குடியரசு 4 சதவிகிதத்துடன் ஒன்பதாவது இடத்தையும் பிடிப்பதாக பொஸ்டன் ஆலோசனைக் குழுவின் 13ஆம் ஆண்டு ஆய்வறிக்கை தெரிவிக்கின்றது.

கடந்த 2012ஆம் ஆண்டில், மத்தியக் கிழக்கு நாடுகளிலும், ஆப்பிரிக்காவிலும் செல்வந்தர்களின் வளர்ச்சி  9.1 என்ற சதவீதத்தில் இரு மடங்கு ஆகியுள்ளது.

மேலும் 2017ஆம் ஆண்டிற்குள், இந்த இரு நாடுகளின் தனியார் சொத்து மதிப்பானது 6.5 டிரில்லியன் டொலர் என்ற அளவை எட்டக்கூடும்.

இதற்கு முக்கிய காரணமாக இருக்கப்போவது, எண்ணெய் வளத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தித் திறனாகும் என்றும் அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.

பொஸ்டன் ஆலோசனைக் குழு, உலக அளவில், வியாபார உத்திகளுக்கும், நிர்வாக மேம்பாட்டிற்கும் ஆலோசனை மையமாகச் செயல்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்