Monday, August 10, 2020

இதையும் படிங்க

கவனம் மகளே | கவிதை | ஜெ.ஈழநிலவன்

இனி கவனம் மகளே! இதன் பிறகுதான் நீ நெருப்பின் வழி பயணிக்க வேண்டும்! பிரபஞ்சத்தின் இறுதி தொட்டியில் கனத்தழும் கடைசிக்குரல் கூட பெண்ணதான் இருக்கிறாள்! நீருக்குள் நிலையெடுக்கும் வேரைப்போல் உன்னை சுற்றிசுழலும் உருமாற்றப்பட்ட முகங்கள்! வானம் மூடியிருப்பதாய் எண்ணாதே மேகமெல்லாம் கண் என்று எண்ணிக்கொள்! நம்பிக்கை என்ற அகராதிக்குள் மூடிக்கிடக்கு துரோகத்தின் பக்கங்கள்! மூங்கிலுக்குள் முரண்டு கொள்ளும் காற்றுப்போல் தப்பித்து வெளியேற முடியாது மகளே! சத்தமிடும் கதவு துயரத்தின் குறியீடு ஒவ்வொரு வீட்டிலும் இது ஒரு மீளமுடியா திசை! ஆடை மாற்றும்...

முன்னாள் துணைவேந்தர் என். சண்முகலிங்கன் பாடிய நல்லூர் கந்தன் பாடல்!

  https://youtu.be/Pbc-JRe5-xo பாடல் : பஞ்சம் போா் வந்தாலும்... பாடகா் : பேராசிாியா் என்.சண்முகலிங்கன். பாடல் வாிகள் : வேலணையூர் கவிஞர் சி.இராசரத்தினம் (1997) இசை :அற்புதன் தொகுப்பு: க.தர்மித் தயாரிப்பு: பேராசிரியர் இரா. சிவச்சந்திரன் வெளியீடு: நகுலேஸ்வரி பண்பாட்டு மேம்பாட்டு நிறுவனம்

கவிதை | நெஞ்சுக்குள் தரிசனம்! | சண்முக பாரதி

எங்கள் பண்பாட்டின் ஆன்மீக அடையாளமாய் நிமிர்ந்த நல்லூர் முருகா! நின் பெருந்திருவிழா அழகில் நெஞ்சு நிமிரும் நாளுக்காய் காத்திருந்தோம் இன்று நின் தரிசனம் காண அடையாள அட்டை இன்னுமின்னும் பற்பல நிபந்தனைகள் அந்தக் கிருமிக்கு அவ்வளவு வல்லமையா… 650 பேர் சோதனை செய்து 300 பேருக்கு...

கவிதை | கிருத யுகத்தின் கவிஞன் | வ.ஐ.ச.ஜெயபாலன்

* காவியங்கள் பேராபத்துக்களை உதைத்து வரமான வாளொடு நிமிர்ந்த மாவீர்கள் பற்றியதே. ஆனாலும், எங்கள் காவியம் வேறு. அது, கொரோனா கொள்ளையர் மிரள சுவை புதிது, பொருள் புதிது, வளம் புதிது சொல் புதிதாய், சோதியுடன் சிறகசைகிற எங்கள் கவிஞன். மனுஷ்ய புத்திரன் பற்றியது. * அவன் கொரோனாவின் பொறியில் விழ்த்தப்பட்டது...

தகப்பன் தின்னிகள் – சண்முகபாரதி

  ஆடியமாவாசை… பிண்டமாய் போன அப்பாவுக்கு கண்ணீரில் எள்ளுத் தண்ணி இறைத்த என் இடம் நிரப்ப வருவான் ஒரு பாலன்…. அப்பா பெயர், நட்சத்திரம் மழலையாய் உதிரும் இந்த வயதில் இவனுக்கு ஆடியமாவாசை எந்தன் கண்ணீரும் உறையும் ‘தகப்பனைத் தின்னி’ பிள்ளையின் எள்ளுத் தண்ணீராய் கண்ணீரைத் தந்தபடி கூட இருந்த தாய் விளக்கம்… ‘அவர் காணாமல் போகையில் இவன் வயிற்றில்… தேடுறம் தேடுறமெண்டு… இனித்...

ஈழத்தின் மூத்த பெண் எழுத்தாளர் பத்மா சோமகாந்தன் காலமானார்!

ஈழத்து இலக்கிய வளர்ச்சியில் முக்கிய பங்களிப்பை வழங்கிய மூத்த பெண் எழுத்தாளர் பத்மா சோமகாந்தன் காலமானார். இவர் நேற்று (புதன்கிழமை) மாலை கொழும்பில் காலமாகியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பத்மா சோமகாந்தன், பெண்கள் தொடர்பாக தொடர்ச்சியாக குரல் எழுப்பி...

ஆசிரியர்

கவிதை | பொய் முகங்கள் |பா.உதயன்

எத்தனை
பொய் முகங்களை
என் எதிரே
பார்த்திருக்கேன்

நானே வியந்தபடி
இவனா இப்படி
என்று ஏங்கியிருக்கேன்

கவிஞன் என்று
ஒருத்தன் வந்தான்
பல கதைகள்
சொல்லித் திரிந்தான்

எப்பவுமே தன் மூச்சு
விடுதலை என்றான்
இப்ப இவன் இருக்கும்
இடம் வேறு

பொய் அழகே
இவனுக்கும்
கவிதைக்கும் என்று
புரிந்து கொண்டேன் இன்று

அரசியல் ஆய்வாளன்
என்று ஒருவன் வந்தான்
அண்ணன் அவன் சொல்வது
தான் தத்துவம் என்றான்

எப்பவுமே தான்
தேசியவாதி என்றான்
இப்ப இவன்
இருக்கும் இடம் வேறு

ஏங்கிப்போய் விட்டேன்
இவன் பேச்சை
இன்று கேட்டு

சோஷலிசவாதி என்று
ஒருவன் இருந்தான்
சொலிடாரிட்டி என்று
பல கதைகள் சொன்னான்

சரிநிகரும் சமத்துவமும்
என்று பல சொன்னான்
சாதி மதம் பாவம்
என்றும் சொன்னான்

இப்ப இவன்
இருக்கும் இடம் வேறு
ஏங்கிப் போய் விட்டேன்
இவனை ஒருக்காக் கண்டு
எத்தனையோ கோடிக்கு
தான் அதிபதி என்றான்

இந்த மண் மீட்க
என்று ஒருவன் வந்தான்
உயிர் தமிழுக்கு
உடல் மண்ணுக்கு என்றான்
அத்தனையும் பொய்யெனப் போலே
ஆக்கிரமிப்பாளருக்கு உதவி
அபிவிருத்தி அமைச்சராகிப் போனான்

நல்லாட்சி என்று
ஒருவன் வந்தான்
நம்மில் ஒருவன்
துணையாகி நின்றான்

இப்ப வரும் தீர்வு
என்றும் சொன்னான்
ஏமாந்து போனார்
எமது மக்கள்

ஜனநாயகம் பேசி
ஒருத்தன் திரிந்தான்
இப்போ பணநாயகம்
ஆகிப் போனான் இன்று

உதவும் கரம் என்று
ஒருத்தன் இருந்தான்
ஊர் முழுக்க
காசு சேர்த்துத் திரிந்தான்

பாவம் அந்த
மக்கள் என்று சொல்லி
பல உதவி
செய்வதாக சொன்னான்

போகும் இடம் எல்லாம்
மாலை விழும்
இவன் கழுத்தில்
ஏதோ மீட்க
வந்த தேவன்
இவன் போலே

இப்ப இவன்
இருக்கும் இடம் வேறு
இரண்டு மாடி வீடு
கொடுத்தது எல்லாம் சுருட்டி
கொள்ளைகாரன் போல
ஏங்கிப் போனேன் கண்டு

சாதி எதிர்ப்பாளன்
சக்கரப்பிள்ளைவாள்
என்று ஒருவன் வந்தான்
நீதி கெட்ட சமூகம்
என்று சொன்னான்

இப்ப இவர் சொல்லும்
கதை வேறு
கடைசி மகள் ஒருத்தி
காதலித்தாள் தலித்தை என்று
வீட்டை விட்டுக் கலைத்துப்போட்டார்

மிச்சம் மூன்று பிள்ளைக்கும்
முடிச்சு வைக்க நாய் போல் அலைகிறார்
நான்கு பிள்ளைகளின் தந்தை
நல்ல சாதி கேட்டு

எந்த இலக்கிய சந்திப்பிலும்
இவரை இப்போ காணம்
ஏங்கிப் போய் விட்டேன்
எங்கள் பிள்ளைவாளா
இவர் என்று

எழுத்தாளன் என்று
ஒருத்தன் இருந்தான்
ஏதோ பல
எழுதி எழுதி வந்தான்

எல்லாமே
தெரிந்தவன் போலே
எழுத்தினிலே வித்தகன்போல்
தத்துவங்கள் சொன்னான்

ஆண்டுக்கு
ஒரு புத்தகங்கள் அடிப்பார்
பேருக்கும் புகழுக்கும் என்றே
பெரிசாய் பல விளம்பரங்கள்
செய்வார்

புவிசார் அரசியல் ஞானி
என்று ஒருவர் இருந்தார்
தன்னை விட ஒரு ஞானி இல்லையென
தத்துவங்கள் பல எழுதி வந்தார்

நடந்தது நடப்பது நடக்கப் போவதென
நாளொரு செய்தி சொன்னார்
ஆன நடந்தது ஒன்றும் இல்லை
இவர் இப்போ நடப்பதும் இல்லை

அரசியல் அறிவோம்
என்று ஒருவர் வந்தார்
அடிக்கடி கருத்தரங்கு வைத்தார்

அவன் பிழை
இவன் பிழை என்பார்
அதனால் தான்
நாம் தோற்றோம் என்பார்

அறிவதற்கோ
அங்கு ஒன்றும் இல்லை
அவரிடமும் விடை
ஒன்றும் இல்லை

சொலிடாரிட்டி
சோசலிசம் என்பார்
ஆனால் அவரிடமும்
அது ஒன்றும் இல்லை

எத்தனையோ
வேஷங்கள்
பாத்திரங்கள்
நூல் கொண்டு ஆடும்
பொம்மை போலே
நாளுக்கு ஒரு நாடகங்கள்

பேருக்காய் வாழ்ந்தான்
ஒருத்தன்
புகளுக்காய் வாழ்ந்தான்
ஒருத்தன்
பணத்துக்காய் வாழ்ந்தான்
ஒருத்தன்
பதவிக்காய் வாழ்ந்தான்
ஒருத்தன்

உண்மையாய் ஒருத்தன் வாழ்ந்தான்
உயிரையே எறிந்து சென்றான்
தன்னையே தமிழுக்காய் தந்தான்
அவன் தான் மனிதன் அவன் ஒரு வரலாறு.

பா.உதயன் ✍️

இதையும் படிங்க

துர்க்கையின் புதுமுகம் | நூல் விமர்சனம்

மாறும் சமூகங்கள் மாறும் வழிபாடுகள் இலங்கை யாழ்ப்பாணத்தில் உள்ள சிறிய கிராமமான தெல்லிப்பழையில், கடந்த நூற்றாண்டின் பிற்பாதியில் துர்க்கை...

கனவுகளும் கரைந்து போகும் | சிறுகதை | விமல் பரம்

அழகான பூந்தோட்டம். அதில் பல நிற பூக்கள். மஞ்சள், சிவப்பு, வெள்ளை என கொத்து கொத்தாய் பூத்திருக்க அதன் வாசனை எங்கும் பரவியிருந்தது....

தோழி | கவிதை | தமிழ்

கவிதையில் அடக்கமுடியாகவிதை நீநிறங்களில் நிறையாநிறம் உனதுகுணங்களில் நீமட்டும் வேறுபட்டவள்சிறுகுறை சொல்லதெரியாத சிறுமியேவயதானாலும் நட்பில் நாம்பால்யத்திலே வாழ்கிறோம்காமமில்லா நட்புக்குநாம் இலக்கணமானோம்இலக்கணபிழை நமக்கில்லையடிசிறு சண்டையோ பெரும்...

கவிதை | மக்கள் தீர்ப்பு | நகுலேசன்

மாண்புமிக்க எம் வரலாற்றைமாற்றி எழுதும்மகாவம்ச மன நோயாளர்நாணும் படியாய்ஒரு தீர்ப்பு எழுதுவோம்! எங்கள் தியாக வரலாற்றைமறுக்கும்எம் இன துரோகிகளும்தொலைய ஒரு...

ஊடல் | கவிதை | உமாபாரதி

என் கலிதீர்க்க வந்தவளேஎன் ஆசை மகளேஉன்னுடனான ஊடல்காமத்தில் சேர்ந்ததல்லஉதிரத்தில் உருவாகிஉணர்வாகிப்போனதுஇலை கொண்ட பனியல்லஇமை கொண்ட கண்ணதுமடிகொண்ட சுமைமனம் கொண்ட சுகமானது!!!

கவிதை | ஒரு கொரோனா நோயாளியின் வீடு | மனுஷ்ய புத்திரன்

வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட கொரோனா நோயாளி தன் வீடென தன் வீட்டில் எதையும் உணர்வதில்லை கையுறை அணிந்த கைகளால் தயங்கித் தயங்கி தொடுகிறான் கதவுகளையும் குழாய் திருகுகளையும் தனித்த கொடியில் காயும் தன் உடுப்புகளில் சொட்டும் ஈரத்தை உற்றுப்பார்க்கிறான் தனது அறையின் இருக்கையைத்தவிர எந்த இருக்கையிலும் அவன் மறந்தும் அமர்வதில்லை யாருமில்லாதபோது வீட்டின் வரவேற்பறையின் எதையும் தொட்டுவிடாமல்...

தொடர்புச் செய்திகள்

அமரர் ரவிராஜின் உருவச்சிலையை சுற்றி நடந்தது என்ன

யாழ்.சாவகச்சேரி பிரதேச செயலக முன்றலில் அமைந்துள்ள அமரர் ரவிராஜின் உருவச்சிலையை சுற்றி அலங்கரிங்கப்பட்டிருந்த பூச்சாடிகள் உடைத்துச் சேதமாக்கப்பட்டுள்ளன. இந்தச் சம்பவம் இன்று பிற்பகல் 5மணியளவில் இடம்பெற்றுள்ளதாக...

எம்.ஏ.சுமந்திரன் கட்சியிலிருந்து நீக்குங்கள்|மிதுலை

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வீழ்ச்சிக்கும், பிளவுக்கும் ஒட்டுமொத்த காரணமாக உள்ள எம்.ஏ.சுமந்திரன் கட்சியில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்று தமிழரசு கட்சியின் கொழும்பு மாவட்டத்தின் உப தலைவி மிதுலைச்செல்வி ஸ்ரீபற்மனாதன்...

கொரோனாவால் துறவியான செரினா வில்லியம்ஸ்.

பிரபல டென்னிஸ் வீராங்கனை செரினா வில்லியம்ஸ் கொரோனா பரவலில் இருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள 50-க்கும் மேற்பட்ட மாஸ்குகள் தேவைப்படும் என கூறியுள்ளார். அமெரிக்க டென்னிஸ்...

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

ஐக்கிய தேசிய கட்சிக்கு ஏற்பட்ட அவல நிலை |ரொபட் அன்டனி

விகிதாசார தேர்தல் முறையில் 1989 ஆம் ஆண்டு முதல் ஐக்கிய தேசிய கட்சி தேர்தல்களில் பெற்ற ஆசனங்கள்  தேர்தல் ஆண்டு        ஐ.தே.க. பெற்ற 

அம்பாறை கலையரசனுக்கு கூட்டமைப்பின் தேசிய பட்டியல் எம்பி பதவி!

கிழக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர்  தவராசா கலையரசன், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தேசியபட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக பிரேரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கிழக்கு...

திரண்டு சென்று வாக்களித்து சிதறிப் போன மக்கள் | நிலாந்தன்

தென்னிலங்கையில் தனிச்சிங்கள அலை ஒன்றைத் தோற்றுவித்து ராஜபக்சக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு தேவையான பலமான அடித்தளம் ஒன்றைப் பெற்றிருக்கிறார்கள். எனினும் அந்த மூன்றில் இரண்டு பெரும்பான்மையை முழுமையாக அடைவது என்றால்...

மேலும் பதிவுகள்

நுவரெலியாவில் ஜீவன் தொண்டமான் முதலிடத்தில்

நுவரெலியா மாவட்டத்தின் விருப்பு வாக்குகளின் அடிப்படையில் ஜீவன் தொண்டமான் முதலிடத்தில் உள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிட்ட அவர் மொத்தமாக 109,155 வாக்குகளை பெற்று...

விடுமுறை தரவில்லை என்றால் முறைப்பாடு வழங்கலாம் | தேர்தல்கள் ஆணைக்குழு

2020 நாடாளுமன்றத் தேர்தலில் 80-85 விகிதமான வாக்குப்பதிவு எதிர்பார்க்கப்படுகிறது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

திருகோணமலை மாவட்டம் தபால் மூல தேர்தல் முடிவுகள்!

திருகோணமலை மாவட்டம் தபால் மூல தேர்தல் முடிவுகள் வெளிவந்துள்ளன. இதன்படி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 6,767 வாக்குகளைப் பெற்றுள்ளது.ஐக்கிய மக்கள் சக்தி 3,884 வாக்குகளைப் பெற்றுள்ளது.இலங்கை தமிழரசுக் கட்சி 2,337 வாக்குகளைப் பெற்றுள்ளது.தேசிய மக்கள்...

பொதுத்தேர்தல் | வாக்குப்பெட்டிகளை நகர்த்தும் பணி ஆரம்பம்

பொதுத்தேர்தலுக்கான வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப்பெட்டிகளை எடுத்துச் செல்லும் பணிகள் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெறவுள்ளன. இதற்கமைய குறித்த பணிகள் இன்று காலை...

தேர்தலில் 80 சதவிதம் வாக்குப் பதிவாகும்| மஹிந்த நம்பிக்கை

2020 பொதுத் தேர்தலுக்கான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேர்தலில் சுமார் 80 சதவித வாக்குப்பதிவு...

பொதுத் தேர்தலில் கட்சிகள் பெற்றுக்கொண்ட ஆசனங்களின் முழு விபரம்

2020ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் 196 ஆசனங்கள் வாக்கெடுப்பு மூலம் தெரிவு செய்யப்பட்டதுடன், 29 போனஸ் ஆசனங்களும் வழங்கப்பட்டுள்ளன. அதன்...

பிந்திய செய்திகள்

அமரர் ரவிராஜின் உருவச்சிலையை சுற்றி நடந்தது என்ன

யாழ்.சாவகச்சேரி பிரதேச செயலக முன்றலில் அமைந்துள்ள அமரர் ரவிராஜின் உருவச்சிலையை சுற்றி அலங்கரிங்கப்பட்டிருந்த பூச்சாடிகள் உடைத்துச் சேதமாக்கப்பட்டுள்ளன. இந்தச் சம்பவம் இன்று பிற்பகல் 5மணியளவில் இடம்பெற்றுள்ளதாக...

எம்.ஏ.சுமந்திரன் கட்சியிலிருந்து நீக்குங்கள்|மிதுலை

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வீழ்ச்சிக்கும், பிளவுக்கும் ஒட்டுமொத்த காரணமாக உள்ள எம்.ஏ.சுமந்திரன் கட்சியில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்று தமிழரசு கட்சியின் கொழும்பு மாவட்டத்தின் உப தலைவி மிதுலைச்செல்வி ஸ்ரீபற்மனாதன்...

கொரோனாவால் துறவியான செரினா வில்லியம்ஸ்.

பிரபல டென்னிஸ் வீராங்கனை செரினா வில்லியம்ஸ் கொரோனா பரவலில் இருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள 50-க்கும் மேற்பட்ட மாஸ்குகள் தேவைப்படும் என கூறியுள்ளார். அமெரிக்க டென்னிஸ்...

நாட்டின் கொரோனா நிலவரம்

நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2842 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றில் இருந்து 2579 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சோதனை நமக்கு அளிக்கப்படும் பயிற்சி

‘‘தளர்ந்துப்போன கைகளைத் திடப்படுத்துங்கள்,தள்ளாடும் முழங்கால்களை உறுதிப்படுத்துங்கள்.’’புதியதோர் உடன்படிக்கையின் இணைப்பாளராகிய இயேசு கிறிஸ்துவின் முன்னிலையில் அவரது ஆட்டுக்குட்டிகளாய் நிற்கும் நமக்கு, பிரச்னைகள் மேகம் போல் திரண்டு வரும். சில நேரங்களில் பொய்சாட்சிகளும்...

ரஜினி படம் தாமதமாவதால் லோகேஷ் கனகராஜ் எடுத்த அதிரடி முடிவு

ரஜினியை வைத்து லோகேஷ் கனகராஜ் இயக்குவதாக இருந்த படம் தாமதமாவதால், அவர் அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளாராம்.

துயர் பகிர்வு