Tuesday, April 23, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம்இலக்கியச் சாரல் பிணமாக நடிப்பவர் | கார்த்திக்

பிணமாக நடிப்பவர் | கார்த்திக்

1 minutes read
Image may contain: 2 people

நாயகவயதோடு நாற்பதுகூடியும்
குணச்சித்திரமும் கனவென்றாலும்
படப்பிடிப்பில் பிணச்சித்திரம்
நிலைமாறும் ஓர்நாளென்று
நடிக்கிறார் உயிரைக்கொடுத்து

மௌனமே வசனமென்று
உடல்மொழிகள் உறைநிலையில்
செயலுக்கு வெட்டுக்குமிடையே
துக்கங்கள் சூழ்ந்தநிலை
தூக்கத்தில் ஆழ்ந்தநிலை

குவியலில் கூடுதலொன்றுக்காய்
பிணவறையில் இதுஇல்லைஎன்பதற்காய்
எண்கால்களின் தோள்களுக்காய்
சுமைகூடி வாழ்தலென்பது
சாகடிக்கப்படுதலுக்கும் சாவுக்குமிடையில்

நாடிக்கட்டு நெற்றிக்காசு
முந்தானைமறைப்பு மூக்குப்பஞ்சு
துயரமடைந்தோர் தாக்குதலுக்கும்
கலைந்திடாது ஒப்பனைகள்
வெற்றிக்கில்லை மாலைகளெப்போதும்

விழிமூடிக் கிடந்தாலும்
நெருங்கிவரும் சூழ்கருவியின்
நிழல்தரும் ஆழ்நினைவு
எடுத்தவை எல்லாமுமே
தப்பவேண்டும் கத்திரிக்கு

உத்தரவு வரும்வரை
அடக்கிடவே தும்மல்கள்
விழுங்கிடவே இருமல்கள்
மூச்சடக்கிக் கிடக்குமுடல்
மரணத்துக்குப் பழக்கப்படல்

திரைதாண்டி அரங்கத்துக்குள்
கிளம்பும்கேவல் வாய்ப்புகள்
விழும்கண்ணீர் விருதுகள்
பாத்திரத்தில் ராசியென்று
அழைப்பார்கள் அசைவற்றிருக்கவே

சித்திரவதையோடு நீளும்காட்சி
பெருந்தீனி கலைப்பசிக்கு
அடங்குமுயிர் ஆசைமுகம்
கைதட்டி காணும்போது
துன்பியல்கள் இன்பநிலை

கூட்டத்துக்குள் ஒருதலை
முழக்கங்களில் உயரும்கை
வண்ணங்களுக்குள் தெரியுமுடை
காய்ந்தபூக்களோடு புகைப்படத்திலென
காட்டுவதற்குள் கடக்கும்வேறாய்

தூங்கவைக்கவே தாலாட்டு
மாறிடாத சூழ்நிலையில்
மாரடிக்கும் தாய்க்குரல்கள்
ஒப்புச்சொல்லும் ஒப்பாரி
எழும்பச்சொல்லாத ஆரிரரோ.

கார்த்திக்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More