Saturday, April 20, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம்இலக்கியச் சாரல் அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் வாசிப்பு அனுபவப்பகிர்வு மெய்நிகரில்!

அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் வாசிப்பு அனுபவப்பகிர்வு மெய்நிகரில்!

2 minutes read

அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம், இலங்கை தமிழ் எழுத்தாளர்களின் நூல்களுக்கு பரிசளிக்கும் திட்டத்தினை கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தி வருகின்றது.

இத்திட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட போட்டியில் 2019 – 2020 ஆம் ஆண்டுகளில் வெளியாகி  தலா ஐம்பதினாயிரம் ரூபா பரிசுபெற்ற  நான்கு நூல்கள் பற்றிய வாசிப்பு அனுபவப்பகிர்வு நிகழ்ச்சி இம்மாதம் 25 ஆம் திகதி சனிக்கிழமை  மெய்நிகரில் நடைபெறும். 

எழுத்தாளர்  காப்பியக்கோ ஜின்னா ஷரிபுத்தீன்  எழுதிய   மைவண்ணன்  இராம காவியம் ( கவிதை ) நூல் பற்றிய வாசிப்பு அனுபவத்தை அவுஸ்திரேலியா மெல்பனில் வதியும் வாசகி  திருமதி விஜி இராமச்சந்திரனும், எழுத்தாளர்   கே. ஆர் .டேவிட்  எழுதிய  கே. ஆர். டேவிட் சிறுகதைகள் நூல் பற்றிய வாசிப்பு அனுபவத்தை அவுஸ்திரேலியா பிறிஸ்பேர்னில் வதியும் எழுத்தாளர் திருமதி தாமரைச்செல்வியும், எழுத்தாளர்  சீமான் பத்திநாதன் பர்ணாந்து எழுதிய   குஞ்சரம் ஊர்ந்தோர் ( நாவல் ) பற்றிய வாசிப்பு அனுபவத்தை கிளிநொச்சியில் வதியும் எழுத்தாளர் திரு. கருணாகரனும்,   எழுத்தாளர் எம். வாமதேவன்  எழுதிய   குன்றிலிருந்து கோட்டைக்கு ( கட்டுரை ) நூல் பற்றிய வாசிப்பு அனுபவத்தை கொழும்பிலிருந்து எழுத்தாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான திரு. மல்லியப்பு திலகரும் சமர்ப்பித்து உரையாற்றுவர். 

இந்த மெய்நிகர் நிகழ்வில் இணைந்துகொள்ளுமாறு கலை, இலக்கியவாதிகளும் வாசகர்களும் அழைக்கப்படுகின்றனர். 

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு :  திரு. முருகபூபதி 

நேரம்:            அவுஸ்திரேலியா : இரவு 7-00 மணி 

                    இலங்கை – இந்தியா: மாலை 2-30 மணி 

                             இங்கிலாந்து :   காலை 10 – 00 மணி 

                         Join Zoom Meeting
https://us02web.zoom.us/j/88435805663?pwd=OS9tNTh6MTVaWXFtOCtaRnpBNms0UT09

Meeting ID: 884 3580 5663
Passcode: 353292

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More