கவிதை | மக்கள் தீர்ப்பு | நகுலேசன்

மாண்புமிக்க எம் வரலாற்றை
மாற்றி எழுதும்
மகாவம்ச மன நோயாளர்
நாணும் படியாய்
ஒரு தீர்ப்பு எழுதுவோம்!

எங்கள் தியாக வரலாற்றை
மறுக்கும்
எம் இன துரோகிகளும்
தொலைய ஒரு தீர்ப்பு எழுதுவோம்!

எங்களை வைத்துப்பிழைக்கும்
எல்லோர்க்கும் முடிவு எழுதுவோம்!

யார்க்கும் அஞ்சாத
நீதியின் குரலான
நாயகரே நம் தலைவராவார்!

மக்கள் தீர்ப்பு
மகேசன் தீர்ப்பு என்போம்!
அறிவாய் தெளிவாய்
புதன் நல்ல தீர்ப்பெழுதுவோம்!
புள்ளடியோடு முடிந்துவிடாத
புத்துயிர்ப்பின்
வரலாற்றை மீளத்தொடருவோம்!

  • நகுலேசன்

ஆசிரியர்