தேத்தி விடு | கவிதை | ஆர் எஸ் கலா

வாடாத நெஞ்சம்
ஓடாகத் தேயும்
மாண்டாலும் கூட
உனது நாமம் கூறும்

உன்னைச் 
சேராத சொர்க்கம்
உமது 
கரங்களின் பக்கம்

தீண்டிடாத உன் 
விரல்களைக் கண்டு
வெவ்வேறு  வினாக்களோடு
மனசுக்குள்ளே தர்க்கம் 

இது வெள்ளாடு 
திண்ணாத முல்லை
உனக்காகவே மலர்ந்து
வளர்ந்திருக்கும் பிள்ளை

இவள்  எத்தனையோ 
ஆடவர் கண்கள் 
தீண்டிய வெண்ணை
ஆனாலும் கற்பு 
இழக்காப் பெண்மை

ஒவ்வொரு 
சொற்களையும் 
கவிதைகளாக நிறுத்தி
ஓயாமல் 
ஓலைச்சுவடில் கிறுக்கி
உனக்காகவே அனுப்பி 
விடுகின்றாள்  ஓர் காதல் தந்தி

கிழித்திடாமல் விரித்து
உதிராமல் படித்து
உதிரத்தில் பத்திரப் படுத்தி 
விரைந்து  தூது விட்டு விடு 
அவளது  ஏக்கங்களைத் தேத்தி

நன்றி : ஆர் எஸ் கலா | தமிழ் நண்பர்கள்

ஆசிரியர்