வலி | கவிதை | சாம்.சரவணன்

காயங்களின் வலி
உடல் வழி சென்று
விழி நீர் சுரக்கும்..
பிரிவின் வலி
உள்ளம் தோன்றி
விழி நீர் சுரக்கும்..
காயங்கள் தரும் வலியது
காயங்கள் ஆறும் வரை..
பிரிவுகள் தரும் வலியது
நினைவுகள் மறையும் வரை..
சில காயங்கள் தரும்
வடுவதென்றும் மறையா..
சில பிரிவுகள் தரும்
வலியதென்றும் மறையா..

நன்றி : சாம்.சரவணன் | எழுத்து.காம்

ஆசிரியர்