கவிதை | என் கறுப்பி | ல.ச.பா

என் கருப்பி:

உலகின் பேரழகும்
உன் கருமையின்
ஒளிச்சிதறலே
என் கருப்பி!

சேவலை எழுப்பி
கூவ சொல்கிறாய்
சூரியன் உதிக்கவே!

கரடுமுரடான குரலால்
வவ் வவ் என
எனை அழைக்கும்
உன் வார்த்தையில்லா
இசை,
குளிர்ந்த காற்று
கன்னங்களை முத்தியது
போல நினைவுகளை
அசைப்போடுகிறது!

யாம்
அதுவாகவோ
இதுவாகவோ
எதுவாகவோ
ஆயினும்
உன்னைப் போல
மனித நேயனாய்
மாறியதும்
பிரபஞ்சத்தின் விருப்பமே!

யாவருக்கும் துணையாய்
யாம் நிற்க.
யமக்கு முன்
வாசற்ப் படியில்
நிற்கும்
என் காவல் அதிகாரியும்
நீயே!

யம்
சோர்வான காலங்களில்
தோழனாய்
தலையால் மோதி
மனவலியை மீதியின்றி
குறைத்தருளும்
என் கால பைரவியும்
நீயே!

கருப்பி
என அழைத்ததும்
எங்கிருந்தோ
நதியை போல
ஓடி வந்து
என்னை அள்ளி அணைத்து
என் மனதை நீராட
வைக்கிறது உனது கால்கள்!

கால்களை நக்கியே
மன அழுக்குகளை
சுத்தம் செய்யும்
என் தூய்மை
பணியாளரும் நீயே!

என் இதயத்தை
அவ்வபோது
வருடி விடும்
உனது கைகளுக்கு
தீராக் கடனாளியாகிறேன்!

இறையே
உனதுருவாய்
என்னோடு வாழ்வதாய்
உணர்கிறேன்
இந்தொரு அற்புதமான
தருணத்தில்!!

ல.ச.பா

ஆசிரியர்