சாயம் வெழுக்கும்! | நகுலேசன்

வெள்ளை மதப்போர்வை
உள் உறையும் அழுக்கு
தெள்ளத் தெளிவாய் வெளிக்கும்

’இன- மொழி கட்சிகள்
தடைவேண்டும்’ பிரசங்க
உரையிடை சாயம் வெழுக்கும்

பேரினவாத பேய்களை
ஆராதிக்கும் ’ஆண்டகை’யால்
ஆண்டவரே! உன் புனிதமும்………!

-நகுலேசன்

ஆசிரியர்