Wednesday, April 24, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம் கவிதை | கார்த்திகை 2020 | நிலாந்தன்

கவிதை | கார்த்திகை 2020 | நிலாந்தன்

1 minutes read

உன்னுடைய தாய் இப்பொழுதும் மடிப்பிச்சை எடுக்கிறாள்உன்னுடைய சகோதரி இப்பொழுது முது கன்னி ஆகிவிட்டாள்உன்னுடைய நண்பன் யாரிடம் சரணடைந்தானோஅவனிடமே வேலை செய்கிறான்விதைக்கப்பட்ட யாரும் முளைக்கக் கூடாது என்று

ஒவ்வொரு நாளும்
கடவுளைப் பிரார்த்திக்கிறவன்
உனது மக்களின் பிரதிநிதியாகி விட்டான்

நிறைவேறாத கனவு நீ
நீண்ட கடல் எல்லைகளின் சொந்தக்காரன் நீ
எல்லாப் போகங்களிலும் விற்கப்படும் நினைவும் நீ
எல்லா நீதிமன்றங்களிலும்
அவமதிக்கப்படுகிறாய்

ஈமத்தாழி ஒன்றுதான்
உனக்கிப்பொழுது பாதுகாப்பான இடம்
இல்லாத நடுகல்லின் மீது
சிந்தும்
சூடான துளிக் கண்ணீரில்
இளைப்பாறு
பீட்சாவுக்காக யாருமிங்கே போராடவில்லை என்பதை
உனது மக்கள் நிரூபிக்கட்டும்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More