அந்நிய மோகத்தால் பண்டைத் தமிழர்கள்
அன்று பேணிய தமிழர் பண்பாடு
அழிந்தே போனாலும் நினைவுகள் பசுமையானது
ஆடிப்பாடி தெருவினிலே சின்னஞ்சிறுவர்கள் விளையாட
ஆலமர நிழலில் பெரியவர்கள் உரையாட
ஆசானை மதித்தே சாற்றினோம் பண்பாட்டை
இனிய தமிழினை கலப்பின்றி பேசி
இரவுப் பொழுதினிலே நிலவினிலே சோறுண்டு
இயற்கையை இனிதாக இரசித்தே வாழந்தோம்
ஈதலும் அறமாம் ஒளவை சொன்னாளே
ஈரநெஞ்சுடன் அதனை செய்து காட்டினோம்
ஈன்றவரை மதித்து ஆசியும் பெற்றோம்
உற்சாகத்துடன் திருவிழா நிகழ்வுகளில் கலந்து
உணவுகளை பகிர்ந்து உண்ட நாட்களும்
உன்னதமான அன்றைய கால நினைவுகள்
ஊரில் சேலையும் வேட்டியும் கட்டி
ஊணினை அன்போடு வந்தவர்க்கு உபசரித்து
ஊரார் அனைவரையும் உற்றவராக எண்ணினோம்
எங்கள் பாட்டியிடம் கதைகள் கேட்டு
எட்டு புள்ளி கோலம் போட்டு
எளிமையாக குடிசை வீட்டில் வாழ்ந்தோம்
ஏர் எடுத்து உழவு செய்து
ஏழ்மையின்றி வாழ விவசாயம் செய்தோம்
ஏற்றிய குப்பி விளக்கில் படித்தோம்
ஐக்கியமாய் பழகும் உறவுகளாய் இருந்து
ஒவ்வொரு நாளும் ஒழுக்கமுடன் வாழ்ந்து
ஒன்றுபட்டோம் களிப்படைந்தோம்!
ஓய்வ நேரத்தில் பத்திரிகை வாசித்து
ஓடியற்கூழும் இடித்த அரிசிமா பிட்டும்
ஓளதசியமும் பருகி பழங்களை சுவைத்திட்டோம
நவீன உலகில் இன்று நாமோ
நவநாகரிக மோகத்தால் பேணிய பாரம்பரியங்களை
தொலைத்துவிட்டு மண்ணுக்குள் அகழ்விலே தேடுகிறோம்.
ஜெனனி மோகனதாஷ்
உருத்திரபுரம்
கிளிநொச்சி
அரும்பதம் ஔதசியம் – பால்