March 26, 2023 9:28 am

வாழ்க்கைப் படகு | கவிதை | பொன் குலேந்திரன்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

திருமணம்  என்ற இருமனங்கள் சேர்ந்த,  

கரையில் இருந்து  உன் வாழ்கை பயணத்தை,

குடும்பம் என்ற  படகில்,

 துணிவுடனும் தன்னம்பிக்கையுடனும்  ஆரம்பி.

உன்னுடன் கூடவே துடுப்பெடுத்து,

பயணிக்க  பாசமுள்ள மனைவி.

அக்கரை போய் சேரும் மட்டும்,

துணைக்கு உன் பிள்ளைகள் இருப்பர் .

பிரச்சனைகள்  என்ற அலைகள் உன்னை  எதிர்க்கும்.

குடும்ப  ஒற்றுமை என்ற போர்வையுடன் ,

எவை  வந்தாலும் எதிர்த்து நின்று சமாளி..

சூரிய கதிர்கள் போல் சூடாகும்,

உன் மனதில்  கோபத்தை தவிர்த்து பயணி.

பிறர்  செய்யும் சூழ்சிகள்  என்ற சுழிவுகளை

பயமின்றி கும்பத்தோடு எதிர் கொள்..

புயல்கள்  பல  வந்தாலும்,

பேரலைகளை எதிர் கொண்டாலும்,

பாசமுள்ள   குடும்பம் என்ற படகில.

பேராபத்தை  தவிர்த்து பயணி.

எதிரிகள் என்ற  சுறாமீன்கள் தாக்குதல்களை,

பயமின்றி வீரத்துடன் எதிர்கோள்.

 போகும் பயணத்தில் பல படகுகளை

சந்தித்து அவர்கள் அனுபவத்தை  உள்வாங்கு.      

தூரத்தில் தெரியும் கலங்கரை விளக்கம்

உண்மையே  வாழ்வில் உனக்கு வழிக்காட்டி

– பொன் குலேந்திரன் | கனடா

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்