சிரிப்புச் சொக்கா | த. செல்வா

சொக்காக்கள் பற்றிச் சொல்லிச் சிரிக்க அவை இருப்பதில்லை இப்போ

சிரிக்காத பொழுதுகளில் சிந்தனையைத் துலாவி கவிதை சுட்டுத் தின்ன முயலுகையில்
முறாய்ப்பின் முழு உருவம் என்கிறான் சமூகப் பிராணி

சிரிப்பது ஒரு கலை
சிரிப்பது ஒரு அலை
சிரிப்பது ஒரு பரீட்சை
சிரிப்பது ஒரு சித்தி
சிரிப்பது ஒரு கடவுள்

என சிரிப்புப் பற்றி விரித்துச் செல்லலாம் வானமாய்

அப்பா சொக்கா வாங்கித் தந்தார்
ஆண்டவன் ஆத்மா வாங்கித் தந்தார்
ஆரோ ஆறுதல் அள்ளித் தந்தான்
அவளோ அன்பைக் கிள்ளித் தந்தாள்
காலமோ கேப்பாப் புலுவைத் தந்தான்
என்கையில்

குழந்தையாகிச் சொக்கா தின்கிறான் மானுடன்

வீதியைக் கடக்கையில்
விமானத்தில் ஏறுகையில்
கொரோனா ஊசி ஏற்றுகையில்
சொத்தைப் பிரிக்கையில்
திருமணத்தில் இணைகையில்
சிரித்து விடுங்கள்

சிரிப்பின் மறு உருவம் கறுப்பு என்பதால்!
சிரிப்பும் ஒரு சொக்கா என்பதால்!

த.செல்வா
இரவு10.10
ஆனந்த புரம்

ஆசிரியர்