2
பகடைக்காய்களை உருட்டுகிறான்
பெயரில் மட்டுமே அறம் உள்ளவன்
திரெளபதிகள்
தலைவிரி கோலமாய்
கண்ணீரும் கம்பலையாய்
ஆடைகள் உரியப்படுகிறார்கள்
கூத்தை கைதட்டி ரசிக்கும்
ஜனங்களின் மனதுள்
சப்புக் கொட்டி அலைகின்றன
காம ரோக மிருகங்கள்
பெண்ணின் அங்க லாவண்ய வடிவமைப்புகளை விவாதித்தபடி.
வசந்ததீபன்