May 31, 2023 4:48 pm

தலைமுடி அதிகம் உதிர்வைத் தடுக்க டிப்ஸ்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

தலைமுடி அதிகம் உதிர்வைத் தடுக்க எவ்வித பக்கவிளைவுகளும் இல்லாத ஏராளமான இயற்கை வழிகள் உள்ளது.

அதற்கு விளக்கெண்ணெய் மற்றும் நல்லெண்ணெய் ஆகியவற்றை சில பொருட்களுடன் கலந்து எப்படி பயன்படுத்த வேண்டும் என பார்ப்போம்.

முடி உதிர்வை தடுக்கும் எண்ணெய் தயாரிப்பது எப்படி?
ஒரு பௌலில் 2 டீஸ்பூன் ஆலிவ் ஆயில் மற்றும் தேங்காய் எண்ணெய்யை, மைக்ரோ ஓவனில் சில நொடிகள் வைத்த பின் அதில் 1 டீஸ்பூன் நல்லெண்ணெய் மற்றும் விளக்கெண்ணெய் கலந்துக் கொள்ள வேண்டும்.

பயன்படுத்தும் முறை
முதலில் தலைமுடியை நீரில் நனைத்து கொண்ட பின் தயாரித்து வைத்திருந்த எண்ணெய்யை வெதுவெதுப்பான நிலையில் தலைமுடியில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும்.

நன்கு மசாஜ் செய்து 5-10 நிமிடம் கழித்து, வெதுவெதுப்பான நீரில் நனைத்த துணியை தலையில் சுற்றி 1-2 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.

இந்த முறையை இரவில் படுக்கும் முன் செய்து, இரவு முழுவதும் ஊற வைத்து பின் மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலச வேண்டும்.

குறிப்பு
விளக்கெண்ணெய் சிலருக்கு அழற்சியை உண்டாக்கும். எனவே இந்த எண்ணெயைப் பயன்படுத்தும் முன் தலையின் சிறிது பகுதியில் தடவி சோதித்துப் பார்த்துக் கொள்ள வேண்டும்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்