இந்த முத்திரையை ஒரு மண்டலம் பயிற்சி செய்தால், உடலில் நல்ல முன்னேற்றத்தை நிச்சயம் காணலாம். இந்த முத்திரை செய்முறையை பார்க்கலாம்…
விரிப்பில் நிமிர்ந்து அமரவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும்.கண்களை மூடி இயல்பாக நடக்கும் மூச்சை பத்து வினாடிகள் கவனிக்கவும். பின் கட்டை விரல் தவிர மற்ற விரல்களை மடக்கி இரண்டு கை விரல்களின் நகங்கள் ஒன்றையொன்று தொடும்படி படத்தில் உள்ளது போல் வைக்கவும். கட்டை விரல் இரண்டும் படத்தில் உள்ளது போல் சேர்ந்திருக்கட்டும்.
சாதாரண மூச்சில் இரண்டு நிமிடம் முதல் ஐந்து நிமிடங்கள் இருக்கவும். காலை மதியம் மாலை மூன்று வேளையும் செய்யவும். அவசர படாமல் நிதானமாக ஐந்து நிமிடங்கள் செய்யவும். நேரம் கிடைக்கும் பொழுது இந்த முத்திரையை கை விரல் நகங்களை ஒன்றையொன்று உராயும் படி லேசாக பத்து முறைகள் தேய்க்கவும். ஒரு நாளில் மூன்று முறைகள் செய்யவும்.
இந்த முத்திரை செய்து வந்தால் முடி உதிர்வது தவிர்க்கப்படுவது மட்டுமல்ல, முடி கருப்பாகவும், பளபளப்புடனும் வளரும். நுரையீரல் நன்றாக இயங்கும். ஆஸ்துமா வரவே வராது. மன இறுக்கம் நீங்கும். சளி, மூக்கடைப்பு சரியாகும். எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கலாம். உடற்சூட்டினால் ஏற்படும் வயிற்று வலி, ஒற்றைத் தலைவலி நீங்கும். உடலில் பஞ்சபூதத் தன்மை சமமாக இயங்கும்.
இந்த முத்திரையை ஒரு மண்டலம் பயிற்சி செய்தால், உடலில் நல்ல முன்னேற்றத்தை நிச்சயம் காணலாம்.
நன்றி | மாலை மலர்