புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் வெள்ள அனர்த்தத்தில் சிக்கித்தவிக்கும் தமிழக உறவுகளுக்கு உதவிக்கரம் கொடுப்போம் வாரீர்! | பிரித்தானிய தமிழர் பேரவைவெள்ள அனர்த்தத்தில் சிக்கித்தவிக்கும் தமிழக உறவுகளுக்கு உதவிக்கரம் கொடுப்போம் வாரீர்! | பிரித்தானிய தமிழர் பேரவை

வெள்ள அனர்த்தத்தில் சிக்கித்தவிக்கும் தமிழக உறவுகளுக்கு உதவிக்கரம் கொடுப்போம் வாரீர்! | பிரித்தானிய தமிழர் பேரவைவெள்ள அனர்த்தத்தில் சிக்கித்தவிக்கும் தமிழக உறவுகளுக்கு உதவிக்கரம் கொடுப்போம் வாரீர்! | பிரித்தானிய தமிழர் பேரவை

1 minutes read

காலத்தினால் செய்த நன்றி சிறிது எனினும்

ஞாலத்தின் மாணப் பெரிது….

எதிர்பாராத இயற்கை அனர்த்தத்திற்குள்ளாகி தம் வாழ்விடங்களையும், வாழ்வாதாரங்களையும் இழந்து அடிப்படை வசதிகள் ஏதும் இன்றி அல்லலுரும் எம் தமிழக சொந்தங்களுக்கு உதவ வேண்டிய தார்மீக கடமை எமக்குள்ளது. ஈழத்தில் எம்மினம் இனவாதத்தால் அழிக்கப்பட்டுக் கொண்டிருந்த காலத்தில் எமக்கெதிராக நடக்கும் அநீதிகளை கண்டு பொங்கியெழுந்து போராட்டம் செய்து தம் உயிர்களைக்கூட ஆகுதியாக்கிய தொப்புள் கொடி உறவுகள் இன்று துன்பத்தில் ஆழ்ந்திருக்கின்றார்கள், அன்றுதொட்டு இன்று வரை எம்மோடு தோளோடு தோள் கொடுத்து போராடிவரும் அவர்களுக்கு ஒரு துயர் எனில் நாம் தானே உதவவேண்டும்.

எனவே நாடுகள் கடந்தும், எல்லைகள் கடந்தும், இனங்கள் கடந்தும் மனிதநேயத்தோடு எம் மக்களுக்கு உதவ ஒன்றிணைவோம். தமிழகத்திலும், ஈழத்திலும் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டோர்களுக்கு உதவும் செயற்திட்டமொன்றை பிரித்தானிய தமிழர் பேரவை ஆரம்பித்துள்ளது. பிரித்தானிய வாழ் மக்களும், புலம்பெயர்ந்து உலகமெங்கும் வாழும் எம் சொந்தங்களும் இப் புனித பணிக்கு தம்மாலான உதவிகளை செய்து எம் மக்களின் துயர் துடைக்க ஒன்றிணையுமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கின்றோம்.

அத்துடன் பொதுஅமைப்புக்கள், ஆலயங்கள், தொண்டு நிறுவனங்கள், பாடசாலைகள், விளையாட்டுக் கழகங்கள் போன்றவையும் தங்களின் மேலான பங்களிப்பை வழங்கி எம் இனத்தின் துயர் போக்கிட கரம் சேர்க்குமாறும் பிரித்தானிய தமிழர் பேரவை அழைக்கிறது. பிரித்தானியாவிலுள்ள அனைத்து பொது அமைப்புகளும் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த மனிதாபிமானத் தொண்டு நடவடிக்கையில் ஒன்றிணைந்து கொள்ளுமாறு அன்புடன் அழைப்பு விடுக்கின்றோம்.

சேகரிக்கப்படும் நிதி உதவிகள் வெளிப்படைத் தன்மையுடன் கையாளப்படுவதுடன் தமிழக அரசினூடாக தமிழக மக்களுக்குக் கையளிக்கப்படும். நிதி உள்ளவர்கள் நிதி வழங்கலாம், சரீர உதவி வழங்க விரும்புவோர் எம்முடன் தொடர்பு கொண்டு தொண்டாற்றலாம்.

மேலதிக விபரங்கள் விரைவில் ஊடகங்கள் வாயிலாக அறியத் தரப்படும்.

தொடர்புகளுக்கு: 02088080465, 07753351773, 07956919511, 07814486074, 07404493745

Bank details: Santander Bank
Account name: Tamilsforum UK Ltd
Sort code: 09 01 28
Account number: 20000469

Paypal details: https:https://www.paypal.com/cgi-bin/webscr…

நன்றே செய்வோம்! அதை இன்றே செய்வோம்!

பிரித்தானிய தமிழர் பேரவை


media@tamilsforum.com

frd

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More