ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு ஞாயிற்றுக்கிழமை 22ம் திகதி வவுனியாவில் நடைபெற்றது.
கட்சியின் தலைவரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும், கட்சி செயலாளர், ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள், வடக்கு மாகாணசபை உறுப்பினர்கள், வெளிநாட்டுக் கிளைகளின் பிரதிநிதிகள் மற்றும் ஒவ்வொரு மாவட்டங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிப் பிரதிநிதிகள் இம்மாநாட்டில் கலந்து கொண்டனர்.
மேற்படி மகாநாட்டிற்கு 12 நாடுகளிலிருந்து 18 பிரதிநிதிகளும், வடக்கு கிழக்கின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் என பலர் கலந்துகொண்டிருந்தார்கள்.
இதனைத் தொடர்ந்து மாலை 7மணியளவில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றும் இடம்பெற்றது.