June 7, 2023 6:46 am

அமெரிக்காவுடனான அணுகுமுறையில் மாற்றமில்லை – சீனா

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
அமெரிக்காவுடன் அணுகுமுறையில் மாற்றமில்லை

அமெரிக்காவுடன் ஆரோக்கியமான நல்லுறைவை தொடரும் சீனாவின் அணுகுமுறையில் மாற்றமில்லை என்று அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் சின் காங் (Qin Gang) தெரிவித்துள்ளார்.

இவ்வாறான ஒரு நிலையில், சீனாவைக் கட்டுப்படுத்தி, ஒடுக்க முயலும் எண்ணத்தை அமெரிக்கா கைவிடும் என்று அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

அமெரிக்காவுடனான தற்போதைய சிக்கல்களைக் களைந்து இருதரப்பு உறவுகளை மேம்படுத்த இரண்டு தரப்பும் முயற்சி எடுக்கும் என்றுஅவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், அமெரிக்க நிறுவனங்கள் உள்ளிட்ட உலக நிறுவனங்களுக்குச், சீனா மேலும் சிறந்த வர்த்தகச் சுற்றுச்சூழலை உருவாக்கித் தரும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

சீனாவின் வருடாந்த மேம்பாட்டு மாநாட்டில் உரையாற்றுகையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த உச்சி மாநாட்டில் உலகளாவிய பொருளியல் விவகாரங்களில் கவனம் செலுத்தப்படுகின்றது.

பெய்ச்சிங்கில் 3 நாட்களுக்குத் இடம்பெறும் இந்த மாநாட்டில் உலகின் பல பகுதிகளிலிருந்து நூற்றுக் கணக்கான வர்த்தக அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்