June 2, 2023 11:51 am

காலை இழந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் – தப்பியோடிய கார் சாரதி

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

மேற்கு இலண்டனில் மெர்சிடிஸ் கார் மோதியதில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் தனது காலை இழந்துள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை இரவு 7.10 மணியளவில் ஈலிங், கன்னர்ஸ்பரி லேனில் நடந்த இந்த விபத்து சம்பவத்தைத் தொடர்ந்து கார் சாரதி வாகனத்தை கைவிட்டு ஓடினார்.

45 வயதுடைய மோட்டார் சைக்கிள் ஓட்டுநர், பலத்த காயமடைந்த நிலையில், அவரது இடது கால் முழங்காலுக்கு கீழே துண்டிக்கப்பட்டது.

விபத்துடன் தொடர்புடைய கார், சம்பவ இடத்தில் நிற்கவில்லை, ஆனால் சிறிது தூரத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.

அதன் சாரதி லில்லியன் அவென்யூவில் இரண்டு வீடுகளுக்கு இடையே காணப்படும் ஒரு சந்து வழியாக ஓடிய நிலையில், காவல்துறை அதிகாரிகள் சாரதியை தேடி வருகின்றனர்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்