ஒரு வருடத்துக்கும் மேலாக நீடித்து வரும் உக்ரைன் – ரஷியா இடையேயான போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.
போர் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில் உக்ரைனின் கார்சன் மாகாணத்தில் உள்ள கக்ஹொவ்ஸ்கா என்ற அணையில் நேற்று திடீரென உடைப்பு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக டினிப்ரா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உக்ரைனின் கார்சன் நகரில் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
உடைப்பு ஏற்பட்ட அணை ரஷியாவின் கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைனின் பகுதியில் உள்ளது. இதனால், இந்த அணையை உக்ரைன் தகர்த்ததாக ரஷியா குற்றஞ்சாட்டியுள்ளது. அதேவேளை, அணையை ரஷியா தகர்த்ததாக உக்ரைன் குற்றஞ்சாட்டி வருகிறது.
உக்ரைனில் உள்ள அணை தகர்க்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அணையை தகர்த்தது யார் என்பது குறித்த முழுமையான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.