October 4, 2023 4:27 am

ஆசிரியர்களை “சார்” அல்லது “மிஸ்” என்று அழைக்க மாணவர்களுக்கு தடை

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
சார் அல்லது மிஸ் என்று அழைக்க தடை

இலண்டனில் உள்ள உயர்மட்ட அரச பாடசாலையில், ஆசிரியர்களை அழைக்க “சார்” அல்லது “மிஸ்” என்ற தலைப்புகளைப் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Harris Westminster Sixth Form and Harris Clapham Sixth Form- இன் நிர்வாக அதிபர் ஜேம்ஸ் ஹேண்ட்ஸ்கோம்ப், “கலாசார பெண் வெறுப்பை” தவிர்க்க பாடசாலை மாணவர்கள் ஆசிரியர்களை அவர்களின் பெயர்களால் அழைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

அத்துடன், இந்த முடிவு பாடசாலையின் “சிறந்த மற்றும் சமமான உலகத்திற்கான தொடர்ச்சியான அர்ப்பணிப்பை காட்டுகிறது” என தனது ட்விட்டர் கணக்கில் ஜேம்ஸ் ஹேண்ட்ஸ்கோம்ப் பதிவொன்றை இட்டுள்ளார்.

 

“சார்” என்ற சொல் சக்திவாய்ந்த ஆண்களுடன் தொடர்புடையது என்று கூறிய அவர், அதே நேரத்தில் “மிஸ்” என்பது “நீங்கள் ஒரு சிறிய பெண்ணை அல்லது கடை உதவியாளரை அழைக்கவும் பயன்படுத்துக்கின்றீர்கள்” என அவர் சுட்டிக்காட்டினார்.

இவ்வாறு அழைப்பதால் “பெண்களைக் குறைக்கும் உலகின் பார்வைக்கு உணவளிக்கிறார்கள்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து மேலும் கருத்து வெளியிட்ட ஜேம்ஸ் ஹேண்ட்ஸ்கோம்ப் “இது வெளிப்படையாகத் தவறு, ஆனால் யாருடைய தவறும் இல்லை (குறிப்பாக மாணவர்கள் அல்ல, இரண்டு சொற்களையும் அவர்கள் சமமான மரியாதையாகப் பயன்படுத்துவதாக நான் நினைக்கிறேன்) மற்றும் மாற்றுவது கடினம். நாங்கள் எப்படி செல்வோம் என்று பார்ப்போம்.” என்றார்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்