April 2, 2023 3:51 am

ஞாயிறு 14/07/2013 : வடமாகாணத்தில் முதல்வர் பதவியைப் பகிர்ந்து கொள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முடிவு!ஞாயிறு 14/07/2013 : வடமாகாணத்தில் முதல்வர் பதவியைப் பகிர்ந்து கொள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முடிவு!

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

வீரகேசரி:

ஆசிரியரின் பேனாவிலிருந்து:

தமிழரின் இனப் பிரச்சனைக்கான தீர்வு விடயத்தில் ஆணைக்குழுக்கள், பேச்சுவார்த்தைகள், சர்வகட்சி மகாநாடுகள் போன்றன காலத்துக்குக் காலம் முகிழ்கின்றன. அவற்றின் முடிவுகள் யாவும் கிடப்பில் போடப்பட்டு பின் அவை புதிதாக உருவாகின்றன. இவ்வளவு வருடங்களாக எட்டப்பட்ட முடிவுகள் எவையுமே செயற்பாட்டிற்கு வரவில்லை. தற்போது ஆகக்குறைந்த தீர்வாக இருக்கின்ற 13வது திருத்தத்தையும் தீர்மானிக்கின்ற பொறுப்பு பாராளுமன்றத் தெரிவுக்குழுவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. உரிய முறையில் தெரிவுக்குழு இவ் விடயத்தைக் கையாளாவிட்டால் தமிழர்களின் நம்பிக்கையீனம் மேலும் அதிகரிக்கும்

வடமாகாணத்தில் முதல்வர் பதவியைப் பகிர்ந்து கொள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முடிவு

வடமாகாண சபைக்கான முதலமைச்சர் யாரெனத் தேர்வுசெய்வதில் தற்போதுவரை இழுபறி நிலையிலேயே தமிழத் தேசியக் கூட்டமைப்பு உள்ளது. அவ் இழுபறிநிலையை இல்லாதொழிப்பதற்காக முதல் இரண்டரை வருடங்களை விக்னேஸ்வரனுக்கும் பின் இரண்டரை வருடங்களை மாவைக்கும் முதலமைச்சர் பதவியை பகிர்வோம் எனும் பரிந்துரையும் முன்வைக்கப்பட்டுள்ளதாம்.

வடமாகாணசபைத் தேர்தலுக்கு எதிராக இடைக்காலத் தடை

வடமாகாண சபைத் தேர்தல் செம்டெம்பர் இறுதிப்பகுதியில் நடைபெறவுள்ள நிலையில் அதனை தடுத்து நிறுத்தும் இடைக்கால உத்தரவைப் பெற சுமார் 10ற்கும் மேற்பட்ட சிங்கள அமைப்புக்களும் கட்சிகளும் முயற்சி செய்து வருகின்றன.

உடப்பில் தமிழ் வர்த்தகர் கடத்தப்பட்டார்

புத்தளம், உடப்பு ஆண்டிமுனையைச் சேர்ந்த தமிழ் வர்த்தகரான சொக்கலிங்கம் சேதுரூபன் கடத்தப்பட்டுள்ளதாக காவல்துறையில் முறையிடப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை இரவு வர்த்தக நடவடிக்கைகளை முடித்துக் கொண்டு வீட்டுக்குத் திரும்பும் வழியிலேயே அவரைச் சிவப்பு நிறக் காரில் வந்தவர்கள் கடத்திச் சென்றுள்ளனர்.

இலங்கையில் மோசமான முறையில் மனித உரிமை மீறல்

பிரித்தானியக் குடிவரவு நடைமுறை அறிக்கையொன்று இலங்கையில் போர் முடிவடைந்து நான்கு ஆண்டுகள் முடிவுற்ற போதும் மனித உரிமை மீறல்களின் நிலை படுமோசமாக இருப்பதாக குற்றஞ்சாட்டியுள்ளது.

ஆஸி படகு விபத்தில் குழந்தை பலி

சட்டவிரோதக் குடியேற்றவாசிகளுடன் ஆஸி சென்ற படகொன்று விபத்துக்குள்ளானதில் 97பேர் வரை மீட்கப்பட்டுள்ளதாக தெரிகின்றது. அவுஸ்திரேலியாவிற்கும் இந்தோனேசியாவிற்கும் இடையில் கடலில் இப்படகு மூழ்கியுள்ளது.

கொட்லோஜ் தோட்டப் பெண் கொலைகணவர் விசமருந்திய நிலையில் மீட்பு

கொட்லொஸ் தோட்டப் பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. இரண்டு பிள்ளைகளின் தாயான இவரை அவரது கணவனே கொலை செய்திருக்க வேண்டும் என்றும் குடும்பத் தகராறே இதற்குக் காரணமாக இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

புத்தகாயாவுக்குக் கண்டனம்! மாரியம்மனுக்கு மௌனம் ஏன்?

புத்தகாயாவில் நடைபெற்ற குண்டு வெடிப்பைக் கண்டனம் செய்த மலையகத் தலைமைகள் கொழும்பிலிலருந்து மாரி அம்மன் கோவில் அகற்றப்பட்டமையின் போது மௌனம் ஆக இருந்தது ஏன் என இலங்கைத் தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் பொதுச் செயலாளர் சதாசிவம் கேள்வி எழுப்பியுள்ளார்.

சுடர்ஒளி:

ஆசிரியரின் பேனாவிலிருந்து:

முதலமைச்சர் வேட்பாளராக யாரை நியமிப்பது என்பதில் இழுபறியைச் சந்திக்கும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தமிழருக்காகக் களங்கள் பல கண்ட சேனாதிபதியையே நியமிக்கவேண்டும். அதைவிடுத்து புலிச்சாயம் இல்லாத ஒருவரை நியமித்து உலக நாடுகளுடன் தொடர்புகளை சிறப்பாக பேண வேண்டும் என்பது வெறும் கனவே. இந் நியமனத்தின் ஊடாக தமிழர்களைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டுமோ இல்லையோ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டும் அந்த அமைப்பு.

கூட்டமைப்புக்குப் புதிய தலைமை?

வடமாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளர் இழுபறியால் கட்சித் தலைமையை மாற்றுவோம் என தமிழரசுக் கட்சியினர் குரலெழுப்பியுள்ளனர். மாவையை முதலமைச்சர் வேட்பாளராகக் களமிறக்காவிட்டால் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுவை உடனடியாகக் கூட்ட வேண்டும் என அவர்கள் தெரிவித்ததுடன், அவ்வாறு கூட்டி கட்சித் தலைமையை மாற்றும் முடிவைத் தாம் எடுக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

கஞ்சாவுடன் கைதானார் பிக்கு

கஞ்சாக் கடத்தலில் ஈடுபட்ட பிக்கு ஒருவரைக் காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர். கதிர்காமத்திலிருந்து மாத்தறைக்கு இவர் கஞ்சாக் கடத்தலில் ஈடுபடுவதை ஒற்றன் மூலம் அறிந்து கொண்ட காவல்துறையினர் கடத்தலில் ஈடுபட்ட போது கையும் களவுமாக அவரைக் கைது செய்துள்ளனர்.

பிரிவினை வாதத்தை எதிர்க்கும் சத்தியக் கடதாசி கட்டாயம்தேர்தல் ஆணையாளர்.

மாகாணசபைத் தேர்தலின் வேட்பாளர்கள் கட்டாயமாக பிரிவினை வாதத்தை எதிர்ப்போம் என்ற சத்தியக் கடதாசியை சமர்ப்பிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

வடக்கின் தேர்தலில் கே.பிதமிழினி அவுட்

வடக்கில் தனித்துப் போட்டியிடவுள்ள சுதந்திரக் கட்சியின் பட்டியலில் கே.பியும் தமிழினியும் சேர்க்கப்படவில்லை. தயா மாஸ்டருக்கு வாய்ப்பிருக்கும் போல் தெரிகின்றது.

யாழில் காவல்துறை காவலரண்கள் அதிகரிப்பு:

தேர்தலை முன்னிட்டு யாழில் காவல்துறை காவலரண்கள் அதிகரிக்கப்படவுள்ளதாக பிரதேச காவல்துறை அத்தியட்சகர் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்புக் காரணங்களால் கேரளாவைக் கைவிட்ட பஷில்

இந்தியாவிற்குப் போன பஷில் பாதுகாப்புக் காரணங்களால் கேரளாவிற்குச் செல்லவில்லை. கேரளாவில் உள்ளுராட்சிசபைகளுக்கு எவ்வாறு அதிகாரங்கள் பகிரப்பட்டுள்ளன என்பதை அறிய அவர் முயன்றதாகவும் தெற்குக் கைகூடவில்லை என்றும் தெரியவருகின்றது.

கிழக்குப் பல்கலைக்கழகத்தில் புத்தர் சிலை

கிழக்குப் பல்கலைகக்கழகத்தில் பௌத்த மாணவர்களினதும் விரிவுரையாளர்களினதும் வழிபாடுகளுக்காக புத்தர் சிலையொன்று நிறுவப்பட்டுள்ளது. ஏற்கனவே தமிழ்  மற்றும் முஸ்லிம் மாணவர்களின் வழிபாட்டுத் தலங்கள் அங்கிருப்பது குறிப்பிடத்தக்கது.

– மாயன் –

(இலங்கையில் இருந்து வெளிவரும் வாரமலர் பத்திரிகைகளோடு வணக்கம் LONDON இணையம் வழங்கும் பத்திரிகைக் கண்ணோட்டம். இலங்கையில் இருந்து மாயனின் பார்வையில்)

 

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஞாயிறு பத்திரிகைகள் 16/02/2014 | “கஞ்சிக்காக நான் போய்திரும்பி வந்த போது என் குழந்தையைக் காணவில்லை” | தாயொருவரின் கதறல் ஞாயிறு பத்திரிகைகள் 16/02/2014 | “கஞ்சிக்காக நான் போய்திரும்பி வந்த போது என் குழந்தையைக் காணவில்லை” | தாயொருவரின் கதறல்

ஞாயிறு பத்திரிகைகள் 26/01/2014 | மன்னார் புதைகுழிகளில் கண்டுபிடிக்கப்பட்ட மண்டையோடுகளின் தொகை தற்போது 44 ஆக அதிகரித்துள்ளதுஞாயிறு பத்திரிகைகள் 26/01/2014 | மன்னார் புதைகுழிகளில் கண்டுபிடிக்கப்பட்ட மண்டையோடுகளின் தொகை தற்போது 44 ஆக அதிகரித்துள்ளது

ஞாயிறு பத்திரிகைகள் 19/01/2014 | அனந்தியை அச்சுறுத்துவதை விட்டு அவரது கோரிக்கையின் நியாயத்தைக் கவனியுங்கள் – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு:ஞாயிறு பத்திரிகைகள் 19/01/2014 | அனந்தியை அச்சுறுத்துவதை விட்டு அவரது கோரிக்கையின் நியாயத்தைக் கவனியுங்கள் – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு:

ஆசிரியர்