September 21, 2023 1:30 pm

ஞாயிறு 21/07/2013 : நவுறுதீவில் கலவரம் – 150பேர் கைதுஞாயிறு 21/07/2013 : நவுறுதீவில் கலவரம் – 150பேர் கைது

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

வீரகேசரி

 

ஆசிரியரின் பேனாவிலிருந்து:

தமிழ்த்  திரையுலகத்தின் மார்க்கண்டேயர் வாலி மறைந்தார். அவர் உள்ளொன்று வைத்துப் புறம் பேசாதவர். “தாய் கொண்டு வந்ததை தாலாட்டி வைத்ததை நோய் கொண்டு போகும் நேரம் அம்மா” என்றெழுதிய வாலி இறுதிக் காலத்தில் நோயினால் அவஸ்திப்பட்டாலும் உளத்திறனுடன் வாழ்ந்தவர். அவர் மறைந்தாலும் அவர் பாடல் வரிகள் சாகாவரம் பெற்றவை. அவை வாழ்ந்துகொண்டே இருக்கும்.

நவுறுதீவில் கலவரம் – 150பேர் கைது

புகலிடக் கோரிக்கையாளர்களை தடுத்து வைத்திருந்த நவுறு தீவில் கலவரம் வெடித்துள்ளது. கட்டடங்களை தகர்த்தும், தீவைத்தும் அங்கிருந்து தப்பியோட முனைந்த புகலிடக் கோரிக்கையாளர்களால் இக்கலவரம் வெடித்துள்ளது. அதனால் இலங்கைத் தமிழர்கள் உட்பட சுமார் 150பேரை காவல்துறை கைது செய்துள்ளது.

விக்னேஸ்வரனால் நாடு பிளவுபடும் அபாயம்பொதுபலசேனா

இந்திய அழுத்தத்தாலேயே தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு சி.வி. விக்னேஸ்வரனை முதலமைச்சர் வேட்பாளராகக் களமிறக்கியுள்ளது. இதனால் நாடு பிளவுபடும் அபாயம் உள்ளது என பொதுபலசேனா தெரிவித்துள்ளது.

பள்ளிவாயல் தாக்குதல்களால் இனப் பகைமை ஏற்படும்ஹக்கீம்

ரமழான் புனித மாதத்தில் மஹியங்கனைப் பள்ளிவாயல் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவமானது இனங்களிடையே பகைமையையும் விரிசலையும் ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது என நீதி அமைச்சர் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

கூட்டமைப்பைப் பிளவுபட விடமாட்டேன்மாவை

கூட்டமைப்பிற்குள் பிளவோ போட்டியோ ஏற்பட அனுமதிக்க மாட்டேன் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார். தலைமையின் முடிவை நாம் வரவேற்பவர்கள் என்பதை அனைவருக்கும் உணர்த்த வேண்டும். ஆற்றலுள்ள முதலமைச்சர் வேட்பாளரைத் தலைமை நிறுத்தியுள்ள போது அதற்குப் பின் நாம் அணி திரள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

சீமானைக் கைது செய்ய உத்தரவு:

இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசிய குற்றச்சாட்டில் பிணையிலுள்ள சீமான் தவணையொன்றுக்கு நேரில் வருகை தராததால் அவரைக் கைது செய்யும் உத்தரவு இடப்பட்டுள்ளது.

.தே.கூவின் வேட்பாளர் பட்டியல்:

வடமாகாண சபைக்கான த.தே.கூ வின் வேட்பாளர் பட்டியல் எதிர்வரும் 25ம் திகதி வெளியிடப்படும் எனத் தெரிகின்றது.

பொதுநலவாய மாநாட்டின் பின்னரே 13வது சட்டத்தில் திருத்தம்.

மாகாணசபைகளின் காவல்துறை மற்றும் காணி அதிகாரங்கள் உட்பட ஏனைய அதிகார நீக்கம் பொதுநலவாய உச்சி மாநாட்டின் பின்னரேயே நிகழும் என அரச உயர் மட்டத் தலைவர்கள் தெரிவிக்கின்றனர்.

சுடர்ஒளி:

ஆசிரியரின் பேனாவிலிருந்து:

அரசு ஏன் அரசியலமைப்புத் திருத்தத்தை பின்தள்ளியுள்ளது என்று கேள்விக்கு விடையாக பொதுநலவாய மாநாட்டில் இந்தியாவின் பங்களிப்பு மற்றும் மனிதவுரிமை ஆணையர் நவநீதம் பிள்ளை அவர்களின் வருகை ஆகிய இரண்டுமே காரணமாக இருக்கலாம். இந்தியாவின் பங்குபற்றல் இல்லை என்றானால் இம் மாநாடு தோல்வியிலேயே முடிவடையும் என்பதை இலங்கை தெரிந்து வைத்துள்ளது. அத்துடன் நவி பிள்ளையின் வருகையின் போது 13வது திருத்தத்தைப் பற்றி எவரும் கதைத்து விடக்கூடாது என்பதில் அரசு குறியாக இருப்பதால்தான் இந் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்தியத் தலையீட்டால் இலங்கை பின்வாங்கியது:

அரசியலமைப்பில் திருத்தத்தை மேற்கொள்ளும் முயற்சியை அரசு அரை வருடங்களுக்குப் பிற்போட்டுள்ளது. இதற்குக் காரணம் இந்தியத் தலையீடே. வடக்கின் தேர்தலுக்கு முன் 13வது திருத்தத்தில் மாற்றங்களைச் செய்ய வேண்டாம் என விரும்பிய அரசிற்கு இந்தியாவின் தூதராக வந்த மேனன் வைத்த ஆப்பால் அத் திட்டத்தைத் தற்காலிகமாக அரசு பின்தள்ளி விட்டுள்ளது.

கப்பக்காரர்கள் கிண்ணியாவில் கைது:

தொலைபேசியூடாக கப்பம் கோரிக் கடுமையாக மிரட்டிய மூவரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஆரம்பத்தில் 25 லட்சம் கோரிய இவர்களுடனான பேரம் பேச்சு கடைசியாக 2 லட்சமாக குறைக்கப்பட்டு பணம் கைமாற்றப்படும் போது மறைந்திருந்த காவல்துறையினரால் மடக்கிப்பிடிக்கப்பட்ட இவர்களிடம் விசாரணைகள் தொடர்கின்றன.

மாகாணத் தேர்தலை முன்னிட்டு மோப்ப நாய்கள் தயாராகின்றன:

மாகாணசபைத் தேர்தலில் வெடிப் பொருட்களைக் கண்டு பிடிக்கும் பொருட்டு பயிற்றப்பட்ட 35 மோப்ப நாய்களை காவல்துறை பணியில் ஈடுபடுத்தவுள்ளது.

.தே.கூ வின் அதியுயர் பீடம் கூடியது:

வவுனியாவில் நேற்று த.தே.கூ வின் தலைவர் சம்பந்தனின் தலைமையில் மத்திய செயற்குழுக் கூட்டம் நடைபெற்றுள்ளது. மத்திய செயற்குழு உறுப்பினர்களுடன் மட்டுமே நடைபெற்ற இக் கூட்டத்தில் வடமாகாண சபைத் தேர்தல் தொடர்பாக கலந்துரையாடல்கள் நடைபெற்றதாகவும் வடமாகாணத்தில் த.தே.கூ வின் சார்பில் போட்டியிட்டு தற்போது அரச தரப்பிற்குத் தாவியுள்ள முடியப்பு ரெமடியஸ் தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய ஒழுக்காற்று நடவடிக்கைகள் தொடர்பாக விவாதிக்கப்பட்டதாகவும் தெரியவருகின்றது.

பொதுபலசேனாவும் சர்வதேச வலையமைப்பைக் கட்டியெழுப்புகின்றது:

தமது இனவாதக் கொள்கைகளைச் சர்வதேச அளவில் விரிவுபடுத்தும் நோக்கில் பொ.ப.சே சர்வதேசக் கட்டமைப்பினை உருவாக்கும் முயற்சியைத் தொடங்கியுள்ளது. இவ்வலையமைப்பில் ஆரம்பத்தில் பிரிட்டன், அவுஸ்திரேலியா, இத்தாலி, பிரான்ஸ், சுவிஸ் ஆகிய நாடுகளிலேயே கிளைக்காரியாலயங்கள் உருவாகவுள்ளன.

கூட்டுச் சேரும் முஸ்லிம் காங்கிரஸ்:

வடமாகாண சபைத் தேர்தலில் அரசினால் கைகழுவிவிடப்பட்ட மு.கா முதலில் தனித்துப் போட்டியிடும் முடிவில் இருந்தது. தற்போது அம் முடிவை மாற்றி அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உடன் கூட்டுச்சேரும் முயற்சியில் இறங்கியுள்ளது.

கூட்டமைப்பு பதிவு செய்யப்படாததாலேயே கட்சிக்குள் இழுபறிவினோ எம்.பி

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தனியானதொரு கட்சியாகப் பதிவு செய்திருந்தால் வடமாகாண சபைத் தேர்தலில்  வேட்பாளர் பகிர்வில் இழுபறி நிலை தோன்றியிருக்காது என்று வினோ எம்.பி தெரிவித்துள்ளார். இவ்விழுபறி நிலைக்கு கூட்டமைப்பின் கட்சித் தலைவர்களே பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

– மாயன் –

(இலங்கையில் இருந்து வெளிவரும் வாரமலர் பத்திரிகைகளோடு வணக்கம் LONDON இணையம் வழங்கும் பத்திரிகைக் கண்ணோட்டம். இலங்கையில் இருந்து மாயனின் பார்வையில்)

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஞாயிறு பத்திரிகைகள் 16/02/2014 | “கஞ்சிக்காக நான் போய்திரும்பி வந்த போது என் குழந்தையைக் காணவில்லை” | தாயொருவரின் கதறல் ஞாயிறு பத்திரிகைகள் 16/02/2014 | “கஞ்சிக்காக நான் போய்திரும்பி வந்த போது என் குழந்தையைக் காணவில்லை” | தாயொருவரின் கதறல்

ஞாயிறு பத்திரிகைகள் 26/01/2014 | மன்னார் புதைகுழிகளில் கண்டுபிடிக்கப்பட்ட மண்டையோடுகளின் தொகை தற்போது 44 ஆக அதிகரித்துள்ளதுஞாயிறு பத்திரிகைகள் 26/01/2014 | மன்னார் புதைகுழிகளில் கண்டுபிடிக்கப்பட்ட மண்டையோடுகளின் தொகை தற்போது 44 ஆக அதிகரித்துள்ளது

ஞாயிறு பத்திரிகைகள் 19/01/2014 | அனந்தியை அச்சுறுத்துவதை விட்டு அவரது கோரிக்கையின் நியாயத்தைக் கவனியுங்கள் – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு:ஞாயிறு பத்திரிகைகள் 19/01/2014 | அனந்தியை அச்சுறுத்துவதை விட்டு அவரது கோரிக்கையின் நியாயத்தைக் கவனியுங்கள் – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு:

ஆசிரியர்