March 24, 2023 3:39 am

ஞாயிறு 04/08/2013 : வடக்கின் தேர்தலுக்கு சர்வதேசக் கண்காணிப்பு அவசியம் – சம்பந்தன் : 2ம் இணைப்பு.ஞாயிறு 04/08/2013 : வடக்கின் தேர்தலுக்கு சர்வதேசக் கண்காணிப்பு அவசியம் – சம்பந்தன் : 2ம் இணைப்பு.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

வீரகேசரி:

 

ஆசிரியரின் பேனாவிலிருந்து:

தமிழ் மக்களின் நீண்ட கால அபிலாசையான வடமாகாண சபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. எனினும் இத் தேர்தலின் நியாயத்தன்மை, சுதந்திரத்தன்மை தொடர்பாக தமிழ் மக்கள் கடுஞ் சந்தேகத்துடனேயே இருக்கின்றார்கள். தேர்தல் காலங்களில் இராணுவம் முகாம்களுக்குள் இருக்க வேண்டும் என த.தே.கூ கட்டாயப்படுத்தி வருகின்றது. 25 வருடங்களுக்கு முன் உருவாக்கப்பட்ட மாகாண சபை முறையில் வடமாகாண சபைக்கு இப்போது தான் தேர்தல் நிகழ்கின்றது. தமிழர்கள் இத்தேர்தலில் பொருத்தமான பிரதிநிதிகளைத் தேர்வு செய்ய வேண்டும். அதே போல் பொறுப்பானவர்கள் நியாயமான தேர்தல் நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும்

 

விசாரணை என அச்சுறுத்தல்:

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாணசபைத் தேர்தல் வேட்பாளர்களை விசாரணை என்ற பெயரில் ராணுவம் அச்சுறுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுநலவாய அமைப்பின் பிரதிநிதிகளிடம் இத் தகவலை த.தே.கூ தெரிவித்துள்ளது. சுமார் நூற்று ஐம்பதினாயிரம் படையினர் நிலைகொண்டுள்ள வடக்கில் சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தல் எவ்வாறு நடைபெற வாயப்புக்கள் இருக்கும் எனவும் த.தே.கூ கேள்வி எழுப்பியுள்ளது.

 

திருமலையின் அழகிய காணிகள் தனியாருக்கு விற்பனை:

திருமலையின் கடல்சார் பிரதேசங்களை அண்டியுள்ள அழகிய நிலப்பரப்புக்களை அபிவிருத்தியென்ற பெயரால் சுவீகரித்து தனியாருக்கு விற்பனை செய்யும் முயற்சிகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளன. மூதூருக்கும் கிண்ணியாவிற்கும் இடைப்பட்ட உப்பாறு தொடக்கம் கங்கைக்கரை வரையிலான பிரதேசத்திலுள்ள சுமார் 390 ஏக்கர் காணிகளுக்கே இந் நிலை ஏற்பட்டுள்ளது. இப் பிரதேசத்தைக் காக்கும் பொறுப்பு கிழக்கு மாகாண சபைக்குரியது என்பது குறிப்பிடத்தக்கது.

 

பான்கி மூன்  தற்போதும் படிக்கின்றார்:

ஐ நா வின் செயலாளர் நாயகம் இலங்கையின் இறுதிப்போர் பற்றிய அறிக்கையை இப்போது படிக்கின்றாராம்! இலங்கையின் இறுதிப்போரின் போது ஐநா சபை மக்களைப் பாதுகாக்கும் பொறுப்பிலிருந்து தவறியமை தொடர்பாக ஐ நா வின் அதிகாரி ஜோன்எலியேசனின் அறிக்கையையே மூன் தற்பொது படித்து வருகின்றார்.

 

மஹியங்களனை தொடர்பாக பேச சனாதிபதி நேரம் ஒதுக்கவில்லைமு.கா:

மஹியங்கனைப் பள்ளிவாயல் தாக்கப்பட்டமை தொடர்பான பேச்சுவார்த்தைக்கு தமக்கு நேரம் ஒதுக்கித்தருமாறு மு.கா சனாதிபதியிடம் கோரியிருந்தது. எனினும் தற்போதுவரை அதற்கு பதிலேதும் கிடைக்கவில்லை என அம்பாறை மாவட்ட மு.காவின் நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.ஹரீஸ் தெரிவித்துள்ளார்.

 

விசாவில்லாமலிருப்பவர்கள் வசமாக மாட்டுகின்றார்கள்:

ஐக்கியராச்சியத்தில் சட்டவிரோதமாகக் குடியிருப்பவர்களைக் கைது செய்யும் நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளதைத் தொடர்ந்து 90 சட்ட விரோதக் குடியேற்றவாசிகள் கைதாகியுள்ளனர்.

 

யாழில் சுயேட்சை வேட்பாளர் சடலமாக மீட்பு:

எதிர்வரும் மாகாணசபைத் தேர்தலில் சுயேட்சையாகக் களமிறங்கியிருந்த 72 வயதான வைத்திலிங்கம் ராமச்சந்திரன் சனிக்கிழமை காலை சுன்னாகம் பகுதியிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பிரேதபரிசோதனையின் போது மாரடைப்பாலேயே இவர் உயிரிழந்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

 

தினக்குரல் 

ஆசிரியரின் பேனாவிலிருந்து:

வடமாகாணசபைத் தேர்தலில் இராணுவத்தலையீட்டைக் குறைக்கும் நடவடிக்கையாக இராணுவம் இருப்பிடங்களில் இருந்து பலாலி நோக்கி நகர்வதாக போக்குக் காட்டியுள்ளது. ஆனாலும் இம்முடிவினால் தேர்தலில் இராணுவப்பிரசன்னம் குறையுமா என்பது சந்தேகமே. எனினும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இவ்விடயத்தில் கடுமையான போக்கைக் கொண்டுள்ளது. இராணுவத் தலையீட்டைத் தேர்தலில் குறைக்க சர்வதேசம் தலையிடவேண்டாம் என்பதில் விடாப்பிடியாக உள்ளது. வலிகாமம் வடக்கில் சுவீகரிக்கப்பட்டுள்ள காணிகள் தொடர்பில் அரசின் நிலைப்பாடு தெளிவாக்கப்படல் வேண்டும்.

இராணுவம் வலிகாமத்தை விடுவிக்காதது ஏன்? சுரேஸ்:

பலாலியிலிருந்து இராணுவம் வெளியேற மாட்டோம் என கூறுவதற்கு அவர்களுக்கு என்ன அருகதையுள்ளது என சுரேஸ் கேள்வி எழுப்பியுள்ளார். வடக்குத் தேர்தலில் பெருமளவு சுயேச்சைக் குழுக்களை இறக்கி மக்களைத் திசைதிருப்பும் நடவடிக்கையில் அரசு ஈடுபட்டுள்ளது என அவர் மேலும் குற்றம்சொல்லியுள்ளார்.

வடக்கின் தேர்தலுக்கு சர்வதேசக் கண்காணிப்பு அவசியம்சம்பந்தன்:

செம்டெம்பரில் நடைபெறும் மாகாணசபைத் தேர்தல்களுக்குள் வடக்கின் தேர்தலுக்கு கட்டாயம் சர்வதேசக் கண்காணிப்பு அவசியம் என சம்பந்தன் பொதுநலவாயக் குழுவினரிடம் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு வருகைதந்துள்ள இரு பொதுநலவாய அதிகாரிகளையும் சந்தித்துப் பேசிய சம்பந்தன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பஷீர் அமைச்சர் பதவியைத் துறக்கத் துணிந்தார்:

அரசின் நடவடிக்கைகளை விமர்சிக்க வேண்டுமாயின் அரசிலிருந்து கொண்டு அவ்வாறு செய்ய முடியாதெனத் தெரிவித்துள்ள பஷீர் தனது அமைச்சர் பதவியைத் துறக்கத் தீர்மானித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். மாகாண சபைத் தேர்தல்களில் தனித்துப் போட்டியிடும் முஸ்லிம் காங்கிரசிற்கு ஆதரவாகத் தான் பிரச்சார பணிகளில் ஈடுபட இவ்வமைச்சுப் பதவி தடையாக உள்ளதாலேயே இம் முடிவை எடுத்துள்ளதாகத் தெரிவித்தார்.

வயலில் மயங்கிக்கிடந்தவர் வைத்தியசாலையில் மரணம்:

திருக்கோவில் காஞ்சிரங்குடாவில் வயலில் மயங்கிக் கிடந்தவரை வைத்தியசாலையில் சேர்த்தபோது மரணமாகியிருப்பது தெரியவந்தள்ளது. வயலினையும் மாடுகளையும் பொறுப்பாக பராமரித்துவந்த 38 வயதுடைய மரியான் பிள்ளைமரியதாஸ் என்பவரே உயிரிழந்துள்ளார்.

றமழான் பெருநாளில் கலப்புக் களியாட்டங்களுக்குத் தடைஏறாவூர் நகர சபை

றமழான் பெருநாளில் ஆண், பெண் இருபாலாரும் கலந்து களிக்கும் களியாட்டங்களுக்கு ஏறாவூர் நகரசபை தடைவிதித்துள்ளது.

மகளிர் இடையே சண்டை – பெண்கள் நால்வர் காயம்:

துன்னாலையில் நடந்த இரு வேறு சம்பவங்களில் காயமடைந்த நான்கு பெண்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குடும்பத்தகறாறு மற்றும் காணிப்பிரச்சனைகள் தொடர்பாக நடந்த கைகலப்புக்களிலேயே இவர்கள் காயமடைந்தள்ளனர்.

சிறுமி கர்ப்பம்இளைஞன் கைது

ஹோமாகமவில் சிறுமியொருவருடன் உறவுகொண்டு கர்ப்பமாக்கிய இளைஞனை காவல்துறை கைது செய்துள்ளது.

மாயன்

(இலங்கையில் இருந்து வெளிவரும் வாரமலர் பத்திரிகைகளோடு வணக்கம் LONDON இணையம் வழங்கும் பத்திரிகைக் கண்ணோட்டம். இலங்கையில் இருந்து மாயனின் பார்வையில்)

 

இலங்கையில் ஏற்பட்ட மின்சாரத்தடை காரனமாக ஏனைய பத்திரிகைகள் மீதான பார்வை சற்று தாமதமாக பதிவேற்றப்படும் என்பதை அறியத்தருகின்றோம் 

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஞாயிறு பத்திரிகைகள் 16/02/2014 | “கஞ்சிக்காக நான் போய்திரும்பி வந்த போது என் குழந்தையைக் காணவில்லை” | தாயொருவரின் கதறல் ஞாயிறு பத்திரிகைகள் 16/02/2014 | “கஞ்சிக்காக நான் போய்திரும்பி வந்த போது என் குழந்தையைக் காணவில்லை” | தாயொருவரின் கதறல்

ஞாயிறு பத்திரிகைகள் 26/01/2014 | மன்னார் புதைகுழிகளில் கண்டுபிடிக்கப்பட்ட மண்டையோடுகளின் தொகை தற்போது 44 ஆக அதிகரித்துள்ளதுஞாயிறு பத்திரிகைகள் 26/01/2014 | மன்னார் புதைகுழிகளில் கண்டுபிடிக்கப்பட்ட மண்டையோடுகளின் தொகை தற்போது 44 ஆக அதிகரித்துள்ளது

ஞாயிறு பத்திரிகைகள் 19/01/2014 | அனந்தியை அச்சுறுத்துவதை விட்டு அவரது கோரிக்கையின் நியாயத்தைக் கவனியுங்கள் – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு:ஞாயிறு பத்திரிகைகள் 19/01/2014 | அனந்தியை அச்சுறுத்துவதை விட்டு அவரது கோரிக்கையின் நியாயத்தைக் கவனியுங்கள் – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு:

ஆசிரியர்