ஞாயிறு 25/08/2013 | சர்வதேச மயமாகும் தமிழர் போராட்டம் – மாவை சேனாதிராசாஞாயிறு 25/08/2013 | சர்வதேச மயமாகும் தமிழர் போராட்டம் – மாவை சேனாதிராசா

வீரகேசரி:

ஆசிரியரின் பேனாவிலிருந்து:

மலையகத் தலைவர்கள் தன்னலமற்று மக்களுக்குச் சேவை செய்ய முன்வந்தாலேயொழிய மலையகத் தமிழர்களின் வாழ்வியலில் எவ்வித முன்னேற்றமும் காணப்படப் போவதில்லை. இலங்கையில் தேயிலையை அறிமுகம் செய்த இங்கிலாந்தினருடன் இலங்கை வந்த மலையகத் தமிழர்களின் மூன்றாவது தலைமுறையிலும் அவர்களின் வாழக்கை உயர்வற்றிருப்பது மயைகத் தலைமைகளின் இயலாமையை வெளிக்காட்டி நிற்கின்றது. மலையத் தலைமைகள் ஒன்றாகச் செயற்பட்டு தன்னலமற்ற சேவையாற்ற வேண்டும் என்பதே காலத்தின் கட்டாயம் ஆகும்.

நவநீதம்பிள்ளை எதிர்வரும் செவ்வாய் வடக்கில்:

27ம் திகதி வடக்கிற்கு வரவுள்ள நவநீதம்பிள்ளை அவர்கள் அங்குள்ள சிவில் சமூக அமைப்புக்களைச் சந்தித்துப் பேசவுள்ளார். அப் பேச்சில் இறுதிக்கட்ட யுத்தம், இழப்புக்கள், மற்றும் மக்களின் இன்றைய நிலை தொடர்பாக அமையும் எனத் தெரிகின்றது.

நாம் காணாமற் போனவர்கள் பற்றிக் கலந்துரையாடுவோம்:

வடக்கிற்கு வரும் பிள்ளை அவர்களுடன் காணாமற்போனவர்கள் பற்றிக் கலந்துரையாடவுள்ளதாக சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தேர்தலைக் கண்காணிக்க சார்க்கிலிருந்து 17 பேர்:

வடமாகாண சபைத் தேர்தலைக் கண்காணிக்கவென சார்க் நாடுகளிலிருந்து 17 கண்காணிப்பாளர்கள் அழைக்கப்பட்டுள்ளனர் என  தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்துள்ளார். இவர்களுள் ஐவர் யாழ் மாவட்டத்திலும், மூவர் வீதம் ஏனைய நான்கு மாவட்டங்களிலும் பணியிலிருப்பர் எனத் தெரிகின்றது.

பிள்ளையின் வருகையை எதிர்க்கும் ராவணபலய:

நவிபிள்ளை அவர்களின் வருகையை எதிர்த்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடும் முனைப்பில் ராவண பலய அமைப்பு உள்ளது. அதன் கட்டமாக 26ம் திகதி கொழும்பிலுள்ள ஐ.நா சபையின் அலவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்றை அவ்வமைப்பு முன்னெடுக்கவுள்ளது.

மு.காவும் பிள்ளையிடம் அறிக்கை:

முஸ்லிம்களின் பிரதான பிரச்சனைகள் மற்றும் அண்மைக்கால நிகழ்வுகள் தொடர்பான அறிக்கையொன்றை முஸ்லிம் காங்கிரஸ் நவநீதம்பிள்ளை அவர்களிடம் கையளிக்கவுள்ளதாகத் தெரிகின்றது.

தமிழர்களின் துன்பத்தை நேரில் ஆராய்ந்து பிள்ளை அறிக்கையிடவேண்டும்கருணாநிதி:

இலங்கை செல்லும் பிள்ளை அவர்கள் தமிழர்களின் பிரச்சனைகளை நேரில் ஆராய்ந்து அறிக்கையிட வேண்டும் எனக் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.

ஊடகவியலாளர் வீட்டில் கொள்ளை முயற்சிகள்வனொருவன் சூட்டுக்குப்பலி:

சண்டேலீடர் பத்திரிகையின் இணை ஆசிரியரான மந்தனா இஸ்மைல் அபெயவிக்ரம அவர்களின் வீட்டில் மேற்கொள்ளப்பட்ட கொள்ளை முயற்சி காவல்துறைக்குத் தெரியவந்ததை அடுத்து அங்கு விரைந்த காவல்துறையினருக்கும் கொள்ளையருக்கும் இடையே நடந்த மோதலில் கொள்ளையன் ஒருவன் சுட்டுக் கொள்ளப்பட்டுள்ளான். ஏனைய மூன்று கொள்ளையரும் காயமடைந்துள்ளனர். காவல்துறையினர் நால்வர் கத்தி வெட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

தினக்குரல்:

ஆசிரியரின் பேனாவிலிருந்து:

அனைத்துலக அரசியல் வெளிவிவகாரக் கொள்கையின் அடிப்படையிலேயே இந்தியா பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்கும் எனத் தெரிகின்றது. அம் மாநாட்டில் பங்கேற்கும் முடிவை அறிவிப்பதில் இந்தியா இரு விடயங்களை எதிர்கொள்கின்றது. முதலாவது உள்நாட்டில் இந்தியாவின் பங்குபற்றுதலுக்கு எழுந்துள்ள எதிர்ப்பலைகள். இரண்டாவது இலங்கையைச் சங்கடப்படுத்தாமல் இருப்பது. முடிவை இந்தியா வடமாகாணசபைத் தேர்தலின் பின்னரே அறிவிக்கும் போலுள்ளது. வடமாகாணசபைத் தேர்தல் முடிந்து தமிழர் தரப்பு ஆட்சி அமைத்தால் தமிழ் நாட்டிலிருந்த எழும் அழுத்தங்கள் குறைந்துவிடும் என இந்தியா எதிர்பார்க்கலாம். தனது முடிவின் ஊடாக அழுத்தமொன்றை இந்தியா இலங்கை மீது சுமத்துமா? என்பதே இப்போதுள்ள கேள்வி.

சர்வதேச மயமாகும் தமிழர் போராட்டம்மாவை சேனாதிராசா:

விடுதலைப் போராட்டத்தில் ஈடுபடும் நாடுகளில் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்ட நாடுகளையும் காணமுடியும். அதனடிப்படையிலேயே நாமும் ஆயுதப் போரில் நம்பிக்கை கொண்டிருந்தோம். சில ராச தந்திர நகர்வுகளில் ஏற்பட்ட பிழைகளால் அப்போராட்டப் பாதை பிழைத்துவிட்டது. ஆனால் அவ் ஆயுதப் போராட்டத்தின் விளைவுகளே தமிழர் பிரச்சனையைச் சர்வதேசமயமாக்கியுள்ளது என மாவை தெரிவித்துள்ளார்.

பேசினால் கைதாகலாம்அசாத்சாலி:

அரசின் பங்காளிகளாகவுள்ள முஸ்லிம் அமைச்சர்கள் முஸ்லிம்களுக்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கைகள் தொடர்பாகப் பேச முனைந்தால் கைது செய்யப்படலாம் என அசாத்சாலி தெரிவித்துள்ளார். இலங்கையின் வரலாற்றில் இந்த அரசு கொடுங்கொலாட்சி செய்து சாதனை படைத்துள்ளது, தண்ணீர் கேட்ட மக்களைக் குண்டுகளால் கொலை செய்த அரசு இதுதான் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

சமுர்த்தி அலுவலர்கள் அரசிற்காதரவாய்ப் பிரசாரம்:

மன்னாரில் சமுர்த்தி உத்தியோகத்தர்களைப் பயன்படுத்தி அரச ஆதரவுப் பிரசாரங்கள் முன்னெடுக்கப் பட்டுள்ளதாக செல்வம் எம்.பி குற்றஞ்சாட்டியுள்ளார். அத்துடன் மக்களின் விபரங்களைத் திரட்டுகின்றோம் என்ற போர்வையில் மக்கள் எக் கட்சிக்கு ஆதரவு தெரிவிக்கின்றார்கள் என்பதையும் அவர்கள் ஊடாக திரட்டப்படுகின்றன என்றும் செல்வம் மேலும் தெரிவித்துள்ளார்.

சகல சக்திகளையும் திரட்டி அரசின் காலை வாருவேன்:

ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து பதவி நீக்கப்பட்டுள்ள தென் மாகாண சபை உறுப்பினரான மைத்திரி குணரத்ன தான் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து விலக்கப்பட்டுள்ளதால் தனித்துச் சுயேச்சையாக செயற்படவுள்ள நான் ஐக்கிய தேசியக் கட்சியைத் தவிர்க்கப் போவதில்லை எனத் தெரிவித்துள்ளதுடன் சகல சக்திகளையும் திரட்டி அரசாங்கத்தின் காலை வாரிவிடவும் தயங்கப் போவதில்லை எனத் தெரிவித்துள்ளார்.

நவநீதம்பிள்ளை சுயாதீன முடிவை எடுக்க வேண்டும்அமைச்சா மகிந்த சமரசிங்க:

இலங்கைக்கு வருகைதரவுள்ள பிள்ளை அவர்கள் சுயாதீனமான முடிவுகள் எடுக்க வேண்டும் என அமைச்சர் மகிந்த சமர சிங்க தெரிவித்துள்ளார். சர்வதேச நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப நாம் செயற்படப் போவதில்லை என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும் என்பதையும் அவர்கள் தெரிந்து நடக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

– மாயன் –

(இலங்கையில் இருந்து வெளிவரும் வாரமலர் பத்திரிகைகளோடு வணக்கம் LONDON இணையம் வழங்கும் பத்திரிகைக் கண்ணோட்டம். இலங்கையில் இருந்து மாயனின் பார்வையில்)

ஆசிரியர்