ஞாயிறு 27/10/2013 : பொதுநலவாய மாநாட்டைப் புறக்கணித்தது த.தே.கூஞாயிறு 27/10/2013 : பொதுநலவாய மாநாட்டைப் புறக்கணித்தது த.தே.கூ

சண்டே லீடர் :

 

தங்காலை கொலை வழக்கு விசாரணைத் திகதி அறிவிக்கப்படலாம்:

டிசம்பர் 2011ல் தங்காலையில் கொலை செய்யப்பட்ட பிரித்தானிய பிரஜயின் கொலை தொடர்பான மேல் விசாரனைக் கான திகதியை கொழும்பு மேல் நீதி மன்றம் தீர்மானிக்கவுள்ளது. கடந்தவாரம் அந்ரோணி ஜெனரல் திணைக்களம் இவ் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட தங்காலை பிரதேசசபை தலைவர் உட்பட ஏனைய சந்தேநபர்களிற்கு எதிரான குற்றப்பத்திரத்தை மேல் நீதிமன்றில் தாக்கல் செய்வதை அடுத்து விசாரணைத் திகதியை நிர்ணயிக்கும் நடவடிக்கையை மேல் நீதிமன்றம் இவ்வாரத்தில் எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

 

ஐக்கியராச்சியத்திலிருந்து திருப்பியனுப்பப்பட்டவர்களின் நிலை என்ன?

இலண்டனில் இருந்து நாடு கடத்தப்பட்ட இலங்கைத் தமிழரின் நிலை எவ்வாறுள்ளது என்பதை அறிந்துள்ளீர்களா என பிரித்தானிய வெளிவிகார அமைச்சின் ஆலோசனைக் குழு பிரித்தானிய   எல்லை முகவர் நிலையத்திடம் கேள்வி எழுப்பியுள்ளது.

நாடுகடத்தப்பட்டவர்களின் தற்போதைய நிலையினை அறிந்து கொள்வது ஐக்கிய இராச்சிய வெளிவிவகாரக் கொள்கைகளின் சரத்துக்களில் ஒன்றாகும்.

 

தனியார் துறையிடமிருந்து பறிபோகும் புதுப்பிக்கக்கூடிய மின் திட்டங்கள்:

இலங்கையின் தனியார் துறைக்கு வழங்கப்பட்டிருந்த புதுப்பிக்க கூடிய மின் உற்பத்தித் திட்டங்களை இரகசியமாக சர்வதேச நிறுவமொன்று தனதாக்கிக் கொண்டுள்ளமை தெரிய வருகின்றது. இந் நிறுவனமானது வாகன உற்பத்தியில் இயங்கும் பாரிய நிறுவனமாகும்.

சிறிய மற்றும் நடுத்தர அளவிலான 450 மெகாவாட்டு நீர் மின்வலு மற்றும் காற்றாலை மின்வலுத் திட்டங்களே இவ்வாறு களவு போயுள்ளது. இத் திட்டங்களுக்கான இடங்கள் தேர்வு செய்யப்பட்டு சாத்திய அறிக்கைகளும் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ள நிலையில் இத் திட்டத்திற்கு கடனுதவி அளிக்க வந்த சீனக்கம்பனியொன்று இச் சிறிய திட்டங்கள் யாவற்றையும் ஒன்றாகப் பெற்றுள்ளதாகத் தெரிகின்றது.

 

விடுதிகளின் அறைகள் யாவும் பதிவாகின:

பொதுநலவாயத் தலைவர்களின் மகாநாட்டை அடுத்து கொழும்பிலுள்ள உல்லாசவிடுதிகளின் அறைகள் யாவும் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. கொழும்பில் 4000 அறைகளிலும் கொழும்பிற்கு வெளியே மேலும் பல அறைகளும் முன்பதிவு செய்யப்பட்டு விட்டன.

 

பொதுநலவாயத் தலைவர்களுக்கு விளக்கமளிக்க ஐ.தே.க தயார்:

எதிர்வரும் மாதம் இலங்கையில் கூடவுள்ள பொதுநலவாயத் தலைவர்களுக்கு இலங்கையின் தற்போதைய நிலை தொடர்பாக விளக்கமளிக்க ஐ.தே.க தயாராகி வருகின்றது.

 

பொதுநலவாய மாநாட்டை எதிர்கட்சியும் புறக்கணிப்பு:

நா. உறுப்பினர் மங்கள சமரவீரவின் கைதை அடுத்து பொதுநலவாயக் கூட்டத் தொடரின் பிரதான கூட்டத்தைப் புறக்கணிக்க முடிவு எடுத்துள்ள ஐ.தே.க இலங்கையில் நடைபெறும் மனித உரிமை மீறல்களான கடந்தல்கள் கொலைகள் மற்றும் முன்நாள் பிரதம நீதியரசரின் பதவி பறிப்பு போன்றவை தொடர்பாகவும் பொதுநலவாயத் தலைவர்களுக்கு விளக்கம் அளிக்க உள்ளது.

 

 

சுடர் ஒளி :

 

ஆசிரியரின் பேனாவிலிருந்து:

சி.வி. விக்னேஸ்வரனை முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்த போது சனாதிபதி சுரேஸ் பிரேமச்சந்திரனையோ, மாவை சேனாதிராசாவையோ அவ்வாறு நியமித்திருக்கலாம் என்ற ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார். வடக்கின் முதலமைச்சரோ தனது அதிரடி அறிவிப்பின் மூலம் தென்னிலங்கையை கலக்கி வருகின்றார். தற்போது வடக்கு மாகாணசபை ஊடாக காவல்துறை, காணி மற்றும் 13வது திருத்தச் சட்டம் ஊடாக வழங்கப்பட்டுள்ள அனைத்து உரிமைகளையும் பெற்றுக்கொள்ளப் போவதாக அவர் அறிவித்துள்ளார். அதேவேளை அரசுடன் சமாதானமாக முன்னேறும் சமிக்ஞைகளையும் அவர் விடுத்துள்ளார். அதனைச் சரியாகப் புரிந்து கொண்டு அரசு ஆதரவுக் கரம் நீட்டி முறுகல் போக்குகளை நீக்க வேண்டும்.

 

வடக்கிற்கு அமெரிக்கத் தூதுவர்:

எதிர்வரும் 30ம் திகதி வடக்கிற்கு அமெரிக்கத் தூதுவர் பயணஞ் செய்யவுள்ளார். அங்கு அவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் சந்தித்து உரையாடவுள்ளார். இப்பயணம் தொடர்பாகத் தற்போதுவரை அமெரிக்கத் தூதரகத்தால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை எனத் தெரிகின்றது.

 

கொழும்பு மாநாடு தொடர்பாக மதில் மேல் பூனையாக இந்தியா!!!

இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டில் பங்குபற்றுவதா? இல்லையா என்ற முடிவினைத் தற்போதுவரை இந்தியா வெளியிடவில்லை. ஒட்டுமொத்தத் தமிழகமும் கிளர்ந்தெழுந்துள்ள நிலையில் இம்முடிவை வெளியிடுவதில் இந்தியா பெரும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது.

 

புத்தள விபத்தில் மூவர் சாவு- ஐவர் காயம்:

புத்தளத்தில் நடைபெற்ற விபத்தொன்றில் மூவர் உயிரிழந்தும் ஐவர் காயமடைந்தும் உள்ளனர்.

 

ஐநாவிற்கும் மன்மோகனிற்கும் மகஜர் – தமிழகம் அனுப்பியுள்ளது:

பொதுநலவாய மாநாட்டைப் புறக்கணிக்க வேண்டும் என்று கோரி இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கையும் ஐக்கிய நாடுகள் சபையையும் கோரி எழுதப்பட்ட மகஜர் ஒன்று தமிழகத்தில் இருந்து அனுப்பப்பட்டுள்ளது.  நூறாயிரம் கையெழுத்துக்களைக் கொண்ட அம்மகஜரைத் தமிழக மக்கள் அமைப்புக்கள் அனுப்பியிருப்பது குறிப்பிடத் தக்கது.

 

தமிழனைத் தமிழனே ஆள வேண்டும் – அனந்தி:

தமிழனைத் தமிழனே ஆள வேண்டும் என்பதற்காகவே வடக்கு மக்கள் ஏகோபித்த ஆதரவுடன் வடமாகாண சபைக்கு தமிழத்தேசியக் கூட்டமைப்பை அனுப்பியுள்ளனர் என அனந்தி தனது கன்னி மாகாணசபை உரையில் தெரிவித்துள்ளார்.

 

இன அடிப்படையில் நியமனங்கள் இல்லை –காவல்துறை மா அதிபர்:

ஒவ்வொரு இனத்தினது அவசியத்திற்கும் ஏற்றால் போல் இலங்கையில் காவல்துறையினரை நியமிக்க முடியாது என காவல்துறை மா அதிபர் தெரிவித்துள்ளார். வடமாகாண சபையின் கன்னி அமர்வில் வடமாகாணத்திற்கு தமிழ்க் காவல்துறையினரை நியமிக்க வேண்டும் என்ற முதலமைச்சரின் வேண்டுகோளையிட்டே இவ்வாறு காவல்துறை மா அதிபர் தெரிவத்தார். வடமாகாணத்தில் உள்ள காவல்துறை அலுவலகங்களில் மூன்று அல்லது நான்கு தமிழ்க் காவல்துறையினர் தற்போது கடமையில் இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

 

 

வீரகேசரி :

 

ஆசிரியரின் பேனாவிலிருந்து:

வடக்கின் முதலமைச்சரின் கன்னியுரை வடமாகாணசபையின் புதிய கட்டடத்துள் நிகழ்ந்தது. அவ்வரலாற்று நிகழ்வில் வடக்கும் சனநாயகப் பண்புடன் கூடிய நிர்வாக முறைமைக்குள் உள்வாங்கப்படுகின்றது. அத்துடன் அவரது கன்னியுரையில் வடக்கின் அபிவிருத்திக்குக் கிடைக்கும் எந்தச் சந்தர்ப்பத்தையும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு விடடுக் கொடுக்கப் போவதில்லை என்பது தெளிவானது. அத்துடன் வடமாகாண மக்கள் தேசிய பாதுகாப்பிற்கு எவ்விதத்திலும் அச்சுறுத்தலாக அமையப் போவதில்லை என்னும் உறுதிமொழி வடக்கில் இராணுவப் பிரசன்னத்தின் தேவை என்ன என்பதையும் வினவி நிற்கின்றது. மேலும் வடக்கில் இராணுவ ஆட்சியை இல்லாதொழிக்க ஆளுனரை இராணுவத் தரப்பல்லாத ஒருவராக நியமிக்க வேண்டியதன் தேவையை அவரது பேச்சு கோடிட்டு நிற்கின்றது. அரசுக்கு மிகவும் சாதகமான சமிக்ஞைகளைக் காட்டி நிற்கும் அவருடைய பேச்சை அரசில் காதில் போட்டுக் கொண்டால் நன்றே!

 

பொதுநலவாய மாநாட்டைப் புறக்கணித்தது த.தே.கூ:

இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டைப் புறக்கணிக்கப் போவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. அவ்வாறு கலந்துகொள்ளாமல் இருப்பது பொதுநலவாய அமைப்பிற்கு எதிரானவர்கள் என்ற கருத்தை தோற்றுவிப்பதாக அமையாது என அவ்வமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக் கட்சியின் செயலருமான மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.

 

திறக்கப்பட்டது கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை:

இன்று இலங்கையின் இரண்டாவது அதிவேக நெடுஞ்சாலை திறந்துவைக்கப்பட்டது. கொழும்பிற்கும் கட்டுநாயக்காவிலுள்ள சர்வதேச விமான நிலையத்திற்கும் இடையில் வெட்டுப்போக்கில் அமைக்கப்பட்ட நெடுஞ்சாலையே திறந்து வைக்கப்பட்டது. 4500 கோடி ரூபாய் செலவில் சீன உதவியுடன் இச்சாலை கட்டப்பட்டுள்ளது.

 

இலங்கை இந்திய மீனவர் பிரச்சனையைத் தீர்க்கப் பேச்சு:

இந்திய இலங்கைக் கடற் பரப்பில் நடைபெறும் அத்துமீறிய மீன்பிடி மற்றும் கைதுகள் தொடர்பாகப் பேசித் தீர்வொன்றைக் காண்பதற்கான கூட்டமொன்று இரு நாடுகளுக்கும் இடையே எதிர்வரும் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ளது.

 

பொதுநலவாய மாநாட்டை இலங்கையில் நடத்தக் கூடாது எனச் சென்னையில் போராட்டம்:

இலங்கையில் நடைபெறவுள்ள பொது நலவாய மாநாட்டை அந்நாட்டில் நடத்தக்கூடாது உள்ளிட்ட பலகோரிக்கைகளை முன்வைத்து சென்னையில் போராட்டங்கள் ஆரம்பமாகியுள்ளன. இக் கோரிக்கைகளுள் மாநாட்டை இலங்கையில் நடத்தக்கூடாது, பொதுநலவாய மாநாட்டின் அங்கத்துவத்தில் இருந்து இலங்கையை நீக்க வேண்டும், இலங்கை மீது சர்வதேச விசாரணையை நடாத்த வேண்டும் போன்றவை உள்ளடங்கியுள்ளன.

 

வடக்கில் முஸ்லிம் குடியேற்றம் – முதலமைச்சரின் கருத்தை வரவேற்கும் அமைச்சர் ஹக்கீம்:

1990ம் ஆண்டு வடக்கில் இருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களை மீளக் குடியேற்றக் காத்திரமான நடவடிக்கை எடுக்கப்படும் என வடக்கின் முதல்வர் விக்னேஸ்வரன் அறிவித்துள்ள நிலையில் அதனை தாம் வரவேற்பதாக அமைச்சர் ஹக்கீம் தெரிவித்துள்ளார். அக்கூற்று அர்த்தபுஸ்டியாக இருக்க வேண்டும் என அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

 

தனிவீட்டுத்திட்டத்தைத் தருவதாகக் கூறி தமிழ்க்கல்வி அமைச்சை அரசு பறித்து விட்டது:      

லயன்களில் வாழும் மக்களுக்குத் தனியான வீடுகளைக் கட்டித்தருவதாக தேர்தலின் போது வாக்குறுதியளித்திருந்த அரசு தேர்தல் முடிந்ததும் மத்திய மாகாணத் தமிழ்க் கல்வி அமைச்சினை மக்களிடமிருந்து எடுத்துள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருநாயக்க தெரிவித்துள்ளார்.

 

“மாநாகரசபை மேயர் பதவியை எதிர்பார்த்துள்ளேன்” – நிசாம் “அபிவிருத்தியை இடைநடுவில் கைவிடுவது எப்படி?” – மேயர் சிராஸ்

தேர்தலின் பின்னர் விருப்பு வாக்குகளின் அடிப்படையில் சுழற்சி முறையில் கல்முனை மேயர் பதவியை வழங்குவது எனக் கட்சி மாநாட்டில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய எனக்கு அப்பதிவி வரும் எனக் காத்திருப்பதாக பிரதி மேயர் நிசாம் காரியப்பர் தெரிவித்தார். இவ்வெதிர்பார்ப்பு தனது தனிப்பட்ட எதிர்பார்ப்பல்ல எனத் தெரிவித்த அவர் மக்களின் எதிர்பார்ப்பும் அவ்வாறே இருப்பதாகத் தெரிவித்தார்.

 

 

– மாயன் –

 

(இலங்கையில் இருந்து வெளிவரும் வாரமலர் பத்திரிகைகளோடு வணக்கம் LONDON இணையம் வழங்கும் பத்திரிகைக் கண்ணோட்டம். இலங்கையில் இருந்து மாயனின் பார்வையில்)

 

ஆசிரியர்