சண்டே லீடர் :
மகிந்த சிந்தனைக்கு அமையத் திட்டங்களை முன்னெடுங்கள்:
வடமாகாண முதல்வருக்குக் கடிதமொன்றை வரைந்துள்ள சனாதிபதி மகிந்த சிந்தனைக்கு அமையத் திட்டங்களை முன்னெடுத்துச் செல்லுமாறு அக் கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார். கடந்த வாரம் நடைபெற்ற யாழ் மற்றும் கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் கூட்டங்களுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவே தலைமை ஏற்றிருந்தார். அவ் அபிவிருத்திக் கூட்டங்களை த.தே.கூ புறக்கணித்திருந்தது அதனை அடுத்து மாவட்ட அபிவிருத்திக் கூட்டங்களை தலைமை தாங்கி நடாத்துவதற்கு இணைந்தலைவராக விக்னேஸ்வரன் அவர்களையும் சனாதிபதி நியமனம் செய்தார். இந் நியமனத்தைத் தொடர்ந்தே இவ்வாறு அவர் கோரியுள்ளார்.
நடவடிக்கைகள் உடப்பில் போடப்பட்டன:
ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிரான தனது நடவடிக்கைகளை உடப்பில் போடுவதாக பொதுபல சேனா அறித்துள்ளது. ஐ.தே.க மன்னிப்பு கோரியதை அடுத்தே இம் முடிவை பொதுபல சேனா எடுத்துள்ளது.
யாழ்ப்பானம் அமைதியாக இருக்கும்:
மாவீரர் வாரத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் மிக அமைதியாகவே இருக்கும் என தாம் எதிர்பார்ப்பதாக இராணுவ கட்டளைத்தளபதி தெரிவித்துள்ளார்.
மன்னார் ஆயர் படையினரைச் சந்திக்கின்றார்:
வடக்குத் தமிழ் மக்கள் மீது தேவையற்ற பழிகளைச் சுமத்திவருவது தொடர்பாக ஆராய்வதற்காக மன்னார் ஆயர் மன்னார் படைத் தளபதிகளையும் காவல்துறை அதிகாரிகளையும் சந்தித்துப் பேசியுள்ளார்.
விலைகள் உயர்வடையும்:
பாதீட்டு அறிவிப்பின் போது இறக்குமதிப் பொருட்களுக்கு மேலதிக வரி விதிக்கப்பட்டுள்ளதால் உணவுப் பொருட்களின் விலை உயர்வடையும் என பொருளாதார வல்லுனர்கள் கூறியுள்ளனர்.
தனியார் போக்குவரத்து பேருந்துகளுக்கு ஏமாற்றம்:
அறிவிக்கப்பட்டுள்ள 2014ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் எவ்வித நன்மைகளும் தனியார் பேருந்து ஓட்டுனருக்கு வழங்கப்படவில்லை இதனால் தாம் ஏமாற்றம் அடைந்திருப்பதாக தனியார் பேருந்து ஓட்டுனர் சங்கம் தெரிவித்துள்ளது.
– மாயன் –
(இலங்கையில் இருந்து வெளிவரும் வாரமலர் பத்திரிகைகளோடு வணக்கம் LONDON இணையம் வழங்கும் பத்திரிகைக் கண்ணோட்டம். இலங்கையில் இருந்து மாயனின் பார்வையில்)