September 21, 2023 1:41 pm

ஞாயிறு 08/12/2013 : மக்களின் விடிவுக்காக எவ்வளவு தூரமும் பயணிப்போம் – ஆனால் தன்மானத்தை இழக்கமாட்டோம்ஞாயிறு 08/12/2013 : மக்களின் விடிவுக்காக எவ்வளவு தூரமும் பயணிப்போம் – ஆனால் தன்மானத்தை இழக்கமாட்டோம்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

வீரகேசரி :

ஆசிரியரின் பேனாவில் இருந்து:

யாவரும் பேதங்களை மறந்து மக்களுக்கு உதவ முன்வர வேண்டும், அபிவருத்தி அபிவிருத்தி என்று கூச்சலிடுபவர்கள் வன்னிக்கு வந்து மக்கள் ஒரு வேளைக் கஞ்சிக்குப் படும் அவஸ்தையைக் காண வேண்டும். எமது மக்கள் அவ்வாறு அவஸ்த்தைப்படும் போது இந்த மண்ணில் நாம் பேசா மடந்தைகளாக இருக்க முடியாது. எமது உணர்வுகளுக்கு மதிப்பளியுங்கள் எனச் செல்வம் அடைக்கலநாதன் உருக்கமான வேண்டுகோளை விடுத்துள்ளார். அரசியல் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்தவர்களை அடிப்படை உரிமைகளைக் கூடக் கேட்டுப் பெற்றுக்கொள்ள முடியாதிருப்பது கவலைக்குரிய விடயமே. இதனைப் புரிந்து கொண்டு அனைவரும் அல்லல் படும் மக்களுக்கு உதவ முன்வரவேண்டும். அல்லாது விட்டால் நல்லிணக்கம் என்றுமே சாத்தியப்படாது.

 

மக்களின் விடிவுக்காக எவ்வளவு தூரமும் பயணிப்போம் – ஆனால் தன்மானத்தை இழக்கமாட்டோம்:

மக்களின் விடிவிற்காக அரசுடன் இணைந்தொழுகுவதற்குத் தாம் தயாராகவே இருப்பதாக விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். ஆனால் அதற்காக எங்களின் தன்மானத்திற்குப் பங்கம் ஏற்படாத வகையில் அதனை முன்னெடுப்போம் என மேலும் விளம்பியுள்ளார்.

 

ஆயுதங்களைக் களையுங்கள் – சபையில் அரியம்:

வடக்கிலும் கிழக்கிலும் உள்ள அரசியல் கட்சியின் உறுப்பினர்களிடம் உள்ள ஆயுதங்களைக் களையுங்கள் என பாராளுமன்றத்தில் த.தே.கூ நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

இலங்கை தொடர்பில் தொடர் கலந்துரையாடல் – பிரித்தானியா:

இலங்கை தொடர்பாகத் தொடர்ந்து கலந்துரையாடல்களை பிரித்தானியா முன்னெடுக்கவுள்ளது. இக்கலந்துரையாடல்களை பொதுநலவாய நாடுகள் உட்பட பெரும்பாலான சர்வதேச நாடுகளுடன் முன்னெடுக்கவுள்ளதாக பிரித்தானியா அறிவித்துள்ளது.

 

குற்றச்செயல்களுடன் அரசாங்கம் முதல் பிரதேசசபை வரையான அதிகாரிகளுக்குத் தொடர்பு- ஐதேக:

நாட்டில் நடைபெற்றுவரும் பாரிய குற்றச் செயல்களுக்கு மத்திய அரசின் அதிகாரிகள் முதல் பிரதேசசபைகளின் அதிகாரிகள் வரை சம்பந்தப்பட்டுள்ளனர் என ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாச தெரிவித்துள்ளார்.

 

தென்னாபிரிக்க யுத்தம் முடிவடைந்த பின் மண்டேலா மன்னிப்புக் கோரினார்- இங்கு பாற்சோறுண்டு வெற்றிவிழா – ஐ.தே.க;

தென்னாபிரிக்காவில் யுத்தம் முடிவடைந்ததும் நெல்சன் மண்டேலா மக்களின் உயிரிழப்புக்களுக்காக மக்களிடம் மன்னிப்புக் கோரினார். நீங்கள் என்ன செய்தீர்கள். உயிரிழப்புக்களுக்காக பாற்சோறுண்டு வெற்றி விழாக் கொண்டாடினீர்கள். என ஐ.தே.க வின் எம்.பி லக்ஸ்மன் கிரியெல்ல பாராளுமன்றில் தெரிவித்தார்.

 

 

சுடர் ஒளி :

ஆசிரியரின் பேனாவிலிருந்து:

ஜெனீவாவில் மார்ச் மாதத்தில் கடும் நெருக்கடியொன்றை இலங்கை எதிர்கொள்ளும் போலவே உள்ளது. அதற்கான முன்னோட்டமாகவே ஐநாவின் சிறப்புத் தூதர் பெயானி இலங்கையில் தனது பயணத்தை முடித்துக் கொண்டு திரும்பியவுடன் அமெரிக்கப் பிரதிநிதிகள் குழு இலங்கை வந்து திரும்பியுள்ளது. தற்போது இலங்கையின் நடவடிக்கைகள் எவ்வாறு உள்ளன என்பதைத் தெரிந்து கொள்வதற்காகவே அவர்கள் வருகை தந்துள்ளார்கள். அவ்வருகைகளில் அவர்கள் திருப்தியடைந்துள்ளார்களா? என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

 

சர்வதேச விசாரணைக்கான வலுவான பிரேரணையைச் செய்யுங்கள்:

யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திருந்த அமெரிக்க உயர் மட்டக் குழுவினரிடம் “இலங்கையில் நிகழ்ந்துள்ள போர்க்குற்றங்கள் தொடர்பாக சர்வதேச விசாரணையை கோரும் வலுவான பிரேரணையை” ஐநாவின் மனித உரிமைக் கூட்டத் தொடரில் முன்வைக்குமாறு யாழ் சிவில் சமூகம் வலியுறுத்தியுள்ளது.

 

வன்முறைகளை நிறுத்துங்கள்- அமெரிக்கா எச்சரிக்கை:

மனித உரிமை மீறல்கள், ஊடகங்களுக்கு எதிரான நடவடிக்கைகள், சிறுபான்மை மதங்களுக்கு எதிரான நடவடிக்கைகள் போன்ற வன்முறைகள் அனைத்தையும் முடிவிற்குக் கொண்டுவருமாறு இலங்கைக்கு எச்சரிக்கையொன்றை அமெரிக்கா விடுத்துள்ளது.

 

ஜெனீவாவில் ஜப்பான் இலங்கையைக் காப்பாற்றும் – அகாஷி வருகின்றார்:

சர்வதேச விசாரணையொன்றை ஜெனீவாவில் சர்வதேச நாடுகள் கோரலாம் என்னும் நிலை எழுந்துள்ள இச் சந்தர்ப்பத்தில் இலங்கையை மீட்டெடுக்கும் முயற்சியில் ஜப்பான் இறங்கியுள்ளது. ஜப்பானியத் தூதுவர் அகாஷி இவ்விடயம் தொடர்பாக இலங்கைக்கு வருகைதரவுள்ளார்.

 

முஸ்லிம்களே சிந்தியுங்கள் – சம்பந்தர்:

அன்றும் இன்றும் சிறுபான்மை மக்களின் அனைத்து உரிமைகளுக்காகவும் தமிழர்களே இலங்கையில் போராடி வருகின்றார்கள். இதனடிப்படையில் போராடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோட்பாடுகளை முஸ்லிம் மக்கள் உணரவேண்டியது காலத்தின் கட்டாயம் ஆகும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் அவர்கள் திருகோணமலையில் தெரிவித்துள்ளார்.

 

– மாயன் –

(இலங்கையில் இருந்து வெளிவரும் வாரமலர் பத்திரிகைகளோடு வணக்கம் LONDON இணையம் வழங்கும் பத்திரிகைக் கண்ணோட்டம். இலங்கையில் இருந்து மாயனின் பார்வையில்)

 

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஞாயிறு பத்திரிகைகள் 16/02/2014 | “கஞ்சிக்காக நான் போய்திரும்பி வந்த போது என் குழந்தையைக் காணவில்லை” | தாயொருவரின் கதறல் ஞாயிறு பத்திரிகைகள் 16/02/2014 | “கஞ்சிக்காக நான் போய்திரும்பி வந்த போது என் குழந்தையைக் காணவில்லை” | தாயொருவரின் கதறல்

ஞாயிறு பத்திரிகைகள் 26/01/2014 | மன்னார் புதைகுழிகளில் கண்டுபிடிக்கப்பட்ட மண்டையோடுகளின் தொகை தற்போது 44 ஆக அதிகரித்துள்ளதுஞாயிறு பத்திரிகைகள் 26/01/2014 | மன்னார் புதைகுழிகளில் கண்டுபிடிக்கப்பட்ட மண்டையோடுகளின் தொகை தற்போது 44 ஆக அதிகரித்துள்ளது

ஞாயிறு பத்திரிகைகள் 19/01/2014 | அனந்தியை அச்சுறுத்துவதை விட்டு அவரது கோரிக்கையின் நியாயத்தைக் கவனியுங்கள் – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு:ஞாயிறு பத்திரிகைகள் 19/01/2014 | அனந்தியை அச்சுறுத்துவதை விட்டு அவரது கோரிக்கையின் நியாயத்தைக் கவனியுங்கள் – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு:

ஆசிரியர்