சுடர் ஒளி :
ஆசிரியரின் பேனாவிலிருந்து:
யுத்தத்தின் இறுதிப்பகுதியில் கொல்லப்பட்டவர்கள் மற்றும் காணாமற் போனவர்கள் தொடர்பாக சுயாதீன விசாரணைகளைச் செய்யவில்லை என இலங்கை மீது கடுமையான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படும் இவ் வேளையில் கேதீஸ்வரக் கோவிலுக்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்ட புதைக்குழி பெரும் விவகாரத்தை கிளறியுள்ளது. தெற்கிலோ வடக்கிலோ ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்ட புதைக்குழிகள் தொடர்பாக குற்றவாளிகள் இனங்காணப்படவுமில்லை, தன்டிக்கப்படவும் இல்லை. இந் நிலையில் இப் புதைக்குழிகள் தொடர்பாக உரிய விசாரணை நடவடிக்கைகளை முன்னெடுக்காது விட்டால் சர்வதேச மனித உரிமை மீறல் நெருக்கடியில் இலங்கை சிக்கிவிடும்.
மத்திய கிழக்கு நோக்கி மஹிந்த:
ஆறு நாட்கள் உத்தியோகபூர்வப் பயணமொன்றை மேற்கொண்டு மஹிந்த மத்திய கிழக்கு நோக்கிப் பயணமாகியுள்ளார். இப்பயணத்தில் ஜோர்தான், பலஸ்தீன் இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கும் செல்லவுள்ளார்.
செய்மதித் தொலைபேசிகளுடன் ஒருவர் கைது:
தொலைத் தொடர்புகள் ஆணைக்குழுவின் அனுமதியின்றி 60 செய்மதித் தொலைப்பேசிகளைக் நாட்டுக்குள் கொண்டுவர முயன்ற ஒருவர் கைதாகியுள்ளார். அத்துடன் அத் தொலைபேசிகளுக்கு தேவையான சுமார் 200 உபகரணங்களையும் அவர் தன்னகத்தே வைத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இலங்கை தனிமைப்படுத்தப்படவில்லை – சனாதிபதி:
மனித உரிமை மீறல்களால் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள இலங்கை சர்வதேச நாடுகளிடமிருந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக வெளியாகிய செய்திகளில் உண்மை ஏதும் இல்லை என சனாதிபதி தெரிவித்துள்ளார்.
போர்க்குற்ற விசாரணைகளுக்கான அமெரிக்கத் தூதர் வருகை:
சர்வதேச நாடுகளில் போர்க்குற்றங்கள் தொடர்பான அமெரிக்க இராசாங்க திணைக்கள அதிகாரி இலங்கை வரவுள்ளார். இவரது வருகை இலங்கை அரசை மேலும் அதிர்சியடைய வைத்துள்ளது.
– மாயன் –
(இலங்கையில் இருந்து வெளிவரும் வாரமலர் பத்திரிகைகளோடு வணக்கம் LONDON இணையம் வழங்கும் பத்திரிகைக் கண்ணோட்டம். இலங்கையில் இருந்து மாயனின் பார்வையில்)