September 21, 2023 1:59 pm

ஞாயிறு பத்திரிகைகள் 09/02/2014 | எனது ஆட்சியில் சமாதானத்திற்கே முக்கியத்துவம்- சந்திரிகாஞாயிறு பத்திரிகைகள் 09/02/2014 | எனது ஆட்சியில் சமாதானத்திற்கே முக்கியத்துவம்- சந்திரிகா

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

வீரகேசரி :

 

ஆசிரியரின் பேனாவில் இருந்து:

தமிழ்த் தேசத்தில் காணி அபகரிப்பு தொடர்பான சர்வதேச மாநாடொன்று இலண்டனில் நடந்து முடிந்துள்ளது. அம் மாநாட்டில் தமிழ் மக்களின் பயன் தரும் காணிகளை பல்வேறு வகைகளில் அரசாங்கம் கைப்பற்றி சிங்கள மேலாதிக்கத்தை நிறுவுவதற்காக இராணுவ நிலைகளை அமைப்பதும் சிங்கள மக்களின் குடியேற்றங்களை அமைப்பதும் ஆகிய செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றது. மக்களின் பாரம்பரியப் பிரதேசங்களில் நிகழும் நில ஆக்கிரமிப்பானது உள்நாட்டில் பெரும் பிரச்சனைகளாக எதிரொலித்து இப்போது சர்வதேச அரங்கில் பேசப்படும் பொருளாகப் போயுள்ளது. தமிழ் மக்களின் துயரைத் துடைப்பதன் ஊடாக உள்நாட்டிலும் உலக அரங்கிலும் அரசு மனிதாபிமானமாக நடக்கின்றது என்பதை தெளிவு படுத்த முடியும்.

 

ஜெனீவாவில் இலங்கை தோற்பது உறுதி – தேசப் பற்றுள்ள தேசிய இயக்கம்:

அமெரிக்காவால் கொண்டுவரப்படவுள்ள இலங்கைக்கு எதிரான பிரேரணையில் வெற்றியடைவதை இலக்காகக் கொண்டு அமெரிக்கா கடுமையாக நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. எனவே அந்தப் பிரேரணை வெற்றிபெறும். ஆகவே அதற்குப் பின்னர் எவ்வகையான சவால்கள் ஏற்படும் என முன்னுணர்ந்து அதற்கேற்ற நடவடிக்கைகளை தற்போதே ஸ்ரீலங்கா அரசாங்கம் தயாராக வேண்டும் என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தினர் கூறியுள்ளனர்.

 

முறையான வெளிநாட்டுக் கொள்கைகள் இல்லை-பொதுபலசேனா:

இலங்கையிடம் முறையான வெளிநாட்டுக் கொள்கைகள் எவையும் இல்லை. அதனாலேயே சர்வதேச அழுத்தங்கள் அதிகமாக இருக்கின்றது என பொதுபலசேனா கூறியுள்ளது.

 

எனது ஆட்சியில் சமாதானத்திற்கே முக்கியத்துவம்- சந்திரிகா:

எனது ஆட்சியின் போது இராணுவ நடவடிக்கைகளின் மூலம் விடுதலைப் புலிகளை அழிப்பதைக் காட்டிலும் சமாதானத்தின் மூலமே அவர்களை அணுக முயற்சித்தேன் என முன்னாள் சனாதிபதி சந்திரிகா தெரிவித்துள்ளார்.

 

தீர்மானம் எங்கோ! மீனவர்கள் எங்கோ!

இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையே தத்தமது மீனவர்கள் தொடர்பாக பேச்சுவார்த்தைகள் நடத்தி தீர்மானம் காணப்பட்ட போதிலும் அத் தீர்மானத்தைக் கைவிட்டு இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறியே வருகின்றார்கள். தற்போதுவரை சுமார் 112 இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் கைதாகியுள்ளனர்.

 

அரசின் நடவடிக்கைகளாலேயே அமெரிக்கா பிரேரணையை முன்வைத்துள்ளது – தம்மில அமர தேரர்:

ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா நடவடிக்கை எடுப்பதற்கு கால்கோலாகியது இலங்கைதான் என தம்மில அமர தேரர் தெரிவித்துள்ளார். யுத்தம் முடிவடைந்த பின் சரியான திட்டங்களை அரசு முன்னெடுத்திருந்தால் இந்நிலை ஏற்பட்டிருக்காது என அவர் மேலும் தெரிவித்தார்.

 

வடமாகாண சபையின் தீர்மானம் ஜெனீவாவில் தாக்கத்தை கொடுக்காது. டி யூ குணசேகர:

வடக்கு மாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் எவ்வகையிலும் ஜெனீவாவில் அமெரிக்காவால் கொண்டு வரப்படவுள்ள பிரேரணையை வலுப்படுத்தாது என சிரேட்ட அமைச்சர் டி யூ குணசேகர தெரிவித்துள்ளார்.

 

சிறையில் வாடுபவர்களை மீட்க விரைவான நடவடிக்கைகள் அவசியம்:

பல வருடங்களாகச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழர்களை மீட்பதற்கு விரைவான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அனுராதபுரம் மறை மாவட்ட ஆயர் தெரிவித்துள்ளார் என மட்டக்களப்பு ஆயர் தகவல் வெளியிட்டுள்ளார்.

 

 

– மாயன் –

(இலங்கையில் இருந்து வெளிவரும் வாரமலர் பத்திரிகைகளோடு வணக்கம் LONDON இணையம் வழங்கும் பத்திரிகைக் கண்ணோட்டம். இலங்கையில் இருந்து மாயனின் பார்வையில்)

 

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஞாயிறு பத்திரிகைகள் 16/02/2014 | “கஞ்சிக்காக நான் போய்திரும்பி வந்த போது என் குழந்தையைக் காணவில்லை” | தாயொருவரின் கதறல் ஞாயிறு பத்திரிகைகள் 16/02/2014 | “கஞ்சிக்காக நான் போய்திரும்பி வந்த போது என் குழந்தையைக் காணவில்லை” | தாயொருவரின் கதறல்

ஞாயிறு பத்திரிகைகள் 26/01/2014 | மன்னார் புதைகுழிகளில் கண்டுபிடிக்கப்பட்ட மண்டையோடுகளின் தொகை தற்போது 44 ஆக அதிகரித்துள்ளதுஞாயிறு பத்திரிகைகள் 26/01/2014 | மன்னார் புதைகுழிகளில் கண்டுபிடிக்கப்பட்ட மண்டையோடுகளின் தொகை தற்போது 44 ஆக அதிகரித்துள்ளது

ஞாயிறு பத்திரிகைகள் 19/01/2014 | அனந்தியை அச்சுறுத்துவதை விட்டு அவரது கோரிக்கையின் நியாயத்தைக் கவனியுங்கள் – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு:ஞாயிறு பத்திரிகைகள் 19/01/2014 | அனந்தியை அச்சுறுத்துவதை விட்டு அவரது கோரிக்கையின் நியாயத்தைக் கவனியுங்கள் – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு:

ஆசிரியர்