Sunday, January 23, 2022

இதையும் படிங்க

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 22.01.2022

மேஷம்மேஷம்: புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகளின் தனித்திறமைகளை கண்டறிவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். புதியவர்கள் நண்பர்களாவார்கள். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். கனவு...

உங்கள் வீட்டில் பால் அடிக்கடி பொங்கி வழிந்து விடுகிறதா?

ஒரு மனிதன் தன் வாழ்நாளில் தாய்ப்பாலை விட பசும்பாலே அதிகமாக குடித்து வளர்கிறான். இதனால் பசுவிற்கு நாம் செய்யும் ஒரு சிறு விஷயம்...

வறுமையை நீக்கும் குபேரன் ஆலயங்கள்!

செல்வ வளம் தரும் அஷ்டதிக் பாலகர்களில், குபேரனும் ஒருவர். செல்வங்களுக்கு அதிபதியான லட்சுமியின், நவநிதிகளை வைத்திருந்து, பக்தர்களுக்கு பகிர்ந்தளிக்கும் பணியைச் செய்து வருகிறார். குபேரனை வேண்டினால், வறுமை நீங்கி செல்வம்...

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 21.01.2022

மேஷம்மேஷம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துகொள்வீர்கள். உத்தியோகத்தில்...

விரும்பிய வரங்களை அளிக்கும் விரதங்கள்

விரதம் இருப்பதனால் உடல் மற்றும் மன நிலையில் அமைதி மற்றும் புத்துணர்ச்சி ஏற்படுகிறது. உடலில் உள்ள செல்கள் புத்துயிர் பெற்று, நோய் எதிர்ப்பு...

பெண் சாபத்தால் ஏற்படும் விளைவுகள்!

தாயின் அன்பும் ஆதரவும் கிடைக்காமல் இளவயதில் தாயை இழக்கும் அல்லது பிரியும் நிலை ஏற்படும். காதல் தோல்வி, மனைவியால் சித்ரவதை அல்லது அடங்காத மனைவியுடன் வாழ வேண்டிய கட்டாயம். கணவன்,...

ஆசிரியர்

கற்பக விருட்ஷத்தின் கதை .

எந்தக் காரியத்தைத் தொடங்கினாலும், அது தடையின்றி முழுமையாக நிறைவேற, விநாயகப் பெருமானை வழிபட்டுத் தொடங்குவதுதானே இந்து தர்ம கோட்பாடு!

ஸ்ரீவிநாயகர் புராணம் நமக்குத் தெரிந்ததுதான். அதில் அநேகம் பேருக்குத் தெரியாத கதை ஒன்றைச் சொல்கிறேன், கேளுங்கள்!

விரும்புகிற செல்வங்களை எல்லாம் வழங்கவல்ல பசு ‘காமதேனு’; விருட்சம் (மரம்) கற்பக விருட்சம். ஸ்ரீமகாலக்ஷ்மிக்கு இணையாகப் போற்றிப் பூஜிக்கப்படுவது காமதேனு; மிக உயர்ந்ததும் புனிதமானதும், கேட்டதை வழங்கவல்லதுமான விருட்சம்- கற்பகம். இந்த இரண்டுமே, திருப்பாற்கடலைக் கடைந்தபோது தோன்றியவை எனத் தெரிவிக்கின்றன புராணங்கள். இதில், கற்பக விருட்சம் உருவாகக் காரணமானது ஸ்ரீகணபதியின் பேரருளே என்றால், ஆச்சரியப்படுவீர்கள்.

த்ரேதா யுகத்தின் ஆரம்ப காலம் அது. தண்டகாரண்யம் எனும் வனத்தின் துத்தூரம் என்ற பகுதியில், விப்ரதன் என்று ஒரு வேடன் வாழ்ந்து வந்தான். மிருகங்களை வேட்டையாடி, தன்னையும் தன் கூட்டத்தினரையும் பசியின்றிப் பாதுகாத்து வந்தான். திடீரென மழை இன்றி , வனம் வறண்டது. பறவைகளும் மிருகங்களும் புகலிடம் தேடி, வனத்தை விட்டு அகன்றன. விப்ரதன் தன் கூட்டத்தாருடன் உணவும் தண்ணீருமின்றித் தவித்தான். வேறு வழியின்றி, வழிப்பறிக் கொள்ளையில் இறங்கினான்.

நல்லவர்கள், சந்தர்ப்பவசத்தால் கூடத் தவறு செய்யலாகாது என்பதால், அவர்களைத் தடுத்தாட்கொள்பவன் இறைவன். வழிப்பறியில் ஈடுபட்ட முதல் நாள், முதல் ஆளாக, அந்தணன் ஒருவனைப் பின் தொடர்ந்தான் விப்ரதன். இதை அறிந்த அந்தணன் ஓட, அவனைத் துரத்திக்கொண்டு விப்ரதனும் ஓடினான். அந்த வனத்தில் இருந்த பாழடைந்த ஒரு விநாயகர் கோயிலுக்குள் நுழைந்து, மறைந்தான் அந்தணன்.

வேடன் கண்ணப்பனை ஆட்கொள்ள, காளஹஸ்தி தலத்தில் சிவனார் நடத்திய திருவிளையாடலைப் போலவே, இங்கு மகா கணபதி மகத்துவம் ஒன்றைப் புரிந்தார்.

அந்த கணபதி கோயிலும், அருகில் இருந்த தெய்வீகப்   பொய்கையும் விப்ரதனைப் பெரிதும் கவர்ந்தன. அதனால், அவன் அங்கேயே தங்கி விட்டான். உணவுக்கும் தண்ணீருக்கும் ஏதேனும் வழி பிறக்குமா என யோசித்தான். அப்போது, அங்கு முக்கால முனிவர் என்பவர் வந்தார். அவரை வழிமறித்து, கூரிய அம்பால் குத்தி விடுவதுபோல் பயமுறுத்தினான் விப்ரதன். ஆனால் முனிவரோ சற்றும் பதறாமல், கருணை பொங்கும் விழிகளுடன் அவனைப் பார்க்க… மகுடிக்குக் கட்டுப்பட்ட பாம்பு போல், அந்தக் கருணைக்குக் கட்டுண்டு, அம்பைக் கீழே போட்டான் விப்ரதன். அவரின் பாதங்களில் விழுந்து வணங்கியவன், அப்படியே மூர்ச்சையானான். தன் கமண்டல நீரால் அவன் முகத்தில் தெளித்த முனிவர், அவனது புறக்கண்களை மட்டுமின்றி அகக்கண்களையும் திறந்தார். ‘என் பாபங்களைப் போக்கி அருளுங்கள்’ என வேண்டினான் விப்ரதன்.

உடனே முனிவர், அருகில் கிடந்த காய்ந்த மரக்கிளையை எடுத்து, அவனிடம் கொடுத்தார். ”இந்த மரக்கிளையை, இந்தத் தடாகத்தின் கரையில் நட்டு, மகா கணபதி மந்திரத்தைத் தொடர்ந்து ஜபித்து வா! இந்த மரக்கிளை துளிர்விடும்வரை, ஜபிப்பதை நிறுத்தாதே. இது துளிர்க்கும்போது உன் பாவம் நீங்கி, புனிதனாவாய்; தேவர்களைப்போல் உயர்ந்தவனாய்!” என அருளி, மந்திரத்தையும் உபதேசித்தார். ஏற்கெனவே உணவின்றி உபவாசமாக இருந்து, தடாகத்தில் நீராடி, மகா கணபதியை விக்கிரக வடிவில் தரிசித்திருந்த விப்ரதன், உபதேசம் பெறத் தகுதியான நிலையில் இருப்பதை அறிந்து, அவன் தலை மீது கை வைத்து, ‘ஓம் ஸ்ரீம் ஹ்ரீம், க்லீம், க்லௌம், கம், கணபதயே நமஹ!’ என்கிற மகிமை மிகு மகா கணபதி மந்திரத்தை உபதேசித்தார், முனிவர்.

‘வளைந்த துதிக்கையும், பேருடலும், கோடி சூரியனின் பேரொளியைக் கொண்டவருமான கணபதி தேவா! எல்லா நற்காரியங் களும் தடையின்றி நடக்க அருள்புரி வீராக!’ எனும் பொருள் கொண்ட, ‘வக்ரதுண்ட மஹாகாய, சூர்ய கோடி ஸமப்ரபா, அவிக்னம் குருமே தேவ ஸர்வ கார்யேஷ ஸர்வதா’ என்ற கணபதி காயத்ரியையும் உபதேசித்தார்.

பிறகு, முனிவர் சொன்னபடி ஜபத்தில் ஈடுபடலானான் விப்ரதன். காலங்கள் ஓடின. அன்ன ஆகாரம் இன்றி, அவன் செய்த தவத்துக்குப் பலன் கிடைத்தது. காய்ந்த அந்த மரக்கிளை, துளிர்க்கத் துவங்கியது.

தன்னையே அனுமனாக பாவித்துக் கொண்டு, தீவிரமாக ராமஜபம் செய்த ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்ஸருக்கு வால் முளைத்ததாக ஸ்ரீராமகிருஷ்ண வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல், நம்பிக்கையுடன் கணபதி மந்திரத்தை இடையறாது உச்சரித்த விப்ரதனுக்கு, கணபதியைப் போலவே தும்பிக்கை வளர்ந்தது. அவன் முன் தோன்றிய விநாயகர், ”மகனே, பக்தியுடன் எனது மந்திரத்தை ஆழ்ந்து ஜபித்ததால், நீயும் என் போன்ற உருவத்தைப் பெற்றுவிட்டாய். புருவங்களுக்கு மத்தியில் தும்பிக்கையைப் பெற்றிருப்பதால், நீ ‘புருசுண்டி’ என அழைக்கப்படுவாய். உனது மந்திர பலத்தால் துளிர் விட்ட இந்த மரம், கற்பக விருட்சமாகிவிட்டது. எந்தச் செல்வத்தைக் கேட்டாலும், அதைத் தரும் வல்லமை இதற்கு உண்டு. என்ன வரம் வேண்டும், கேள்!” என அருளினார். இதில் சிலிர்த்தவன், ”தங்களின் தரிசனமே கிடைத்து விட்டது. இதற்கு மேல் வேறு என்ன வேண்டும், சுவாமி! தங்களின் திருவடியைச் சரணடைந்து தொண்டாற்றுகிற பாக்கியம் மட்டுமே போதும்!” என்றான்.
”சரியை, கிரியை, யோகம், ஞானம் எனும் நான்கினைக் கடைப்பிடித்து, விரைவில் எம்மை அடைவாயாக!” என்று அருளி மறைந்தார் மகா கணபதி. அப்படியே செய்யத் துவங்கினார் புருசுண்டி.

அவரின் பெருமையை நாரதர் மூலம் அறிந்த தேவேந்திரன், புருசுண்டியைத் தரிசிக்க பூலோகம் வந்தான். தவத்தில் ஈடுபட்டிருந்த புருசுண்டியிடம் பக்தனாக, யாசகனாக வந்து நின்றான் தேவேந்திரன். எது கேட்டாலும் தருவதாகக் கூறிய புருசுண்டி யிடம், கற்பக விருட்சத்தைத் தரும்படி கேட்டான். அதன்படி, கற்பக விருட்சத்தை தேவேந்திரனுக்குத் தானமாகத் தந்தருளினார் புருசுண்டி. விநாயகர் தந்ததையே மனமுவந்து தானமாக இந்திரனுக்கு வழங்கிய அந்தக் கணத்தில், அங்கு தோன்றிய மகா கணபதி, புருசுண்டியை தன் திருப்பாதத்தில் சேர்த்துக் கொண்டு, அவருக்குப் பிறவா நிலையை அருளினார். ‘தவம் சிறந்தது. அதிலும், தவத்தின் பலனையே தானமாகத் தருவது மிகச் சிறந்தது’ எனும் உயரிய தத்துவத்தை இதன் மூலம் உலகுக்கு உணர்த்தியுள்ளார் ஸ்ரீவிநாயகப்பெருமான்.

இதையும் படிங்க

ஜென்ம சனி காலத்தில் இந்த பரிகாரங்களை செய்தால் போதும்….

ஜென்ம சனி காலத்தில் அந்த ஜாதகர் பல விதமான பிரச்சனைகளை சந்திக்க கூடும். “ஜென்ம சனி” என்றால் என்ன என்பதை குறித்தும், அதற்கான...

சனிக்கிழமை விரதத்தை கடைபிடிக்கும் முறை!

நினைத்த காரியங்கள் நிறைவேற வேண்டும் என்பதற்காகவே விரதங்கள் இருக்கின்றோம். அதிலும் பெரும்பாலும் செல்வம், ஆரோக்கியம், ஆயுள் இவை மூன்றும் தான் வேண்டுதலுக்கான முக்கிய காரணிகளாக இருக்கும். இவை அனைத்தும் உங்களுக்கு...

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 23.01.2022

மேஷம்மேஷம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும் . சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். விருந்தினர்களின் வருகை அதிகரிக்கும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்தியோகத்தில்...

முருகனிடம் திருஊடல் நடத்திய தெய்வானை

தைப்பூச நிறைவு நாளான நேற்று முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானையுடன் புதுச்சேரி சப்பரத்தில் வீதிஉலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. தைப்பூச நிறைவு...

கண்நோய் பாதிப்பு உள்ளவர்கள் வழிபட வேண்டிய கோவில்

எண்கண் திருத்தலம் என்கிற பிரம்மபுரீஸ்வரர் திருக்கோவிலில் கண்நோய் பாதிப்பு உள்ளவர்கள், இறைவனை வேண்டி வழிபட்டால் அந்தக் குறை விரைவில் அகலும் என்பது நம்பிக்கை.

விநாயகரை விரதம் இருந்து வழிபட வேண்டிய நாளும்… தீரும் பிரச்சனைகளும்….!

அரச மரத்தின் அடியில், மேற்கு நோக்கி வீற்றிருக்கும் விநாயகப் பெருமானை, பூச நட்சத்திரம் அன்று விரதம் இருந்து அபிஷேகம் செய்து வழிபாடு செய்தால், பணப் பற்றாக்குறை தீரும். செல்வ வளம்...

தொடர்புச் செய்திகள்

கவிஞர் கவிகூத்தனின் “கழுதை சுமந்த கவிதைகள்” நூல் இலண்டனில் வெளியீடு

புலம்பெயர் தேசத்தில் பலராலும் அறியப்பட்ட கவிஞர் கவிகூத்தனின் "கழுதை சுமந்த கவிதைகள்" நூல் இன்று இலண்டன் மேற்கு நகரில் அமைந்துள்ள ஹரோ வீல்ட் ஐயப்பன் ஆலய மண்டபத்தில் மிகவும் சிறப்பாக...

இலங்கையில் அரசாங்கத்தின் வசமுள்ள நிறுவன ஊழியர்களுக்கும் 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு!

அதற்கமைய, கூட்டுத்தாபனம் மற்றும் ஏனைய அரச நிறுவனங்களின் ஊழியர்களுக்கும் இந்த மேலதிக கொடுப்பனவை வழங்குவதற்கான சுற்றுநிருபம் திறைசேரி செயலாளரால் அனுப்பப்பட்டுள்ளது. இம்மாதம் முதல் வழங்கப்படவுள்ள இந்த...

இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா தொற்று!

பொதுமக்கள் பொறுப்புடன் செயற்பட்டால் மாத்திரமே, கொரோனா பரவல் நிலையைக் கட்டுப்படுத்த முடியும் என இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோ புள்ளே தெரிவித்துள்ளார். தற்போதைய சுதந்திரமான சூழலை...

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

இந்தியாவின் சிறந்த தேர்தல் அதிகாரியாக சத்யபிரதா சாகு தேர்வு!

புது டெல்லி: மாநில தேர்தல் அதிகாரிகளில் சிறந்த தேர்தல் அதிகாரியாக தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அறிவிக்கப்பட்டுள்ளார். நாடு முழுவதும்...

ராஜபக்ஷக்களிடத்தில் இனியும் நீதி -நியாயத்தினை எதிர்பார்க்க முடியாது!

ராஜபக்ஷக்களிடத்தில் இனியும் நீதி, நியாயத்தினை எதிர்பார்க்க முடியாது என்று குறிப்பிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், உடனடியாக சர்வதேசத்தின் தலையீட்டைக் கோரும் செயற்பாடுகள் ஆரம்பிக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட இயக்குனர் செல்வராகவன்

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக 2ம் அலையின்போது அரசியல் தலைவர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். தற்போது மூன்றாவது அலையின்போதும்...

மேலும் பதிவுகள்

மேற்கு உத்தரபிரதேசத்தில் அமித் ஷா வீடு, வீடாக சென்று ஆதரவு திரட்டினார்!

லக்னோ:உத்தரபிரேச மாநில சட்ட சபைக்கு பிப்ரவரி 10-ந் தேதி முதல் மார்ச் 7-ந் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. முதல் கட்ட தேர்தலுக்கு...

50 வயதும்… ஆரோக்கியமான வாழ்க்கை முறையும்…!

புகைப்பழக்கம், மதுப்பழக்கம், உடல் இயக்கமின்மை, உணவு தரத்தில் குறைபாடு ஆகியவை 60 சதவீத அகால மரணத்துக்கும், ஆயுட்காலத்தில் 7.4 ஆண்டுகள் முதல் 18 ஆண்டுகள் வரை குறைவதற்கும் காரணமாக அமைந்திருப்பதாக...

ஆழமான கடன்பொறி பற்றி அச்சத்தை வெளிப்படுத்தும் வாங் யின் விஜயம்!

சீன வெளிவிவகார அமைச்சரின் மாலைதீவு மற்றும் இலங்கைக்கான விஜயங்கள் ஆழமான கடன் பொறி பற்றிய அச்சத்தை உருவாக்குகின்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகெங்கிலும் ஒமிக்ரோன் மாறுபாட்டால் இயக்கப்படும்...

பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம்!

டெல்லி: பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடக்கிறது.. இந்த கூட்டத்தில் நாட்டின் பொருளாதார விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தசுன் சானக்கவின் போராட்டம் வீண் – இலங்கையை வீழ்த்தியது சிம்பாப்வே!

இலங்கைக்கு எதிராக கண்டி பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் நேற்று(செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற 2 ஆவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் சிம்பாப்வே 22 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

அமெரிக்கா செல்லும் விமானங்களை இரத்து செய்தது ஏர் இந்தியா!

இந்தியா – அமெரிக்கா இடையே செல்லும் 14 விமானங்களை ஏர் இந்தியா நிறுவனம் இரத்து செய்துள்ளது. அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள 5ஜி அலைக்கற்றை விமானப் போக்குவரத்தினை...

பிந்திய செய்திகள்

கவிஞர் கவிகூத்தனின் “கழுதை சுமந்த கவிதைகள்” நூல் இலண்டனில் வெளியீடு

புலம்பெயர் தேசத்தில் பலராலும் அறியப்பட்ட கவிஞர் கவிகூத்தனின் "கழுதை சுமந்த கவிதைகள்" நூல் இன்று இலண்டன் மேற்கு நகரில் அமைந்துள்ள ஹரோ வீல்ட் ஐயப்பன் ஆலய மண்டபத்தில் மிகவும் சிறப்பாக...

இலங்கையில் அரசாங்கத்தின் வசமுள்ள நிறுவன ஊழியர்களுக்கும் 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு!

அதற்கமைய, கூட்டுத்தாபனம் மற்றும் ஏனைய அரச நிறுவனங்களின் ஊழியர்களுக்கும் இந்த மேலதிக கொடுப்பனவை வழங்குவதற்கான சுற்றுநிருபம் திறைசேரி செயலாளரால் அனுப்பப்பட்டுள்ளது. இம்மாதம் முதல் வழங்கப்படவுள்ள இந்த...

இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா தொற்று!

பொதுமக்கள் பொறுப்புடன் செயற்பட்டால் மாத்திரமே, கொரோனா பரவல் நிலையைக் கட்டுப்படுத்த முடியும் என இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோ புள்ளே தெரிவித்துள்ளார். தற்போதைய சுதந்திரமான சூழலை...

ஜாதி, மதம் கடந்து நாட்டு முன்னேற்றத்திற்கு சேவையாற்றுங்கள்!

புது டெல்லி:என்.சி.சி மாணவர்கள் மதம், ஜாதி, வகுப்பு பிரிவினைகளை கைவிட்டு, நாட்டின் முன்னேற்றத்திற்காக சேவையாற்ற வேண்டும் என பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். இந்த...

திருமணத்திற்கு தயாராகும் பெண்கள் எவற்றில் கவனம் செலுத்த வேண்டும்…

பெண்களின் வாழ்க்கையில் திருமணம் முக்கிய நிகழ்வாகக் கருதப்படுகிறது. திருமண நாளுக்கு தயாராகும் பெண்கள், எவற்றில் எல்லாம் கவனம் செலுத்த வேண்டும் என்று பார்ப்போம்.

இதயத்தை பலப்படுத்தும் காலிபிளவர் முட்டை பொடிமாஸ்

காலிபிளவரில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ளதால் இது ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பை கரைக்கும். இதை சமைப்பதற்கு அதிக நேரம் எடுத்துக் கொண்டால்,...

துயர் பகிர்வு