திருநீறின் பயன்பாட்டை சரியாக சொல்லி புரிய வைக்க முடியாது, அதை அனைத்து தலைமுறையினரும் பயன்படுத்த வேண்டும் என்பதற்காக தான், நிலையில்லா வாழ்வின் நிலையை உணர்த்தி திருநீற்றை அணியும் பழக்கத்தை வைத்திருக்க வேண்டும் என்பதற்காக, மனிதம் மிகவும் நம்பக்கூடிய கடவுள் நம்பிக்கையுடன் இணைத்தான்.
மதத்தை காட்டி விஞ்ஞானத்தை அதில் வைத்ததினால் இன்றும் நாம் திருநீறு அணியும் நல்ல பழக்கத்தை வைத்துள்ளோம்.
புருவ மத்தியில் (ஆக்ஞா சக்கரம்) – ஞானத்தை ஈர்க்க வல்லது.
தொண்டைக்குழியில் பூசுதல் (விசுத்தி சக்கரம்) – நம் சக்தி அதிகமாகும்.
நெஞ்சுக்கூட்டின் மத்தியில் திருநீறு தரித்தால் நம் உடல் தெய்வீக அமைப்பை பெறும்.
திருநீறு மோதிர விரலாம் எடுத்து பூச வேண்டும். மோதிர விரல் நம் உடலின் பவித்திரமான பாகமாக பார்க்கப்படுகிறது.
திருநீறு நாம் குளித்த பின்னர் பூசுவது தான் மிக சரியான முறை. சில விதிவிலக்காக வயோதிகம், உடல்நலக்குறைவு, ஆபத்து காலத்தில் குளிக்காமல் பூசுவது தவறில்லை. நம் உடல் தூய்மையை விட உள்ளத்தூய்மை மிக முக்கியமானது.
இருப்பினும் சோம்பலின் காரணமாக அதையே வாடிக்கையாக்கிக் கொள்ளாமல் இருப்பது நல்லது.
திருநீறு அருமருந்து என்பதை உணர்ந்து இனியேனும் நாம் அன்றாட திருநீறு அணிவதை பழக்கமாக மாற்றிக்கொள்வோம்.. ஓம் நமச்சிவாய…