குழந்தை பாக்கியம் இல்லாதவரா நீங்கள் இதை செய்யுங்கள்

ஒருவரது ஜாதகத்தில் லக்கனத்தில் இருந்து 2, 4, 7, 8, 12-ம் இடங்களில் ராகு இருந்தால் அது நாக தோஷம் ஆகும். இதனால் திருமணம் கைகூடுவது தள்ளிக்கொண்டே போகும்.

ஒருவர் ஜாதகத்தில் லக்னத்தில் ராகு, ஏழாம் இடத்தில் கேது இருந்தால் அந்த ஜாதகருக்கு நாகதோஷத்தால் திருமண தடை ஏற்படும். ஜன்ம லக்னத்திற்கு 5-ம் இடம் புத்திர ஸ்தானம் ஆகும். புத்திர ஸ்தானத்திற்கு 1,5,9 ஆகிய மூன்று திரிகோண ஸதானங்களில் எங்காவது ராகு அல்லது கேது இடம் பெற்றிருந்தால் அது புத்திர தோஷத்தை அளிக்கக்கூடியது. இவர்கள் அடிக்கடி சர்ப்ப சாந்தியைச் செய்து கொள்ள நன்மை உண்டாகும். மேலும் நாக தோஷத்தால் மகப்பேறு இல்லாதவர்கள் வேப்ப மரம் நடுவது நன்மை தரும்.

ஆசிரியர்