அஷ்டமி – நவமி நல்லதா? கெட்டதா?

மனிதனின் ஆன்மாவுக்கும் விண்ணுலக நிகழ்வளுக்கும் தொடர்பு உண்டு இதை சித்தர்கள் அண்டமே பிண்டம் அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் உள்ளது என்று சொல்கிறார்கள் .

ஒரு ஒரு தித்திக்கும் நம் ஆன்மா தொடர்ப்பு கொள்கிறது ,அமாவசை தர்ப்பணம் ,பௌர்ணமி தரிசனம், மற்றும் தான தர்ம செயல்கள் எல்லாம் திதியுடன் சேரும்பொழுது தெய்வத்தை அடைகிறது .

தேய் பிறை புதன் கிழமை அஷ்டமி திதியில் பைரவர் அவதாரம் எடுத்து மகாதேவர் என்கிற சிவபெருமான் பூமிக்கு வந்தார் . இவரை வணங்கி தனக்கு அருளும் ,ஆசியும் வேண்டும் என்று ஆயுளை அழிவில்லா பொருளை, ஆன்ம சாந்தியை, தரும் சனி தேவர் பணிந்தார் .

சோதிடத்தில் சனியும் புதனும் நண்பர்கள் என்றும் புதன் கிழமை வரும் அஷ்டமி அன்று செய்யும் காரியம்கள் அனைத்தும் மேன்மை தரும் என்று சொல்கிறது.

வியாழன் அன்று வரும் அஷ்டமி வளரும் பலனை (அட்சயம் )தரும் தன்மை உடையது என்றும் ,

வெள்ளியன்று வரும் அஷ்டமி குபேர தன்மைகளை தரும் என்றும் சோதிட நூல்கள் சொல்கிறது .

பொதுவாக அஷ்டமி என்றால் கம்சனை வதம் செய்ய கிருஷ்ணன் பிறந்த தினம் என்றும் ,தாய் மாமனுக்கு ஆகாது என்றும் சிலர் சொல்வர் . 108 அஷ்டமிக்கு அம்மை அப்பனை (சிவ சக்தி)தரிசனம் செய்வதவர்களை சனியும் அஷ்டம விதியும் ஒன்றும் செய்யாது அது விலகி செல்லும் என்று மகா முனிவர் அகத்தியர் சொல்கிறார் .

சனியின் சாபம் ,கோபம் உள்ளவருக்கு மட்டும் தான் அஷ்டமியில் சில விபத்துகள் நடக்கிறது, சிலருக்கு இரவு துக்கம் கெடுகிறது , சிலருக்கு காரிய தடைகள் வருகிறது என்று ஒரு சில ஜோதிடர்கள் கூறுகின்றனர்.

அஷ்டமி அன்று என்ன என்ன காரியங்கள் செய்யலாம் என்று ஜோதிட நூல்கள் தெளிவாக விளக்கமாக கூறியுள்ளது.

அஷ்டமி அழிக்கும் தன்மை உடைய திதி அதனால் சண்டை துவங்க (போர்) காவல் துறைக்கு செல்ல, தீய செயல்களை தடுக்க ஹோமம், பூசைகள் செய்வது,கடன் தொகையை அடைக்க அஷ்டமி திதி பயன்படும்.

இதை மையமாக வைத்து சோதிடர்கள் நல்ல காரியம்களை அஷ்டமியில் துவங்க வேண்டாம் என்பார்கள் .

நவமி திதி சுப திதி –சரஸ்வதி தேவி ஹயக்ரீவரை குருவாக ஏற்ற திதி ,

வெள்ளியுடன் சேரும் நவமியில் சரஸ்வதி மிகவும் பலம் கொண்டு விளங்குகிறாள் என்று நூல்கள் சொல்கிறது … அவசியமாக அஷ்டமியில் ஒரு செயலை செய்ய வேண்டும் என்றாலும் ,பயணம் செல்லவேண்டும் என்றாலும் விநாயகர்/துர்க்கை பாதத்தில் ஒரு எலுமிச்சை பழம் வைத்து பூசை செய்து அதை கைகளில் வைத்து கொண்டு செயலில் இறங்கலாம் . செயல் முடிந்தவுடன் அதை ஓடும் நீரில் சேர்த்துவிடவேண்டும்.

ஆசிரியர்