ருத்ராஷத்தை போன்று காட்சி தரும் பத்ராஷம், சத்ராட்சம்.

ருத்ராஷ மரம் இலையோ கார்பஸ் வகையைச் சேர்ந்தது. ஆசியா கண்டத்தின் கிழக்கு, மேற்கு பகுதிகளிலும் மலேஷியா, ஆஸ்திரேலியா, பசுபிக் தீவு மற்றும் உலகின் பல பகுதிகளில் இம்மரம் காணப்படுகிறது. நேபாளம், பீகார், பெங்கால், அஸ்ஸாம், மத்திய பிரதேசம், மும்பைபோன்ற இடங்களிலும் காணப்படுகிறது. இவற்றில் சிறப்பு வாய்ந்தது நேபாள ருத்ராட்சமாகும், நேபாளம் ருத்ராஷத்திற்கு உலக புகழ் பெற்றது.

ருத்ராட்ச மரம் 60 அடி நீள உயரம் வளரும் இதன் பூ வெண்ணிறத்தில் இருக்கும். இலையை விட சிறிய அளவில் இருக்கும். இலையின் கீழ் பகுதியில் உள்ள காம்புகளில் பூ வளரும் பழத்தின் நிறம் சிகப்பும் நீளமும் கலந்திருக்கும் இந்த பழத்தில் உள்ள கொட்டைகளில் அதிகமாக ஐந்து முகமாக இருக்கும் இந்த பழம் ஒரு இன்ச்யை விட பெரியதாகவும் சிறியதாகவும் இருக்கும்.

சிறியதாக இருக்கிற ருத்ராஷத்திற்கு சக்தி குறைவு. ருத்ராஷ மரம் தை மாதம் பூ பூக்கும். வருட முழவதும் பூ பூக்கும் என்று கூற முடியாது. சில ஆண்டுகள் வரை பூ பூக்காமலும் இருக்கலாம்.

ஒரு முகம் ருத்ராஷம், இரண்டு முக ருத்ராஷம் இவை இரண்டும் கிடைப்பது மிக மிகக் குறைவு. எல்லா ருத்ராஷத்திற்கும் முகம் பல எண்ணிக்கையில் இருக்கும். 1 முகத்திலிருந்து 31 முகம் வரை கிடைக்கும். நமக்கு கிடைப்பது 1 முகத்தில் இருந்து 14 முகம் வரைதான். 5 முகம் ருத்ராஷம் தான் இப்போது பரவலாக அதிக அளவில் கிடைக்கின்ளது. இதன் விலை மிகவும் குறைவு. பலன் மிக அதிகம்.

ருத்ராஷம் போலவே காட்சி தரும் மேலும் இரண்டு வகை காய்கள் உள்ளன.
ஒன்று பத்ராஷம், மற்றொன்று சத்ராட்சம். இந்த இரண்டும் பார்ப்பதற்கு ருத்ராஷம் போல் இருக்கும். பலர் இந்த இரண்டையும் ருத்ராஷம் என்று எண்ணிக்கொண்டு தவறுதலாக அணிந்துக் கொள்கிறார்கள். ஆனாலும் இந்த பத்ராஷமும், சத்ராட்சமும் போலியானவை என்று கூற முடியாது, அது ருத்ராட்சம் இல்லை அவ்வளவுதானே தவிர அவையும் மிகுந்த பலன் கொடுக்க கூடியதுதான்.

ஓவ்வொறு ருத்ராஷமும் வேறுபடும். 21 ஒரு முகத்திற்கு இந்திரமாலை என்று பெயர். ஒவ்வொறு மாலைக்கும் தனித்தனி மந்திரம் இருக்கிறது.

மந்திரம் சொல்லாமல் இருந்தால் கூட உண்மையான ருத்ராஷம் அணிந்தால் மனது அமைதியாக இருக்கும். பாகவதம், சிவப்புராணம் ஆகிய இவை இரண்டிலும் ருத்ராஷத்தைப் பற்றி சிறப்பாக கூறப்பட்டுள்ளது. ருத்ராஷம் அணிவதால் பாவங்கள் நீங்குவது மட்டும் இல்லாமல் மருந்துளால் குணம் ஆகாத வியாதியைக் கூட ருத்ராஷம் அணிந்தால் குணம் ஆகும்.

மன அமைதி இன்றி அவதிப்படுபவர்கள் உண்மையான ருத்ராட்ச மாலையை அணிந்தால், அவர்கள் மனதில் இனம் புரியாத ஒரு வகை அமைதி கிடைக்கும். இது நாளடைவில் முழுமையான மன அமைதியை உருவாக்கும் வல்லமை பெற்றது ருத்ராட்சம். வேலை பளு, மனச் சோர்வு போன்றவற்றாலும், குடும்பத்தில் குழப்பம் போன்றவற்றால் அவதிப்படுபவர்கள் கூட, ருத்ராட்ச மாலை அணிந்து சிவன் சன்னதியில் சிறிது நேரம் மௌனமாக அமர்ந்திருந்தாலே அவர்களுக்கு மன அமைதி என்பது உடனடியாக ஏற்படுத்தும் ஆற்றல் ருத்ராட்சத்திற்கு உண்டு.

ஆசிரியர்