ஐஸ்வர்யக் கோலத்தினால் என்ன பயன்?

இந்தக் கோலத்தை பூஜையறையில் மட்டுமல்ல; வீட்டில் எங்கு வேண்டுமானாலும் மாட்டலாம்.வீட்டில் செல்வம் பெருகும்; மகிழ்ச்சி தாண்டவமாடும்; மனம் அமைதி பெறும். காவல் தேவதைகள் தீயசக்தி களை வீட்டிற்குள் நுழையவிடாது.

இப்படி பல நன்மைகளும் அந்தக் கோலத்தை முறையாகப் பிரார்த்திப்பவர்களுக்குக் கிடைக்கும்.இத்தனை தெய்வங்களும் (தேவதைகளும்) கொலுவிருக்கும் சக்திவாய்ந்த ஐஸ்வர்யக் கோலம், மாட்டக்கூடிய படமாக கடைகளில் கிடைக்கிறது. அதனை வாங்கிக் கொள்ளலாம். அல்லது வீட்டிலேயே செய்யலாம். ஐஸ்வர்யக் கோலம் ஸ்டிக்கராகவும் கிடைக்கிறது. அதை வாங்கி கெட்டியான அட்டையில் ஒட்டி அலங்கரித்தும் பூஜிக்கலாம்.

ஆசிரியர்