Tuesday, October 20, 2020

இதையும் படிங்க

கிரக பீடைகள், கெட்ட கனவு தொல்லையை நீக்கும் பஞ்சமுக ஆஞ்சநேயர் மாலா மந்திரம்

ஓம் இராமதூதாய ஆஞ்சனேயாயவாயு புத்ராய மகா பலாயசீதா துக்க நிவாரணாய, லங்காவிதாஹகாய மஹா பலப்ரகண்டாய பல்குணசகாயகோலாகல சகல பிரம்மாண்ட பாலகாயசப்த சமுத்ர நிராலங்கிதாய,பிங்கள நயனாய அமித...

முன்னோர்களுக்கு திதி தரும் போது ஏன் காகங்களுக்கு உணவு தருகிறோம்

காகங்கள் பொதுவாக அதிகாலையில் எழுந்து கரைதல், உணவினை உடனே உண்ணாமல் தன் கூட்டத்தினரை அழைத்து பகிர்ந்து உண்ணல், பிறகு தங்குமிடத்திற்குச் செல்லுதல் போன்றவற்றை வழக்கமாகக் கொண்டவை.

குத்துவிளக்கிற்கு இந்த திரியை பயன்படுத்தினால் என்ன பலன் கிடைக்கும்

குத்துவிளக்கிற்கு பயன்படுத்தும் எண்ணெயை பொறுத்து பலன்கள் வேறுபடுவதைப் போல, திரிகளாலும் பயன்கள் மாறுபடுகின்றன. * பருத்தி பஞ்சினால் ஏற்றப்படும் திரியால் குடும்பம் சிறக்கும், நற்செயல்கள் நடக்கும்.

பெருமாளுக்கு புரட்டாசி சனிக்கிழமை விரதம் ஏன் விசேஷம் தெரியுமா

சனிக்கிழமைகளில் பொதுவாக பெருமாளுக்கு விரதமிருப்பது வழக்கம் தான். இதில், புரட்டாசி மாத சனிக்கிழமைக்கென ஒரு விசேஷம் இருக்கிறது. புரட்டாசி சனிக்கிழமையில் தான் சனிபகவான் அவதரித்தார். அதன் காரணமாக, அவரால் ஏற்படும்...

சிவனுக்கு எதிரில் நந்தி இருப்பதற்கான காரணங்கள்

பூலோகத்தில் சிவாதர் என்ற சிவபக்தர் வாழ்ந்தார். அவரது மனைவி சித்திரவதி. இவர்களுக்கு குழந்தை இல்லை. இதனால் சிவாதர் சிவனை நினைத்து தவம் செய்தார். தவத்தால் மனம் குளிந்த சிவன் அவரது...

பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் வாழை மரத்தின் பரிகார முறைகள்

1. தரித்திர பிணிகள் விலக: அமாவாசை திதி அல்லது தேய்பிறை அஷ்டமி திதிகளில் மூன்று வாழை பூக்களை எடுத்து சூரியன் மறையும் வேளையில் இரண்டு மணிக்கு மேற்பட்டு கடலில் குளித்து...

ஆசிரியர்

முருகனின் திருவுருவங்கள்

ஆறு முகங்களுடன், பன்னிரு கரங்களுடன் பக்தர்களுக்கு வேண்டிய வரத்தை தரக்கூடிய கருணைக் கடவுள் முருகப் பெருமான். அழகென்றாலே முருகனைக் குறிப்பிடுவது வழக்கம். அதே சமயம் தந்தைக்கே உபதேசம் செய்த ஞானக் கடவுள் என பல சிறப்பு பெற்ற முருகப்பெருமானின் 16 திருக்கோலங்கள் என்னென்ன, அவற்றை நாம் எந்த கோயில்களில் தரிசிக்கலாம் என்பதைப் பாப்போம்…

தற்போது கொரோனா நுண் கிருமியால் உலகமே மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகிறது. இந்நிலையில் கடவுள் மீது பாரத்தைப் போட்டு பலரும் காலத்தைக் கடத்தி வருகின்றனர்.

ஆனால் சிலரோ முருகனையும், அவனின் வினை தீர்க்கும் வேல் குறித்தும் தவறான தகவல்களைப் பரப்பி வருகின்றனர்.

முருகனின் அழகையும், அவரின் வேலின் மகிமையை விளக்கும் கந்த சஷ்டி கவசத்தைப் போல தமிழகத்தில் உள்ள முருகன் ஆலயங்களில் உள்ள முருகனின் 16 முக்கிய திருக்கோலங்கள் என்ன அதன் சிறப்பம்சம் என்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்..

ஞானசக்திதரர்:

முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் ஐந்தாம் வீடான திருத்தணியில் எழுந்தருளக்கூடிய முருகப்பெருமானின் வடிவத்திற்கு ‘ஞானசக்திதரர்’ என்று பெயர். இவரை வழிபடுவதால் நல்ல ஞானமும், நினைத்த காரியங்களுக்கு வெற்றியைத் தருவார்.

கந்தசாமி:

பழனி மலை மீது நின்ற கோலத்தில் பாலதண்டாயுதபாணியின் திருவடிவத்தில் காட்சி தருவதை ‘கந்தசாமி’ வடிவமாகும். இந்த வடிவத்தை வழிபடுவதால் சகல காரியங்கள் சித்தியாகும்.

ஆறுமுக தேவசேனாபதி:

ஈரோடு சென்னிமலையில் முருகன் கோயிலில் ‘ஆறுமுக தேவசேனாபதி’ என்ற வடிவத்தை பக்தர்கள் தரிசிக்கலாம். இந்த முருகனை வழிபடுவதால் மங்களங்கள் உண்டாகும்.

சுப்பிரமணியர்

நாகப்பட்டினம் திருவிடைகழியில் அருள்பவர் ‘சுப்பிரமணியர்’ திரு உருவில் அருள்கிறார். சுப்பிரமணியனை வணங்கினால் வினைகள் விலகி, ஆனந்தத்தை அருள்வார்.

கஜவாகனர்

மேல்பாடி, திருமருகல், சிதம்பரம் நடராஜர் கோயில் ஆகிய கோயில் கோபுரத்தில் யானை மீது அருளக்கூடிய கஜவாகனர் முருகப்பெருமானை தரிசிக்க முடியும். இவரை வழிபட்டு வர துன்பங்கள் விலகி நற்பலன் கிடைக்கும்.

சரவணபவர்:

சென்னிமலை, திருப்போரூர் உள்ளிட்ட திருத்தலங்களில் ‘சரவணபவர்’ திருவடிவை நாம் தரிசிக்க முடியும். இவரை தரிசித்து வர மங்கலங்களை அருள்வார். கொடை, ஒலி, சாத்வீகம், வீரம் உள்ளிட்ட நற்குணங்களை அருளக்கூடியவர்.

கார்த்திகேயன்

கார்த்திகேயரை வழிபடுவதால் சகல சௌபாக்கியங்கள் பெறலாம். குறிப்பாக கார்த்திகை நட்சத்திரத்தில் வழிபட்டால் மேலும் விசேஷமானது. இவரை கும்பகோணம் கும்பேஸ்வரர் கோயிலும், தாராசுரம் ஐராவதீஸ்வாரர் கோயிலிலும் தரிசனம் செய்ய முடியும்

குமாரசாமி:

குமாரசாமி முருகனை வழிபடுவதால் ஒருவரின் ஆணவம் பொடிபடும். கங்கை கொண்ட சோழபுரம் சிவாலயத்தில் குமாரசாமி திரு உருவத்தை பஞ்சலோக விக்கிரகமாக தரிசிக்கலாம்.

சண்முகர்:

திருச்செந்தூர்க் கோயிலில் சண்முகர் திருவுருவில் காட்சி தருகிறார். இவரை வழிபட சிவ பார்வதியை வணங்கிய பலன் கிடைக்கும்.

தாரகாரி:

முருகனுக்கு `தாரகாசுரன்’ என்னும் அசுரனை அழித்ததால் இந்த திருப்பெயர் வந்தது.இவரை வழிபட்டு வர உலக மாயைகளிலிருந்து விடுதலை தருவார். தாரகாரி உருவத்தை விராலி மலையில் உள்ள முருகன் கோவிலிலும் தரிசிக்கலாம்.

சேனானி:

பகை, பகைவர்கள், பொறாமையை அழித்து நல்ல எண்ணத்தை அருளக்கூடியவர் முருகனின் ‘சேனானி’ திருவுருவம். இவரை தேவிகாபுரம் ஆலயத்தில் தரிசிக்கலாம்.

பிரம்மசாஸ்தா:

முருகனின் பிரம்மசாஸ்தா திருவுருவத்தை வணங்கினால் கல்வி, கேள்வியில் சிறப்படையலாம். பிரம்மசாஸ்தா திருவுருவை காஞ்சிபுரம் குமரகோட்டம், ஆனூர், சிறுவாபுரி, பாகசாலை உள்ளிட்ட இடங்களில் பிரம்மசாஸ்தா திருவுருவை தரிசிக்கலாம்.

வள்ளிகல்யாணசுந்தரர் :

திருமணத் தடைகளை அகற்றக்கூடிய வள்ளிகல்யாணசுந்தரர் திருவுருவை திருப்போரூர் முருகன் கோயில் தூண் ஒன்றில் தரிசிக்கலாம்.

பாலசுவாமி:

திருக்கண்டியூர், திருச்செந்தூர், ஆண்டாள் குப்பம் ஆகிய கோயில்களில் பாலசுவாமி திருவுருவத்தை தரிசிக்க முடியும். இவரை தரிசித்தால் உடல் அங்கக் குறைபாடுகளை அகற்றுவார். அதே போல் தீராத நோய் விலகும்.

சிரவுபஞ்சபேதனர்:

திருநெல்லிக்கா, திருக்குறங்குடி, திருநளிபள்ளி ஆகிய இடங்களில் சிரவுபஞ்சபேதனர் திருவுருவம் பார்க்க முடியும். இந்த இறைவனை வழிபட்டால் துன்பங்கள் விலகும். மனச்சஞ்சலம் நீங்கும்.

சிகிவாகனர்:

சிகி என்றால் மயில். மயில் வாகனத்தை கொண்ட தெய்வம் முருகன். மயில் மீது அமர்ந்து அழகாக காட்சி தருபவர் சிகிவாகனர். இவரை வணங்கி வந்தால் மகிழ்ச்சி நிறைந்த வாழ்வைத் தருவார்.

முருகன்

இதையும் படிங்க

நவராத்திரி ஒவ்வொரு நாளும் விரதம் இருந்து வழிபடும் முறை!

நவராத்திரியின் ஒன்பது நாட்களும் தினம் ஒரு சக்தியாக நினைத்து விரதமிருந்து வழிபாடு செய்து வந்தால், வளமான வாழ்வு நம்மை வந்தடையும். ரட்டாசி மாத அமாவாசைக்கு பின்...

தமிழ் மாதம் பன்னிரண்டிலும் செய்ய வேண்டிய தானம்

சித்திரை - நீர்மோர், விசிறி, செருப்பு, குடை,தயிர் சாதம், பலகாரம்வைகாசி - பானகம், ஈயப்பாத்திரம், வெல்லம் ஆனி - தேன்ஆடி - வெண்ணெய்ஆவணி - தயிர்புரட்டாசி...

கோவில் பிரசாதத்தை எப்படி வாங்கி சாப்பிட வேண்டும்?

ஆலயங்களில் பண்டிகைகளை முன்னிட்டு பிரசாதங்கள் கொடுப்பது வழக்கம். குறிப்பாக பிரதோஷம், கார்த்திகை, மார்கழி திருப்பள்ளியெழுச்சி, வைகுண்டஏகாதசி, நவராத்திரி, சதுர்த்தி, சங்கடஹர சதுர்த்தி, ஆவணிமூலம், மற்றும் எண்ணற்ற விசேஷங்களுக்கு பிரசாதம் வழங்குவர்.

இன்றைய ராசிபலன் 2020.10.14

மேஷம்: குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களுக்கு...

முருகப்பெருமான் தவம் செய்த திருப்பரங்குன்றம் திருத்தலம்

மதுரைக்கு மிக அருகாமையில் அமைந்திருக்கிறது திருப்பரங்குன்றம் திருத்தலம். இங்கு முருகப்பெருமான் அருள்பாலிக்கும் மலையானது, லிங்க வடிவமாகக் காட்சியளிக்கும் அருள் செறிந்த மலை ஆகும். இந்தத் திருப்பரங்குன்றத்தில் தங்கி, சிவசக்தியை நோக்கி...

இந்த வார விசேஷங்கள் 13.10.2020 முதல் 19.10.2020 வரை

13-ம் தேதி செவ்வாய் கிழமை : * சர்வ ஏகாதசி * சித்தயோகம்* சந்திராஷ்டமம் - திருவோணம், அவிட்டம்

தொடர்புச் செய்திகள்

சொல்லிலடங்காத இன்பத்தை அடைய முருகனை இப்படி வழிபடுங்கள்

நம்முடைய இந்து வேத மரபில் முருகனை வழிபடுவதால் ஏற்படும் பலன்கள் தொகுத்துரைக்கப்பட்டுள்ளன. ஆனால் அவரை வழிபடுவதிலும் அவருக்கான வழிபாடுகள் , விரதங்களை கடைப்பிடிப்பதில் நேர்மையான...

ரஜினி போட்ட ஒரே டுவிட்…. இந்திய அளவில் டிரெண்டான கந்தனுக்கு அரோகரா

நடிகர் ரஜினிகாந்த் டுவிட்டரில் பதிவிட்ட கந்தனுக்கு அரோகரா என்கிற ஹேஷ்டேக் தேசிய அளவில் டிரெண்டாகி உள்ளது. ரஜினிகாந்த் கந்தசஷ்டி கவசம் குறித்து அவதூறாக பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது குறித்து இந்து...

நம் கண்ணுக்கு தெரியும் தெய்வம்!!!

விநாயகரை முழுமுதலாகக் கொண்டு வழிபடும் மதம் காணாபத்யம். முருகனை வழிபடுவது கவுமாரம். சக்திவழிபாட்டினை சாக்தம் என்பர். சைவசமயத்தில் சிவபெருமானே முதற்பொருள். திருமாலை வழிபடுவதற்கு வைணவம் என்று பெயர். சூரியனையே பரம்பொருளாக வழிபடும் முறை சவுரம் ஆகும். இந்த ஆறுவித வழிபாடுகளில் சூரியனைத்...

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

ஊரடங்குச் சட்டம்‌ அமுலில் உள்ள அனைத்து பிரதேசங்களுக்கும் விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்

தற்பொழுது தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம்‌ அமுலில் உள்ள அனைத்து பிரதேசங்களிலும், உணவுப்‌ பொருட்கள் விற்பனை செய்யும்‌ வர்த்தக நிலையங்கள்‌ மற்றும்‌ மருந்தகங்களை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஹோட்டல் பராமரிப்பாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி

கொழும்பு மெனிங் சந்தை பிரதேசத்தில் ஹோட்டல் ஒன்றை பராமரித்துச் செல்லும் கந்தானை, கபால சந்தி பிரதேசத்தை சேர்ந்த நபரொருவருக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நேற்று...

சுகாதார சேவைகள் பணிப்பாளர் மக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை

டெங்கு நுளம்பு பரவாதவாறு பொதுமக்கள் சுற்றுச்சூழலை பாதுகாத்து கொள்ளல் வேண்டும் என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார் தற்போது யாழ்...

மேலும் பதிவுகள்

ஜெசிந்தா ஆர்டெர்னுக்கு மோடி வாழ்த்து!

நியூசிலாந்து நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஜெசிந்தா ஆர்டெர்னுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார். இது குறித்து பிரதமர் வெளியிட்டுள்ள ருவிற்றர் பதிவில்,...

அவுஸ்ரேலியாஇலங்கைக்கு பி.சி.ஆர் பரிசோதனை இயந்திரங்கைளை வழங்கியுள்ளதாம்!

அவுஸ்ரேலிய பாதுகாப்புத் துறை மற்றும் அவுஸ்ரேலிய உள்துறை திணைக்களம் இணைந்து 4 பி.சீ.ஆர் பரிசோதனை இயந்திரங்களை இலங்கைக்கு வழங்கியுள்ளது. கொழும்பில் உள்ள அவுஸ்ரேலிய உயர்ஸ்தானிகரின் உத்தியோகபூர்வ...

தெஹிவளையில் வைத்து ரிஷாட் கைது!

முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். பொலிஸாரினால் தீவிரமாக தேடப்பட்டு வந்த ரிஷாட் பதியுதீன் தெஹிவளையில்...

கிளிநொச்சி மாவட்ட ஊடகவியலாளர்கள் ஜனாதிபதிக்கு கடிதம்

ஊடகவியலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி தருமாறு கிளிநொச்சி மாவட்ட ஊடகவியலாளர்கள் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை இன்று அனுப்பி வைத்துள்ளனர். இன்றுகாலை 10.30 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ஊடாக குறித்த...

கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் 2 கோடியே 88 லட்சமாக உயர்வு

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 213 நாடுகள்/ பிரதேசங்களுக்கு பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித...

நாட்டில் மேலும் 113 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

திவுலப்பிட்டிய கொரோனா கொத்தணியில் மேலும் 113 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட 5 பேருக்கும் மற்றும் தொழிற்சாலை ஊழியர்களுடன் நெருங்கிப் பழகிய 108...

பிந்திய செய்திகள்

வன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 7 | பத்மநாபன் மகாலிங்கம்

தம்பையர் திருமணம் செய்த போது வயது 19. விசாலாட்சிக்கு வயது 16. தம்பையர் இறந்த போது வயது 26. அப்போது விசாலாட்சிக்கு வயது 23. கணபதிப் பிள்ளைக்கு ஆறு வயது...

சூரரைப் போற்று படத்தின் டிரைலர் அப்டேட்

சூர்யா நடித்த ’சூரரைப் போற்று’ திரைப்படம் வரும் 30ஆம் தேதி ஓடிடியில் ரிலீசாக உள்ளது. இந்த நிலையில் தற்போது ’சூரரைப் போற்று’ படத்தின் டிரைலர் ரிலீஸ் குறித்த தகவல் வெளிவந்துள்ளது....

ஈரான் மீதான ஐ.நா. ஆயுத தடை காலாவதியானது

மேற்கு ஆசிய நாடான ஈரான் அதிக அளவு அணு ஆயுதங்களை பயன்படுத்தி உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வந்தது. இதன் காரணமாக கடந்த 2010-ம் ஆண்டு ஈரான் மீது ஐ.நா....

குழந்தைக்கு பிராண்ட் பெயர் வைத்தால் 18 ஆண்டு வைபை இலவசம்

இலவச வைஃபை பெற நீங்கள் செய்ய வேண்டியது என்ன தெரியுமா? உங்கள் குழந்தைக்கு எங்கள் நிறுவனத்தின் பெயரை வைத்தால் போதும் என சுவிட்சர்லாந்து நிறுவனம் விளம்பரம் செய்தது.சுவிட்சர்லாந்தை சேர்ந்த ட்விஃபி...

பதப்படுத்தப்பட்ட உணவில் கொரோனா வைரஸ்

சீனாவின் உகான் நகரத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தோன்றி, தலைநகர் பீஜிங் வரை உலுக்கிய கொரோனா, தற்போது உலகமெங்கும் பரவிவிட்டது. உலகத்துக்கு கொரோனா வைரசை முதன்முதலில் அறிமுகம் செய்து...

பயங்கரவாத நிதி தடுப்பு நடவடிக்கையில் மீண்டும் தோல்வி..

பண மோசடி மற்றும் பயங்கரவாத குழுக்களுக்கு நிதியுதவி அளிப்பதை தடுத்து, சர்வதேச நிதி அமைப்பிற்கான அச்சுறுத்தல்களை கண்காணித்து நடவடிக்கை எடுப்பதற்காக எப்ஏடிஎப் எனப்படும் நிதி நடவடிக்கை பணிக்குழு உருவாக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ்...

துயர் பகிர்வு