Saturday, October 24, 2020

இதையும் படிங்க

தமிழ் மாதம் பன்னிரண்டிலும் செய்ய வேண்டிய தானம்

சித்திரை - நீர்மோர், விசிறி, செருப்பு, குடை,தயிர் சாதம், பலகாரம்வைகாசி - பானகம், ஈயப்பாத்திரம், வெல்லம் ஆனி - தேன்ஆடி - வெண்ணெய்ஆவணி - தயிர்புரட்டாசி...

கோவில் பிரசாதத்தை எப்படி வாங்கி சாப்பிட வேண்டும்?

ஆலயங்களில் பண்டிகைகளை முன்னிட்டு பிரசாதங்கள் கொடுப்பது வழக்கம். குறிப்பாக பிரதோஷம், கார்த்திகை, மார்கழி திருப்பள்ளியெழுச்சி, வைகுண்டஏகாதசி, நவராத்திரி, சதுர்த்தி, சங்கடஹர சதுர்த்தி, ஆவணிமூலம், மற்றும் எண்ணற்ற விசேஷங்களுக்கு பிரசாதம் வழங்குவர்.

இன்றைய ராசிபலன் 2020.10.14

மேஷம்: குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களுக்கு...

முருகப்பெருமான் தவம் செய்த திருப்பரங்குன்றம் திருத்தலம்

மதுரைக்கு மிக அருகாமையில் அமைந்திருக்கிறது திருப்பரங்குன்றம் திருத்தலம். இங்கு முருகப்பெருமான் அருள்பாலிக்கும் மலையானது, லிங்க வடிவமாகக் காட்சியளிக்கும் அருள் செறிந்த மலை ஆகும். இந்தத் திருப்பரங்குன்றத்தில் தங்கி, சிவசக்தியை நோக்கி...

இந்த வார விசேஷங்கள் 13.10.2020 முதல் 19.10.2020 வரை

13-ம் தேதி செவ்வாய் கிழமை : * சர்வ ஏகாதசி * சித்தயோகம்* சந்திராஷ்டமம் - திருவோணம், அவிட்டம்

கிரக பீடைகள், கெட்ட கனவு தொல்லையை நீக்கும் பஞ்சமுக ஆஞ்சநேயர் மாலா மந்திரம்

ஓம் இராமதூதாய ஆஞ்சனேயாயவாயு புத்ராய மகா பலாயசீதா துக்க நிவாரணாய, லங்காவிதாஹகாய மஹா பலப்ரகண்டாய பல்குணசகாயகோலாகல சகல பிரம்மாண்ட பாலகாயசப்த சமுத்ர நிராலங்கிதாய,பிங்கள நயனாய அமித...

ஆசிரியர்

புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது தெரியுமா

ஜோதிடத்தில் 6-வது ராசியாக இருக்கும் கன்னி ராசியின் மாதம் புரட்டாசியாகும். புரட்டாசி மாதத்திற்குரிய அதிபதி புதன். புதன் மகாவிஷ்ணுவின் சொரூபம். அதாவது, புரட்டாசி மாதம் பெருமாளின் மாதம். புதன் சைவத்திற்குரிய கிரகம் ஆதலால் அசைவம் சாப்பிடக்கூடாது. அந்த மாதம் முழுவதும் பெருமாளை நினைத்து விரதமிருக்க வேண்டும் எனச் சாஸ்திரம் கூறுகின்றது.

எல்லாமாதங்களிலும் அசைவ உணவுகளைச் சாப்பிடுகிறோம். ஆனால், புரட்டாசியில் மட்டும் ஏன் அசைவ உணவுகளைத் தவிர்க்க வேண்டும். ஏதாவது கட்டாயமா? அதிலும், நம் வீட்டுப் பெரியோர்கள் ஒரு மாதத்திற்கு அசைவம் இல்லை என்று ஆணியடித்தாற் போல் சொல்லி விடுவார்கள். அசைவ பிரியர்களின் கதி அதோ கதி தான்.ஏன் சாப்பிடக்கூடாது. அப்படி என்ன தான் காரணம்?

பெரும்பாலான இந்துக்கள் புரட்டாசி மாதம் அசைவம் சாப்பிடுவதை நிறுத்தி, விரதம் இருந்து சனிக்கிழமைகளில் வீட்டில் தளிகை போடுவது வழக்கமாக வைத்திருப்பார்கள். இந்தப் புரட்டாசி மாதம் மழையுடன் தொடங்கும். பொதுவாகவே புரட்டாசி மாதம் வெயிலும் காற்றும் குறைந்து மழை ஆரம்பிக்கும் மாதம். இத்தனை மாதமாக வெயிலால் சூடாகியிருந்த பூமி, மழைநீரை ஈர்த்து வெப்பத்தைக் குறைக்க ஆரம்பிக்கும். அவ்வாறு இருக்கும் பட்சத்தில் சூட்டைக் கிளப்பிவிடும்.

இது வெயில் கால வெப்பத்தைக் காட்டிலும் மோசமானது கெடுதல் தரக்கூடியது. இந்த நேரத்தில் அசைவம் சாப்பிடுவது உடல் சூட்டை அதிகப்படுத்தி உடல் நலத்தைக் குறைக்கும். தேவையில்லாது வயிறு தொடர்பான பிரச்னையை ஏற்படுத்தும். அது மட்டுமன்றி சரிவர பெய்யாத மழை திடீர் வெப்ப மாறுதல் நோய்கிருமிகளை உருவாக்கிவிடும். காய்ச்சல் சளி காரணமாக ஜூரம் போன்ற தொந்தரவுகள் அதிகரிக்கும்.

துளசியானது இதைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்டது. இதற்காகவே, புரட்டாசியில் விரதம் இருந்து (அசைவம் ஒதுக்கி) பெருமாள் கோயிலுக்கு செல்லும் வழக்கத்தை ஏற்படுத்தினர். நமது உடல் நலனுக்காக நமது முன்னோர்கள் கடைப்பிடித்த இந்த விரதத்தை நாமும் கடைப்பிடித்து நமது உடலைப் பாதுகாப்போம்.

vikatan

இதையும் படிங்க

குரு தோஷங்களைப் போக்கும் கோவில்

சென்னை பாரிமுனையில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் இருந்தாலும், திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கிறது பாடி என்ற ஊர். இங்கு வல்லீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. வியாழ பகவான்...

புதிய வீட்டில் கண்டிப்பாக ஹோமம் செய்ய வேண்டுமா?

யாகம் மற்றும் ஹோமங்கள் செய்வதை சிலர் கேலி செய்கிறார்கள். நெருப்பை வளர்த்து நெய்யை ஊற்றி அதில் சில பொருட்களை மந்திரங்கள் சொல்லி எரிய விடுவதற்கு என்ன பயன் இருந்துவிட போகிறது....

அழுக்காகி புது மாங்கல்யம் அணியும் போது இதை மறக்காதீங்க

பெண்கள் அணிந்துள்ள தாலிக்கயிறு அழுக்காகி விட்டாலோ, மாங்கல்யம் பழுதாகி புது மாங்கல்யம் அணிந்தாலோ, திங்கள், செவ்வாய், வியாழக்கிழமை மாற்றலாம். இதை காலை சாப்பிடும் முன்பே, ஏதேனும் கோயிலுக்குச் சென்று, நடைபாதையில்...

கோவில்கள் ஏன் மலைகளிலும் உயரமான இடங்களிலும் அமைகிறார்கள் தெரியுமா?

மலையில் ஏறும்போதும், கடற்கரையில் சுத்தமான காற்று வாங்கும்போதும், நமது ரத்தத்தில் ஆக்சிஜன் கலக்கிறது. இது ஹீமோகுளோபின் என்னும் ரத்த அணுக்களை விருத்தியாக்குகிறது.

நீங்கள் செய்யும் பரிகாரம் பலனளிக்காமல் போவதற்கான காரணங்கள்

ஒரு சிலர் தோஷத்திற்கான பரிகாரங்களை முறையாக செய்தாலும் கூட அந்த தோஷம் நீங்காமல் அதற்கான துன்பங்கள் தொடர்ந்துகொண்டே இருக்கும். இதற்கு முக்கிய காரணமாக கருதப்படுவது கர்மவினை. ஆகையால் ஒருவரது ஜாதகத்தில்...

நவராத்திரி ஒவ்வொரு நாளும் விரதம் இருந்து வழிபடும் முறை!

நவராத்திரியின் ஒன்பது நாட்களும் தினம் ஒரு சக்தியாக நினைத்து விரதமிருந்து வழிபாடு செய்து வந்தால், வளமான வாழ்வு நம்மை வந்தடையும். ரட்டாசி மாத அமாவாசைக்கு பின்...

தொடர்புச் செய்திகள்

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4.24 கோடியாக அதிகரிப்பு

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 210 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில்,...

மக்களின் தூக்கம், மனநலத்தை பாதித்த கொரோனா ஊரடங்கு

சீனாவின் வுகானில் கடந்த ஆண்டு இறுதியில் தோன்றிய கொரோனா வைரஸ், இந்த ஆண்டு தொடக்கத்திலேயே அனைத்து நாடுகளுக்கும் பரவி மக்களை கொத்து கொத்தாக பலி கொண்டு வந்தது. தடுப்பு மருந்துகள்...

நான் அதிபர் ஆனால் அமெரிக்கர்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம்

உலகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் இன்னும் குறையாத நிலையில், பல நாடுகள் கொரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. முன்னணி நிறுவனங்கள் கண்டுபிடித்துள்ள தடுப்பூசி மருந்துகள் இன்னும்...

மேலும் பதிவுகள்

விபத்தில் 13 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழப்பு

மாரவில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திஹகொட, குடாபான சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று மதியம் 2 மணி அளவில் இந்த விபத்து...

விஜய் சேதுபதி மகளுக்கு மிரட்டல் – இலங்கை ஆசாமியை கைது செய்ய போலீசார் தீவிரம்

இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் வகையில் 800 என்ற தலைப்பில் திரைப்படம் தயாரிக்கப்போவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டது. நடிகர் விஜய் சேதுபதி முத்தையா முரளிதரன்...

’20’ திருத்தம் குறித்து எந்த நாடும் அழுத்தம் பிரயோகிக்க முடியாது

“அரசமைப்பின் 20ஆவது திருத்தம் தொடர்பில் எந்த நாடும் இலங்கை அரசுக்கு அழுத்தம் எதையும் பிரயோகிக்க முடியாது.” இவ்வாறு வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

இலங்கையின் ஆடைஏற்றுமதி வருமானம் பெரும் வீழ்ச்சி!

2020 ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில், இலங்கையின் ஆடை ஏற்றுமதி வருமானம் 22 வீதம் குறைந்து 3.1 பில்லியன் அமெரிக்க டொலராகப் பதிவாகியுள்ளது.

கருஞ்சீரகத்தில் இவ்வளவு நன்மைகளா?

கருஞ்சீரகத்தில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது. ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் உடல் ஆரோக்கியத்திற்கு மிக முக்கியமான ஒரு பொருளாகும். இவை உடலில் உள்ள தேவையில்லாத கழிவுகளை அகற்ற துணை புரிகின்றன. அதனால் உடல் செல்கள்...

நவராத்திரி பிரசாதம்: வேர்க்கடலை சுண்டல்

சமைக்க தேவையானவை வேர்க்கடலை - 1 கப், பச்சை மிளகாய் - 2 கொத்தமல்லி - சிறிதளவு,இஞ்சி துருவல் - அரை டீஸ்பூன்,சீரகம்,...

பிந்திய செய்திகள்

புதிய கல்வி மறுசீரமைப்பிலேனும் மதிப்பீட்டு அணுகுமுறை மாற்றமுறுமா? | நிர்மலன்

கலைத்திட்டத்திலுள்ள  கற்றல் இலக்குகளை அடைவதில் மாணவர்கள் எந்தளவு முன்னேற்றம் அடைந்துள்ளார்கள் என்பதனைத் தொடர்ந்து மதிப்பீடு செய்தல் ஆசிரியர்கள், அதிபர்கள், கல்வி நிர்வாகிகள் போன்றோரின் முக்கிய...

மதுஷின் 100 கோடி ரூபாய் பணம் வேறு ஒருவரின் கணக்கில் உள்ளமை கண்டுபிடிப்பு

போதைப்பொருள் உலகின் மாகந்துரே மதுஷ் டுபாயில் இருந்த போது பல்வேறு முறையில் சம்பாதித்த 100 கோடி ரூபாய் பணம் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

உயர்தரப் பரீட்சையில் ‘குதிரை ஓடிய’ மாணவன் கைது

ஆள்மாறாட்டம் செய்து உயர்தரப் பரீட்சையில் தோற்றிய மாணவன் ஒருவன் கற்பிட்டியில் நேற்று (23) கைது செய்யப்பட்டுள்ளான். கற்பிட்டி பிரதேசத்தில் உள்ள...

4.24 கோடியைத் தாண்டிய கொரோனா நோயாளர்கள்!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 4.24 கோடியைத் தாண்டியுள்ளது. சீனாவின் வுகான் நகரில் கடந்த...

புதிய பாராளுமன்ற கட்டுமான பணிகள் டிசம்பரில்!

இந்திய ஜனநாயகத்தின் கோவிலாக கருதப்படும் பாராளுமன்றம் டெல்லியில் ஜனாதிபதி மாளிகைக்கு அருகே உள்ளது. தற்போது இருக்கும் பாராளுமன்ற கட்டிடம் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டது ஆகும்.

சென்னை சூப்பர் கிங்சின் வீழ்ச்சிக்கான முக்கிய காரணங்கள்

ஐபிஎல் கிரிக்கெட்டில் சாதனை அணியாக வலம் வந்த சென்னை சூப்பர் கிங்சின் வீழ்ச்சிக்கு சில முக்கிய காரணங்களை நிபுணர்கள் முன்வைக்கிறார்கள்.

துயர் பகிர்வு