Tuesday, December 1, 2020

இதையும் படிங்க

பாலாரிஷ்ட தோஷம் நீங்க பலன் தரும் பரிகாரங்கள்

பிறந்த ஜாதகத்தில் லக்னத்தில் இருந்து 6,8,12-ம் இடங்களில் குரு கிரகம் நின்றாலும் அல்லது சூரியன், சந்திரன் நின்றாலும் 8-ம் இடமான ஆயுள் தானத்தில் ஆயுள் காரகன் சனி நின்றாலும் அது...

தொழிலில் லாபம் பெருக ஸ்ரீனிவாச பெருமாள் ஸ்லோகம்

திருப்பதியில் கோயில் கொண்டிருக்கும் வெங்கடாசலபதி ஆன ஸ்ரீனிவாச பெருமாளுக்கு உரிய ஸ்லோகம் இது. இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி வந்தால் தொழில் மற்றும் வியாபாரங்களில் லாபங்கள் பெருகும். வறுமை நிலை...

நாம் செய்யும் பரிகாரங்கள் பலன் அளிக்காததற்கு இவை தான் காரணம்

நமது பிரச்சனைகள் அனைத்தும் தீர்வதற்காக பரிகாரங்கள் செய்வோம். ஆனால் சில சமயங்களில் அந்த பரிகாரங்கள் பலனளிக்காது, இதற்கு காரணம் நமது கர்மவினைகளாகும். ஒருவரின் ஜாதகத்தில் தற்போது எந்த கர்மவினையானது நடக்கிறது...

இன்றைய ராசிபலன் 2020.11.21

மேஷம் மேஷம்: எதையும் தாங்கும் மன வலிமை கிட்டும். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். வீடு வாகனத்தை சீர் செய்வீர்கள். உங்களால் மற்றவர்கள் பயனடைவார்கள். வியாபாரத்தில் பழைய...

இன்றைய ராசி பலன்

மேஷம்: உங்கள் போக்கில் கொஞ்சம் மாற்றம் செய்வீர்கள். உறவினர்நண்பர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். வியாபாரத்தில் புதுஇடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் உங்களின்...

இது வீட்டில் இருந்தால் தீய சக்தி விலகி போகும்

ஒரு இல்லத்தில் மகிழ்ச்சி நிரம்பி இருக்க அந்த வீட்டில் நேர்மறை ஆற்றல்கள் நிறைந்து இருக்க வேண்டும். மாறாக எதிர்மறை ஆற்றல்கள் ஊடுருவி இருந்தால் அந்த வீட்டில் மகிழ்ச்சி காணாமல் போய்விடும்....

ஆசிரியர்

நவராத்திரி ஒவ்வொரு நாளும் விரதம் இருந்து வழிபடும் முறை!

நவராத்திரியின் ஒன்பது நாட்களும் தினம் ஒரு சக்தியாக நினைத்து விரதமிருந்து வழிபாடு செய்து வந்தால், வளமான வாழ்வு நம்மை வந்தடையும்.

ரட்டாசி மாத அமாவாசைக்கு பின் வரும் பிரதமை திதியில் இருந்து நவமி திதி வரையான ஒன்பது நாட்கள் நவராத்திரி விழாவாகும். இந்த நவராத்திரியானது, 17-10-2020 (சனிக்கிழமை) அன்று தொடங்கி, 25-10-2020 (ஞாயிற்றுக்கிழமை) வரை உள்ளது.

இந்த ஒன்பது நாட்களும் முப்பெரும் தேவியர்களான சரஸ்வதி, லட்சுமி, துர்க்கை ஆகியோரை வழிபட வேண்டும். முதல் மூன்று நாட்கள் துர்க்கை (பார்வதி) வழிபாடு. இடையில் மூன்று நாட்கள் லட்சுமி வழிபாடு.

கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதி வழிபாடு. முப்பெரும் தேவிகள் முக்கியத்துவம் பெறும் விழாவாக இந்த நவராத்திரி விழா உள்ளது. நவராத்திரியின் ஒன்பது நாட்களும் தினம் ஒரு சக்தியாக நினைத்து விரதமிருந்து வழிபாடு செய்து வந்தால், வளமான வாழ்வு நம்மை வந்தடையும்.

முதல் நாள்:
சக்தியை, முதல்நாளில் சாமுண்டியாக கருதி வழிபடவேண்டும். இவள் தெத்துப்பல் திருவாயும், முண்ட மாலையும் அணிந்தவள். முண்டன் என்ற அசுரனை சம்ஹாரம் செய்தவள் என்பதால் சாமுண்டா எனவும் அழைப்பர். கோபம் கொண்டவளாக காட்சியளிக்கும் இந்த அன்னையின் கோபம் மற்றவர்களை திருத்தி நல்வழிப் படுத்தும். சர்க்கரை பொங்கல் நைவேத்தியம் படைக்கலாம்.

இரண்டாம் நாள்:
அன்னையை வராகி தேவியாக வழிபட வேண்டும். வராகி (பன்றி) முகமும் தெத்துப்பற்களும் உடையவள். சூலமும் உலக்கையும் ஆயுதங்கள். பெரிய சக்கரத்தை தாங்கியிருப்பவள். தனது தெத்துப்பற்களால் பூமியை தூக்கியிருப்பவள். இவளுக்கு மங்கள மய நாராயணி, தண்டினி, பகளாமுகி போன்ற திருநாமங்களும் உண்டு. இவள் அன்னையின் சேனாதிபதி ஆவாள். ஏவல், பில்லி சூனியம், எதிரிகள் தொல்லையில் இருந்து விடுபட இவளின் அருளைப் பெறுவது அவசியம். தயிர் சாதம் நிவேதனம் சிறந்தது.

மூன்றாம் நாள்:
சக்தித் தாயை இந்திராணியாக வழிபட வேண்டும். இவளை மாகேந்தரி, சாம்ராஜதாயினி என்றும் அழைப்பர். இவள் இந்திரனின் சக்தி ஆவாள். கிரீடம் தரித்து வஜ்ராயுதம் ஏந்தியவள். ஆயிரம் கண்ணுடையவள். யானை வாகனம் கொண்டவள். விருத்திராசுரனை அழித்தவள். தேவலோகத்தை பரிபாலனம் செய்பவளும் இவளே ஆகும். பெரிய பெரிய பதவிகளை அடைய விரும்புபவர்களுக்கு இவளது அருட்பார்வை கட்டாயம் வேண்டும். மற்றும் வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்க, பதவியில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்க அருள்புரிபவளும் இந்த அன்னையே ஆவாள். வெண் பொங்கலை நைவேத்தியம் செய்யலாம்.

நான்காம் நாள்:
சக்தித் தாயை, வைஷ்ணவி தேவியாக கருதி வழிபாடு செய்ய வேண்டும். சங்கு, சக்கரம், கதை, வில் ஆகியவற்றை தன் கையில் கொண்டிருப்பவள். தீயவற்றை சம்ஹரிப்பவள். இவளின் வாகனம் கருடன் ஆகும். எலுமிச்சை சாதத்தை அன்னைக்கு நைவேத்தியமாக படைப்பது நலம் தரும்.

ஐந்தாம் நாள்:
அன்னையை மகேஸ்வரி தேவியாக கருதி வழிபாடு செய்ய வேண்டும். அன்னை மகேஸ்வரனின் சக்தியாவாள். திரிசூலம், பிறைச் சந்திரன், பாம்பு தரித்து இடப வாகனத்தில் எழுந்தருளி இருப்பவள். அளக்க முடியாத பெரும் சரீரம் உடையவள். சர்வ மங்களம் தருபவள். தர்மத்தின் திருவுருவம். கடின உழைப்பாளிகள் உழைப்பின் முழுப்பலனை பெற இந்த அன்னையின் அருள் அவசியம் வேண்டும். புளியோதரை நிவேதனம் சிறந்தது.

ஆறாவது நாள்:
அன்னையை கவுமாரி தேவியாக நினைத்து வழிபடவேண்டும். மயில் வாகனமும், சேவல் கொடியும் கையில் ஏந்தியவள். தேவசேனாதிபதியான முருகனின் வீரத்திற்கு ஆதாரமானவள். ஓங்கார சொரூபமானவள். சகல பாவங்களையும் விலக்கி விடுபவள். வீரத்தை தருபவள். தேங்காய் சாதம் படைத்து வழிபட வேண்டும்.

ஏழாம் நாள்:
அன்னையை மகாலட்சுமியாக கருதி வழிபட வேண்டும். கையில் ஜெபமாலை, கோடரி, கதை, அம்பு, வில், கத்தி, கேடயம், சூலம், பாசம், தண்டாயுதம், சக்தி ஆயுதம், வஜ்ராயுதம், சங்கு, சக்கரம், மணி, மதுக்கலயம், தாமரை, கமண்டலம் ஆகியவற்றைக் கொண்டிருப்பவள். விஷ்ணு பத்தினியாவாள். பவளம் போன்ற சிவந்த நிறத்தையுடையவள். தாமரை ஆசனத்தில் அமர்ந்து சகல ஐஸ்வரியங்களையும் தருபவள். இந்த அன்னையை வேண்டினால் அனைத்து செல்வங்களும் வந்து சேரும். கல்கண்டு சாதத்தை நிவேதனம் செய்யுங்கள்.

எட்டாம் நாள்:
அன்று அன்னையை, நரசிம்கி ஆக வழிபாடு செய்ய வேண்டும். மனித உடலும், சிம்ம தலையும் உடையவள். கூரிய நகங்களுடன் சங்கு, சக்கர தாரிணியாக சிம்ம வாகனத்தில் காட்சி தருபவள். சத்ருக்கள் தொல்லையில் இருந்து விடுபட அன்னையின் அருள் வேண்டும். சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் படைக்கலாம்.

ஒன்பதாம் நாள்:
அன்னையை பிராக்மி ஆக வழிபட வேண்டும். அன்ன வாகனத்தில் இருப்பவள். வாக்கிற்கு அதிபதியாவாள். ஞான சொரூபமானவள். கல்விச் செல்வம் பெற இந்த அன்னையின் அருள் மிகவும் அவசியமாகும். நைவேத்தியமாக அக்கார வடிசலை படைக்கலாம்.

இதையும் படிங்க

இன்னல்கள் போக்கும் கார்த்திகை ‘சோமவாரம்’: விரதம் இருப்பது எப்படி

சிவபெருமானை திங்கட்கிழமைகளில் வழிபடுவது மிகவும் சிறப்புக்குரியதாகும். திங்கட்கிழமையை ‘சோமவாரம்’ என்றும் குறிப்பிடுவார்கள். ‘சோம’ என்பதற்கு ‘பார்வதி உடனாய சிவபெருமான்’ என்றும், ‘சந்திரன்’ என்றும் பொருள். சோமவாரத்தில் செய்யும் வழிபாடு அனைத்துமே...

300 வர்த்தக தலைவர்கள் பங்கேற்ற ‘ஈஷா இன்சைட்’ நிகழ்ச்சியை சத்குரு தொடங்கி வைத்தார்

300 வர்த்தக தலைவர்கள் மற்றும் முன்னணி நிறுவனங்களின் சி.இ.ஓ.க்கள் பங்கேற்ற ‘ஈஷா இன்சைட்’ நிகழ்ச்சியை ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு அவர்கள் நேற்று (நவ.27) தொடங்கி வைத்தார்.

விரதம் இருந்து வீட்டிலேயே ராகு கால பூஜை செய்வது எப்படி

துர்க்கை அம்மன் வழிபாடு என்றாலே, செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் வழிபட வேண்டும் என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒன்று. இந்த செவ்வாய்க்கிழமையில் துர்க்கை அம்மனை ராகு காலத்தில் வழிபாடு செய்தால்...

கிரக மாற்றங்களால் துயரப்படுபவரா நீங்கள் இப்படி விரதம் அனுஷ்டியுங்கள்

 பகைவரைக் கண்டு அஞ்சாத உள்ளத்தை தருபவர் செவ்வாய். செவ்வாய் தோஷம் என்பதைக் கேட்டாலே பெண்ணைப் பெற்றவர்கள் பதறுவார்கள். செவ்வாய் கிழமைகளில் விரதமிருந்து அருகில் உள்ள கோவில்களில் தீபமேற்றுவது செவ்வாய் தோஷத்தால்...

நவகிரக தோஷங்கள் நீங்க பலன் தரும் விரத வழிபாடுகள்

* பகைவரைக் கண்டு அஞ்சாத உள்ளத்தை தருபவர் செவ்வாய். செவ்வாய் தோஷம் என்பதைக் கேட்டாலே பெண்ணைப் பெற்றவர்கள் பதறுவார்கள். செவ்வாய் கிழமைகளில் விரதமிருந்து அருகில் உள்ள கோவில்களில் தீபமேற்றுவது செவ்வாய்...

தீராத நோய் மற்றும் இந்த பிரச்சனைகள் தீர சிவபெருமானை வழிபடலாம்

மாதம்தோறும் தேய்பிறை அஷ்டமி, தேய்பிறை சதுர்த்தி திதி இந்த இரண்டு நாட்களும் வரும். இது எல்லோரும் அறிந்த ஒன்றுதான். தீராத நோய் உள்ளவர்கள் மாதம்தோறும் இந்த இரு தினங்களிலும் ஒருவேளை...

தொடர்புச் செய்திகள்

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 558 பேர் குணமடைவு

இலங்கையில் கொரோனா தொற்றில் இருந்து கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 558 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது. அதன்படி நாட்டில் இதுவரை...

கொரோனா பாரிய அலையாக மாறலாம்- திஸ்ஸ எச்சரிக்கை

நாட்டில் தற்போது பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ள கொரோனா, பாரிய அலையாக மாறுவதற்கு வாய்ப்புள்ளதென வைரஸ் நோய் தொடர்பான நிபுணரும்  நாடாளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார்.

சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளேவிற்கு மற்றுமொரு இராஜாங்க அமைச்சு

சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் சிறைக் கைதிகள் புனர்வாழ்வளிப்பு இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளேவிற்கு மற்றொரு இராஜாங்க அமைச்சுப் பதவி வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, ஆரம்ப சுகாதார...

மேலும் பதிவுகள்

இலங்கை வைத்திய சபைக்கு புதிய தலைவர்

இலங்கை வைத்திய சபையின் தலைவராக கொழும்பு வைத்திய பீடத்தின் பேராசிரியர் வஜிர திசநாயக்க நியமிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. சுகாதார அமைச்சர் பவித்ரா...

இலங்கையின் 35ஆவது பொலிஸ்மா அதிபராக சி.டி.விக்கிரமரத்ன பதவியேற்பு

இலங்கையின் 35ஆவது பொலிஸ்மா அதிபராக சி.டி.விக்கிரமரத்ன இன்று (வெள்ளிக்கிழமை) பதவியேற்கவுள்ளதாக கூறப்படுகின்றது. இலங்கையின் 35ஆவது பொலிஸ்மா அதிபராக சி.டி.விக்கிரமரத்ன, இன்று பொலிஸ் தலைமையகத்தில் தனது கடமைகளைப்...

ஸ்வீடன் இளவரசர்- இளவரசிக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி!

ஸ்வீடன் இளவரசர் மற்றும் இளவரசிக்கு கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. ஸ்வீடன் அரச நீதிமன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இளவரசர் கார்ல் பிலிப் மற்றும்...

கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 558 பேர் குணமடைவு

இலங்கையில் கொரோனா தொற்றில் இருந்து கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 558 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது. அதன்படி நாட்டில் இதுவரை...

நிவர் புயல் கரையை கடந்த பின்னரும் தமிழகத்தில் மழை தொடரும்

நிவர் புயல் கரையை கடந்த பின்னரும்  தமிழகம் மற்றும் புதுவையில் 27ஆம் திகதி வரை மழை தொடரும்  என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

கொரோனாவால் பாதிக்கப்பட்ட சிறைக் கைதிகளின் எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்தது

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட சிறைச்சாலை கைதிகளின் எண்ணிக்கை 1000 ஐக் கடந்துள்ளது. மேலும் 187 சிறைக் கைதிகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை இன்று...

பிந்திய செய்திகள்

தீர்மானிக்கப்பட்ட திகதியில் க.பொ.த சாதாரண தர பரீட்சை நடாக்காது

கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட தினத்தில் நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை...

மாவீரர் தின பாடலை முகநூலில் பதிவிட்ட இளைஞருக்கு விளக்கமறியல்

திருகோணமலை - சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சம்பூரைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞரொருவர் மாவீரர் தினமன்று மாவீரர் தின பாடலை தனது முகநூலில் பதிவிட்டமைக்காக சம்பூர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

விளையாட்டு விபரீதத்தில் முடிந்த சோகம்! 9 வயது சிறுமி பரிதாபமாக பலி

பருத்தித்துறை -புலோலி,சாரையடி பகுதியில் ஜன்னல் கதவின் பிணைச்சலில் கழுத்துப் பட்டியை கட்டி கழுத்தில் சுருக்கிட்டுக் கொண்ட சிறுமியொருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

அக்‌ஷராவின் கவர்ச்சி புகைப்படங்கள் லீக் – பிரபல நடிகையின் மகன் விளக்கம்

கமல்ஹாசனின் இரண்டாவது மகள் அக்‌ஷரா ஹாசன் ஷமிதாப் இந்தி படத்தில் அறிமுகமானார். தமிழில் விவேகம், கடாரம் கொண்டான் படங்களில் நடித்து இருக்கிறார். தற்போது அக்னி சிறகுகள் படத்தில் நடித்து வருகிறார்....

வேளாண் சட்டங்களுக்கு எதிரானபோராட்டம்:விவசாயிகள் சங்கத்தினருடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை!

வேளாண் சட்டங்களை நீக்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் சங்கத்தினருடன் மத்திய அரசு இன்று (செவ்வாய்க்கிழமை) பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது. பஞ்சாப் ஹரியானா ஆகிய அண்டை...

காற்றழுத்த தாழ்வு மண்டலம் புரவி புயலாக வலுப்பெறுகிறது!

இலங்கை அருகே மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று (செவ்வாய்க்கிழமை) புயலாக வலுப்பெறுகிறது. குறித்த புயலுக்கு புரவி என பெயரிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக டெல்டா...

துயர் பகிர்வு