Thursday, July 29, 2021

இதையும் படிங்க

காளியம்மன் சிலை மீது படம் எடுத்து ஆடிய நாகப்பாம்பு

பாம்பு கோவில் மூலவர் சன்னதியில் உள்ள காளியம்மன் சிலை மீது ஏறி சிலையில் படம் எடுத்து ஆடியது. இதை பார்த்த பொதுமக்கள் மெய்...

தும்பை மலராக பிறந்த பெண்- ஆன்மிக கதை

தும்பைப் பூவை உற்றுப்பார்த்தால் தெரியும். அதன் உள்ளே ஐந்து விரல்களும், பாதமும் போன்ற அமைப்பு இருக்கும். சிவபெருமானுக்கு விருப்பமான மலர்களில், தும்பைக்கும் முக்கிய...

குந்தியிடம் கர்ணன் கேட்ட வரங்கள்

கர்ணன் முகத்தில் சோகப் புன்னகை படர்ந்தது. தாய் தன் மீதான பாசத்தில் வந்திருப்பதாக முதலில் நினைத்திருந்தான். ஆனால் அவள் கேட்ட வரங்களின் மூலம்,...

ஆடி மாத சுபமுகூர்த்த நாட்கள்

ஆடி மாதத்தில் (ஜூலை - ஆகஸ்ட்) வரும் முக்கியமான சுபமுகூர்த்த நாட்கள் மற்றும் நல்ல நேரம் என்னவென்று விரிவாக அறிந்து கொள்ளலாம்.

சிவ பூஜைக்கு உகந்த ஜோதிர்லிங்க தலங்கள்

சிவ வழிபாடு செய்தால் நம் எண்ணங்கள் அனைத்தும் நிறைவேறும். முன்ஜென்ம பாவங்கள் அனைத்தும் தீரும். சிவ பூஜைக்கு உகந்த ஜோதிர்லிங்க தலங்கள் எதுவென்று...

புஷ்பாஞ்சலி செய்யும் போது சொல்ல வேண்டிய ஸ்லோகம்!

எப்போது பூஜை செய்தாலும் என்ன பூஜைகள் செய்தாலும் அந்த பூஜையில் முக்கிய அங்கம் வகிப்பவை, பூக்கள்தான்! ஒவ்வொரு பூவுக்கும் எப்படி விதம்விதமான நறுமணங்கள் இருக்கிறதோ… அதேபோல் ஒவ்வொரு பூவைக் கொண்டும்...

ஆசிரியர்

கவித்துவம் அருளும் ராஜமாதங்கி!

ஸ்ரீசரஸ்வதியின் மற்றொரு சொரூபமான ‘ஸ்ரீராஜமாதங்கி’ என்ற திருநாமத்துடன் விளங்கும் இந்த அன்னை, ஸ்ரீதசமஹா வித்யைகளில் ஒன்பதாவதாக ஆராதிக்கப்படுகிறாள். இந்த தேவிக்கு சியாமளா, மந்திரிணி என்ற பெயர்களும் உண்டு. நகுலேஸ்வரி மற்றும் வாக்வாதினி இருவரும் இவளுடைய தோழியர்.

மதங்க முனிவரின் புத்ரியாக அவதரித்ததால் ‘மாதங்கி’ என அழைக்கப்பட்டார். ப்ரளய காலத்தில் மீண்டும் உலக ஸ்ருஷ்டி ஏற்படுவதற்காக, ப்ரம்மாவும், விஷ்ணுவும், ருத்திரரும், பரமேஸ்வரனைக் குறித்து தவம் செய்தனர். அது சமயம் ப்ரம்மதேவர் பரமேச்வரனை யானை ரூபமாய் (‘மதங்க’ வடிவாய்) தியானம் செய்ய, அப்போது அவர் மனதில் இருந்து ஒரு முனிவர் உதித்தார். அவரே மதங்க முனிவர்.

இவரும் பரமேஸ்வரனைக் குறித்து தவம் செய்ய விரும்பினார். எங்கும் ஜலமாக இருந்ததால், எந்த இடத்தில் தவம் செய்வதென்று புரியவில்லை. நாரத மஹரிஷி ‘சுவேத வனம்’ என்றழைக்கப்படும் திருவெண்காட்டில் தவம் செய்யுமாறு பணித்தார். சிவனுடைய சூலத்தால் தாங்கப் பெற்றிருப்பதால் அந்த இடம் மட்டும் ப்ரளயத்தால் அழியாதிருப்பதாகும்.

நாரதரின் யோசனைப்படி அங்கு தவம் செய்த முனிவரின் தவத்திற்கு இடையூறு செய்த மன்மதனை ‘சிவ நேத்ரத்தால் அழிவாய்’ என சாபமிட்டுவிட்டார்.

அடிபணிந்த மன்மதனிடம், ‘ஸ்ரீகிருஷ்ணாவதாரத்தில் அவருடைய மகனாய் (ப்ரத்யும்னன்) பிறந்து மீண்டும் சரீரம் பெறுவாய்’ என ஆசிர்வதித்தார். அதே போல் அவருடைய தவத்தைச் சோதிக்க விஷ்ணுவும் மோகினி ரூபம் கொண்டு வந்தார்.

அவரையும் சபிக்க முற்பட்ட போது, விஷ்ணு தன் மோகினி ரூபத்தைக் களைந்து தரிசனம் கொடுக்க அதில் மகிழ்ந்த மகரிஷி, அந்த இடத்திலேயே மோகினி ரூபமாகவும் விஷ்ணு ரூபமாகவும் இருந்து கொண்டு என்றென்றும் அருள் பாலிக்க வேண்டுமென்றும், யோக மார்க்கத்தை அருள வேண்டுமென்றும் வேண்டினார். முனிவரின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட மாதவனும் பத்ரியில் தர்ம ப்ரஜாபதியின் புத்திரராய் அவதரித்தபோது அம்முனிவருக்கு யோக மார்க்கத்தை உபதேசித்தார்.

மதங்க முனிவர் யோகத்தில் இருந்தபோது அவர் ஹ்ருதயத்தில் ஸ்ரீமஹா கணபதி தோன்றி அஷ்டாங்க யோக ஸித்தியை அருளினார். பரமேச்வரன் அம்பிகையுடன் அது போல் காட்சி கொடுக்க, பேரானந்தம் கொண்டார் முனிவர். அவரிடம் தான் தவம் செய்த இடம் தன் பெயரில் ‘மதங்காசிரமம்’ என்ற பெயருடன் விளங்க வேண்டுமென்றும், இங்கு பிறந்தாலும், வளர்ந்தாலும், இறந்தாலும் பக்தர்களுக்கு நால்வித புருஷார்த்தங்களையும் அருள ‘மதங்கேசர்’ என்ற பெயருடன் பரமேஸ்வரன் லிங்க வடிவில் விளங்க வேண்டுமென்றும், பராசக்தியே தனக்கு மகளாய் பிறக்க வேண்டுமென்றும் பிரார்த்தித்தார்.

மேலும் அவ்வாறு பிறக்கும் தன் மகளை பரமேச்வரன் திருமணம் செய்து கொள்ள வேண்டுமென்றும் வேண்டினார். அப்போது அம்பிகை மதங்கனிடம், ‘‘நான் சித் சொரூபிணீ, நான் மகளாகப் பிறக்க முடியாது. என் சொரூபமான மந்திரிணீ தேவி உமக்கு மகளாகப் பிறந்து பரமேஸ்வரனை அடைவாள். உன் புத்திரனுக்கும் அவள் மகளாய் பிறந்து ஸ்வேதாரண்யேச்வரரை மணம் புரிவாள்’’ என அருளினாள்.

பண்டாஸூரனுடன் போரிட கிளம்பும் போது ஸ்ரீலலிதா தேவியின் கரும்பு வில்லினின்றும் உதித்தவள் மந்த்ரிணீதேவீ. இவளுடைய ரதத்திற்கு ‘கேய சக்ரம்’ என்று பெயர். இவள் எப்பொழுதும் சங்கீத யோகினிகளால் சூழப்பட்டிருப்பாள். இவளுடைய சேனையின் பலம் 1000 அக்ஷௌஹிணிகளாகும். இத்தகு பெருமை வாய்ந்த மந்த்ரிணீ தேவியைத் துதித்தார் மதங்க முனிவர்.

ஆடி மாதம் வெள்ளிக்கிழமை விடியற் காலையில் மதங்க தீர்த்தத்தில் நீலோத்பல மலரில், அழகான பெண் குழந்தையாக அவதரித்தார் மந்த்ரிணீ. அவளது மரகத பச்சை வர்ண திருமேனியும் மை தீட்டிய கண்களும், வீணை, கிளியுடன் கூடிய வதனமும், பேரொளியுடன் திகழும் குழந்தையை விடியற்காலை ஸ்நானத்திற்கு வந்த மகரிஷி கண்டு ப்ரம்மானந்தத்தில் திளைத்தார்.

கைநிறைய அள்ளியெடுத்து மார்போடு அணைத்துக் கொண்டு பராசக்தியின் பெருங்கருணையை நினைத்து நெக்குருகி ஆனந்தக் கண்ணீர் தளும்ப தம் ஆசிரமத்திற்கு கொண்டு வந்து தன் மனைவி சித்கலையிடம் தர, இருவரும் அக்குழந்தையை சீராட்டி ‘மாதங்கி’ என்ற திருநாமம் சூட்டி வளர்த்து வந்தனர். நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வந்த மாதங்கீ, பருவ வயதை அடைந்ததும் அவளுக்கு திருமணம் செய்ய முடிவு செய்த முனிவர். பல தேவர்கள் மற்றும் முனிவர்களை உடன் அழைத்துக் கொண்டு மதங்கேஸ்வரரிடம் சென்றார்.

மாதங்கியை முறைப்படி திருமணம் செய்து கொண்டு தங்களை ஆசிர்வதிக்க வேண்டுமென்று வேண்டிக்கொள்ள, சித்திரை மாதம், சுக்ல பக்ஷம் ஸப்தமி திதி கூடிய நன்னாளில் மணம் புரிவதாய் திருவாய் மலர்ந்தருளினார் ஈசன். திருமணத்திற்கான ஏற்பாடுகள் விமரிசையாய் நடந்தன.

ஸ்ரீமாதங்கி, தேவலோக சிற்பியான விஸ்வகர்மாவின் மூலம் ஏழு ஆவரணங்கள் கொண்ட யந்த்ர மயமான மாதங்கிபுரத்தை திருமணத்திற்காக சிருஷ்டி செய்தாள். மதங்க முனிவரும் தேவர்கள் சகிதமாய் மதங்கேஸ்வரரை அழைக்க, அவரும் தன் கணங்களுடன் வந்து தங்கினார்.

மறுநாள் வேத கோஷங்களுடன், மங்கள வாத்தியங்கள் முழங்க
ஸ்ரீமாதங்கி தேவியை ஸ்ரீமதங்கேஸ்வரர் திருமணம் புரிந்து கொண்டார். ஆனந்த வைபவத்தைக் கண்டு பேரானந்தம் கொண்ட மதங்க முனிவர் பரமேச்வரனிடம், ‘‘தாங்கள் எப்போதும் இத்திருக்கோலத்திலேயே காட்சி தந்தருள வேண்டும்’’ என்று பிரார்த்திக்க, அவருக்கு என்றும் அவருடைய ஹ்ருதய கமலத்தில் திருமணக் கோலத்துடன் காட்சி கொடுத்துக் கொண்டிருக்கிறார் மகாதேவன்.

இந்த மாதங்கி தேவியே ‘ராஜ மாதங்கீ’ எனவும் அழைக்கப்படுகிறாள். இவள் ஸ்ரீபுரத்தில் உள்ள கிருகத்தின் கிழக்கு வாயிலில் உள்ள வெள்ளி மயமான பவனத்தில் வீற்றிருக்கிறாள்.

இதையும் படிங்க

கணவனுக்கு நீண்டஆயுள் -சுமங்கலி யோகம் தரும் வட சாவித்திரி விரதம்!

வடசாவித்திரி விரதம் என்றவுடன் இது என்னவோ வட நாட்டினர் மட்டும் கொண்டாட வேண்டிய விரதம் என நினைத்துவிடாதீர்கள். வடம் என்றால் விழுது என பொருள். ஆலமரத்தின் பலமே அதன் விழுதுகளில்...

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 29.07.2021

மேஷம்மேஷம்: சில காரியங்களை அலைந்து திரிந்து முடிக்க வேண்டி வரும். பிள்ளைகளை அன்பால் அரவணைத்துப் போங்கள். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். வியாபாரத்தில் பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப்பாருங்கள்....

கும்பகோணத்தை சுற்றியுள்ள சங்கடம் தீர்க்கும் ஆலயங்கள்

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம், ‘கோவில் நகரம்’ என்று வர்ணிக்கப்படுகிறது. இந்த நகரிலும், அதைச் சுற்றிலும் ஏராளமான கோவில்கள் உள்ளன. அவற்றில் பலவும் பல்வேறு...

மனைவியின் ஆயுள் பலம் அதிகரிக்க கணவன் செய்யவேண்டிய பூஜை

கணவனின் ஆயுளை அதிகரிக்க மனைவிமார்கள் பல பூஜைகள் செய்வதுண்டு. மனைவிக்கு ஆயுள் பலன் அதிகரிக்க கணவன் மார்களும் சில பூஜைகளை செய்யலாம். அதில்...

படைப்பின் அதிபதி பிரம்மா

அனைத்து உயிர்களையும், படைத்து, காத்து அருளும் பொறுப்பை மும்மூர்த்திகளாக சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகியோர் செய்து வருவதாக புராணங்கள் தெரிவிக்கின்றன. மும்மூர்த்திகளில் ஒருவரான பிரம்மனைப் பற்றி இங்கே பார்ப்போம்.

தலைஞாயிறு அருகே வரதராஜ பெருமாள் கோவிலில் திருக்கல்யாணம்

தலைஞாயிறு அருகே வரதராஜ பெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதையொட்டி சிறப்பு யாக பூஜையும், அபிஷேக ஆராதனையும் நடைபெற்றது.

தொடர்புச் செய்திகள்

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

இலங்கை ஜனாதிபதிக்கு அமெரிக்காவை போன்ற பிரத்தியேக அறை!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஊடக சந்திப்பை நடத்துவதற்கு என அமெரிக்காவை போன்ற பிரத்தியேக அறை ஒன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட ஊடகவியலாளர் கலந்துகொண்டு ஜனாதிபதியை அல்லது அவரது...

ககன்யான் திட்டம் குறித்து சிவன் கருத்து!

ககன்யான் திட்டத்தில் ஆளில்லா விண்கலத்தை விண்ணில் செலுத்துவது தாமதமாகுவதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ருவிட்டர் பதிவில், ‘ககன்யான் திட்டத்தின்...

வடக்கு ,கிழக்கிற்கு மேலும் 16 இலட்சம் கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டன!

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்காக 16 இலட்சம் கொரோனா தடுப்பூசிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் இன்று (செவ்வாய்க்கிழமை) கையளிக்கப்பட்டுள்ளன. இலங்கைக்கான சீனத் தூதுவர் கியூய் ஷென்ஙொங்,...

மேலும் பதிவுகள்

வட.மாகாண பிரதம செயலாளராக சமன் பந்துலசேன!

வடக்கு மாகாண பிரதமர் செயலாளராக சமன் பந்துலசேன தனது கடமைகளை இன்று (திங்கட்கிழமை) உத்தியோகப்பூர்வமாக பொறுப்பேற்றுள்ளார். கைதடியிலுள்ள வடக்கு மாகாண பிரதம செயலாளர் அலுவலகத்தில், தனது...

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலம்: நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு செயலமர்வு!

குறித்த செயலமர்வு நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில், எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த செயலமர்வில் ஆளும் மற்றும் எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களையும்...

அயர்லாந்து அணிக்கெதிரான ரி-20 தொடரை வென்றது தென்னாபிரிக்கா!

அயர்லாந்து அணிக்கெதிரான இரண்டாவது ரி-20 போட்டியில், தென்னாபிரிக்கா அணி 42 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ரி-20 தொடரை 2-0...

இலங்கையில் பால்மா இறக்குமதியை 70 வீதம் குறைப்பதற்கு தீர்மானம்!

இறக்குமதி செய்யப்படும் 70 சதவீதமான பால்மா இறக்குமதிகளை நிறுத்த பால்மா நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்து வருவதாக பால்மா இறக்குமதியாளர்கள் ஒன்றியத்தின் உறுப்பினர் லக்ஷ்மன் வீரசூரிய தெரிவித்துள்ளார்.

இந்தியா : கன மழை வட கர்நாடகாவிலுள்ள கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கின!

வட கர்நாடகாவிலுள்ள யாதகிரி, ஹாவேரி, பாகல்கோட்டை, பெலகாவி உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது. இதேவேளை கிருஷ்ணா, வேதகங்கா, துத்கங்கா உள்ளிட்ட ஆறுகளில் கடும்...

இலங்கையில் நேற்று ஒரு இலட்சத்து 75 ஆயிரத்து 696 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன!

குறிப்பாக நேற்று 42 ஆயிரத்து 814 பேருக்கு சீனாவின் சினோபார்ம் தடுப்பூசியின் முதலாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளது. மேலும் 5 ஆயிரத்து 165 பேருக்கு சினோபார்ம் தடுப்பூசியின்...

பிந்திய செய்திகள்

கணவனுக்கு நீண்டஆயுள் -சுமங்கலி யோகம் தரும் வட சாவித்திரி விரதம்!

வடசாவித்திரி விரதம் என்றவுடன் இது என்னவோ வட நாட்டினர் மட்டும் கொண்டாட வேண்டிய விரதம் என நினைத்துவிடாதீர்கள். வடம் என்றால் விழுது என பொருள். ஆலமரத்தின் பலமே அதன் விழுதுகளில்...

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 29.07.2021

மேஷம்மேஷம்: சில காரியங்களை அலைந்து திரிந்து முடிக்க வேண்டி வரும். பிள்ளைகளை அன்பால் அரவணைத்துப் போங்கள். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். வியாபாரத்தில் பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப்பாருங்கள்....

மாதவிலக்கின் போது மார்பகங்கள் வலிப்பதேன்?

மார்பகங்களில் வலி, வீக்கம், மார்பகங்கள் கனத்துப் போன உணர்வு அல்லது மென்மையான உணர்வு என எல்லாவற்றுக்கும் காரணம் புரோஜெஸ்ட்ரோன் மற்றும் ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன்களின்...

வேர்க்கடலை ஸ்டப்ஃடு பூரி

வேர்க்கடலையை வைத்து பல்வேறு ருசியான ரெசிபிகளை தயார் செய்யலாம். அந்த வகையில் இன்று வேர்க்கடலை ஸ்டப்ஃடு பூரி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

கும்பகோணத்தை சுற்றியுள்ள சங்கடம் தீர்க்கும் ஆலயங்கள்

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம், ‘கோவில் நகரம்’ என்று வர்ணிக்கப்படுகிறது. இந்த நகரிலும், அதைச் சுற்றிலும் ஏராளமான கோவில்கள் உள்ளன. அவற்றில் பலவும் பல்வேறு...

மனைவியின் ஆயுள் பலம் அதிகரிக்க கணவன் செய்யவேண்டிய பூஜை

கணவனின் ஆயுளை அதிகரிக்க மனைவிமார்கள் பல பூஜைகள் செய்வதுண்டு. மனைவிக்கு ஆயுள் பலன் அதிகரிக்க கணவன் மார்களும் சில பூஜைகளை செய்யலாம். அதில்...

துயர் பகிர்வு