முருகனுக்கு பல பெயர்கள் உண்டு. அந்தப் பெயர்களில் உள்ள அர்த்தங்களை புரிந்து கொள்ளுங்கள். ‘முருகா’ என்பது மும்மூர்த்திகளும் இணைந்த பெயர். முருகனை வழிபட்டால் மும்மூர்த்திகளையும் வழிபட்ட பலன் கிடைக்கும்.
‘முருகா என்றழைக்கவா? முத்துக்குமரா என்றழைக்கவா? கந்தா என்றழைக்கவா? கதிர்வேலா என்றழைக்கவா? எப்படி அழைப்பேன் உன்னை எங்கே காண்பேன்’ என்பது இனிய பக்திப்பாடலாகும். முருகனுக்கு பல பெயர்கள் உண்டு. அந்தப் பெயர்களில் உள்ள அர்த்தங்களை புரிந்து கொள்ளுங்கள்.
முருகன் என்ற பெயருக்கான விளக்கம்:-
‘மு’ என்றால் காக்கும் கடவுள் – முகுந்தன்
‘ரு’ என்றால் அழிக்கும் கடவுள் – ருத்ரன்
‘க’ என்றால் படைக்கும் கடவுள் – பிரம்மா என்ற காமலோற்பவன்
- கார்த்திகேயன்: கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்டவர்
- விசாகன்: விசாக நட்சத்திரத்தில் பிறந்தவர்
- சண்முகன்: ஆறு முகங்களைக் கொண்டவர்
- சுவாமிநாதன்: சிவனுக்கே, நாதனாக விளங்கி பாடம் சொல்லியவன்
- மயில் வாகனன்: மயில் வாகனம் கொண்டவன்
- தேவசேனாதிபதி: தேவர்களுக்கெல்லாம் தலைவன்
- சேவற்கொடியோன்: சேவலைக் கொடியாகக் கொண்டவன்
- வள்ளி மணாளன்: வள்ளியை மணந்தவன்
- வேலாயுதன்: வேலை ஆயுதமாகக் கொண்டவன்
- முருகன்: இளமையானவன்
‘முருகா’ என்பது மும்மூர்த்திகளும் இணைந்த பெயர். முருகனை வழிபட்டால் மும்மூர்த்திகளையும் வழிபட்ட பலன் கிடைக்கும்.