மேஷம்
நாவன்மையால் நல்ல பெயர் எடுக்கும் நாள். நம்பி வந்தவர்களுக்கு கைகொடுத்து உதவுவீர்கள். குடும்பத்தில் குதூகலம் அதிகரிக்கும்.அலங்காரப் பொருட்களை வாங்கிச்சேர்க்கும் எண்ணம் உருவாகும்.
ரிஷபம்
வருமானம் திருப்தி தரும் நாள். வம்பு, வழக்குகளைச் சமாளித்து வளம் காண்பீர்கள். வீட்டைச் சீரமைப்பதில் அதிக அக்கறை ஏற்படும். தொழில் முன்னேற்றம் உண்டு.பொதுநல ஈடுபாடு அதிகரிக்கும்
மிதுனம்
மாற்றங்கள் உருவாகும் நாள். மனதிற்கினிய சம்பவங்கள் நடைபெறும்.ஆரோக்கியத்திற்காக சிறிது செலவு செய்யும் சூழ்நிலை உண்டு. தொட்டகாரியத்தில் வெற்றி ஏற்பட நண்பர்கள் ஒத்துழைப்புச்செய்வர்.
கடகம்
மதிப்பும், மரியாதையும் உயரும் நாள். மாமன், மைத்துனர் வழி ஒத்துழைப்பு உண்டு. பஞ்சாயத்துகள் சாதகமாக முடியும். தொழில் வளர்ச்சிக்கு முதலீடு செய்ய கேட்ட இடத்தில் தொகை கிடைக்கும்.
சிம்மம்
ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டிய நாள். பொருளாதார முன்னேற்றம் கருதி எடுத்த புது முயற்சி வெற்றி பெறும். குழந்தைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள்.
கன்னி
யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். எந்தக் காரியத்தையும் எடுத்தோம், முடித்தோம் என செய்ய இயலாது. வழிபாடுகளில் நம்பிக்கை வைப்பீர்கள். விழிப்புணர்ச்சியுடன் செயல்படுவது நல்லது.
துலாம்
பணிகளில் குறுக்கீடுகள் ஏற்படும் நாள். வருமானத்தைப் பெருக்கிக் கொள்ள புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். குடும்ப முன்னேற்றம் கருதி முக்கியப் புள்ளிகளைச் சந்திக்கும் வாய்ப்பு கிட்டும்.
விருச்சிகம்
அவசரமாக எடுத்த முடிவிலும் ஆதாயம் கிடைக்கும் நாள். அதிகாரப் பதவியில் உள்ளவர்களின் ஆதரவு கிடைக்கும். விலையுயர்ந்த பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.
தனுசு
முயற்சியில் வெற்றி கிட்டும் நாள். வீடு வாங்கும் யோகம் உண்டு. வாழ்க்கைத்துணை வழியே வந்த கருத்து வேறுபாடு அகலும். வரன்கள் வாயில் தேடி வந்து சேரும். பொது வாழ்வில் புகழ் கூடும்.
மகரம்
திடீர் திருப்பம் ஏற்படும் நாள். தெரியாததை தெரிந்து கொள்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். தொழிலில் இருந்த மறைமுகப் போட்டிகள் மாறும். பழைய கடன்களை அடைக்க எடுத்த முயற்சி வெற்றி தரும்.
கும்பம்
காலை நேரத்தில் கவனம் தேவைப்படும் நாள். மதியத்திற்கு மேல் செய்யும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். தொல்லை கொடுத்தவர்கள் தோள் கொடுத்து உதவுவர். வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும்.
மீனம்
மனக்குழப்பம் ஏற்படும் நாள். எதையும் நிதானித்து முடிவெடுப்பது நல்லது. உத்தியோகத்தில் உடனிருப்பவர்களால் தொல்லைகள் ஏற்படும். பயணங்களில் கூடுதல் கவனம் தேவை.