ஓம்நமசிவய!
திருவும் கல்வியும் சீரும் தழைக்கவும்
கருணை பூக்கவும் தீமையைக் காய்க்கவும்
பருவமாய் நமதுள்ளம் பழுக்கவும்
பெருகும் ஆழத்துப் பிள்ளையைப் பேணுவாம்!
காயத்திரி மந்திரங்கள்!
(விநாயகர், மகாகாயத்திரி, சிவன், பைரவர்,
முருகன், விஷ்ணு, அம்மன், சப்த மாதா,
நவகிரக, இறை வாகன, லட்சுமி குபேரர்,
ப்ரம்மா, மன்மதன், ஆதிசேஷன், சுதர்சனமூர்த்தி,
ஆஞ்சநேயர், நாகராஜன், ராகவேந்திரர், கார்த்த வீர்யார்ஜுனர்,
தத்தாத்ரேயர், வாஸ்து பகவான், துளசி,)
பிரகிருதி சரஸ்வதி ஸ்வரூபம் புருஷனுடன் கூடிட
பிரம்மனின் முகத்திலிருந்து
காயத்ரீ மந்திரமாகிய இருபத்திநான்கு எழுத்துகள்
உண்டாயின. இதன் அடிப்படையிலே மற்ற தெய்வங்களுக்கான
மந்திரங்கள் சொல்லப்பட்டு அவைகள் அந்த தெய்வங்களின்
காயத்திரி என அழைக்கப்பட்டன.
தனது காயத்தை-உடலை திரியாகவைத்து
இருகைகள், இரு கால்கள், தலை என
ஐந்து உறுப்புகளை குத்து விளக்கின்
ஐந்து திரிகளாக போட்டு அதில்
சுடரினை ஏற்றி தவம் செய்தார் கௌசிகன்.
அதன் பலனாக கௌசிகன் ஒளிக்கடவுளுக்குரிய
காயத்திரி மந்திரத்தை அறிந்தார்.
அது மஹா காயத்திரி எனப்படும்.
உலக உயிர்களுக்கு நன்மை தரும்
இந்த மந்திரத்தை கண்டறிந்ததால்
கௌசிகன் என்ற அவர் பெயர்
விஸ்வாமித்திரன் என்றானது.
விஸ்வம்-உலகம், மித்திரன்-நண்பன்.
இதன் பிறகு ஒவ்வொரு தெய்வத்திற்குரிய
காயத்திரி மந்திரங்கள் வெவ்வேறு
முனிவர்களால் கண்டு பிடிக்கப்பட்டது.
-நன்றி ஆன்மீக மலர் –
