Saturday, July 24, 2021

இதையும் படிங்க

எத்தனை வகையான விரதங்கள் உள்ளது தெரியுமா….?

உமிழ்நீரைக் கூட விழுங்காமல் இருப்பது. இதை யோகிகள் மட்டுமே கடைப்பிடிப்பார்களாம்.தேன் அல்லது இளநீர் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை மட்டும் அருந்தி உபவாசம் இருத்தல்.பசுவின்பாலை மட்டும் அருந்தி உபவாசம் இருத்தல்.எந்த...

தஞ்சை பெரிய கோவிலில் பக்தர்கள் பிரதோஷ வழிபாடு

poojaதஞ்சை பெரியகோவிலில் உள்ள மகா நந்திக்கு மஞ்சள், பால் அபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து சாமி தரிசனம்...

5 நாட்கள் சிறப்பு பூஜைக்கு பிறகு சபரிமலை கோவில் நடை அடைப்பு

ஆடி மாத பூஜையையொட்டி ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் முதல் நாள் மட்டும் 5 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். மற்ற 4 நாட்கள் 10...

இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் ஆடி பெருந்திருவிழா 2-வது ஆண்டாக ரத்து

இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் ஆடி பெருந்திருவிழா 2-வது ஆண்டாக ரத்து செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் பக்தர்கள் வழக்கம்போல் அம்மனை தரிசிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தகட்டூர் ஆகாச மாரியம்மன் குதிரை வாகனத்தில் வீதிஉலா

வாய்மேட்டை அடுத்த தகட்டூர் சுப்பிரமணியன்காடு ஆகாச மாரியம்மன் கோவிலில் ஆடி திருவிழா நாட்களில் தினமும் சாமி வீதி உலா நடைபெற்று வருகிறது.

ஆடி முதல் செவ்வாய்: அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு

கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமலில் உள்ளதால், அவ்வையார் அம்மன் கோவிலில் கொழுக்கட்டை அவித்து படைக்க தடை விதிக்கப்பட்டது.

ஆசிரியர்

பிரேமிக விட்டலர் பெருமாள் கோவில்!

மகாராஷ்டிரா மாநிலம், சோலாப்பூர் மாவட்டத்தில் உள்ளது பண்டரிபுரம். இங்கு விட்டலர் -ருக்மணி திருக்கோவில் அமைந்துள்ளது. இதே போல் செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கத்திற்கு அருகில் விட்டலாபுரம் என்ற சிற்றூரில் பழமையான ‘பிரேமிக விட்டலர் கோவில்’ உள்ளது. விஜயநகர மன்னர் கிருஷ்ண தேவராயரின் அரச பிரதிநிதியாக இருந்த கொண்டைய தேவ சோழ மகாராஜன் என்பவரால், 16-ம் நூற்றாண்டில் இந்த ஆலயம் கட்டப்பட்டிருக்கிறது.

கருவறை, அர்த்தமண்டபம், முகமண்டபம், மகாமண்டபம், திருச்சுற்று, தாயார் சன்னிதி என பல அம்சங்களுடன் இந்த ஆலயம் அமையப்பெற்றுள்ளது. ஆலயத்திற்கு வெளியே ஒரு சிறிய சன்னிதியில் பக்த ஆஞ்சநேயர் நின்ற திருக்கோலத்தில், விட்டலர் கோவிலை பார்த்தபடி காட்சி தருகிறார்.

கோவிலுக்குள் பலிபீடம், அழகிய கொடிமரம், பழமையான வடிவமைப்பில் கருடாழ்வார் சன்னிதி உள்ளன.இவற்றைக் கடந்தால் சற்று உயரமான வடிவமைப்பில் விட்டலர் கோவில் அமைந்துள்ளது. மகாமண்டபம், முகமண்டபம் இவற்றைக் கடந்து அர்த்தமண்டபத்தை அடைந்தால், கருவறையில் பிரேமிக விட்டலன் தனது இரண்டு கரங்களையும் இடுப்பில் வைத்தபடி ருக்மிணி – சத்யபாமாவோடு காட்சி தருகிறார்.

வெளிப்பிரகாரத்தில் முதலில் சந்தானலட்சுமித் தாயார் தனி சன்னிதியில் நான்கு திருக்கரங்களோடு அமர்ந்த திருக்கோலத்தில் காட்சி அளிக்கிறார். குழந்தைப்பேறு வாய்க்காதவர்கள் இத்தலத்து தாயாரை மனமுருகிப் பிரார்த்தித்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். இதைத் தொடர்ந்து சுற்றுப்பிரகாரத்தில் மூன்று சிறிய சன்னிதிகள் ஒரு சேரக் காட்சி தருகின்றன.

இதில் முதல் சன்னிதியில் சீனிவாசப் பெருமாளும்- தாயாரும் அருள்கிறார்கள். அடுத்த சன்னிதியில் வரதராஜப்பெருமாளும் -தாயாரும் காட்சி தருகிறார்கள். மூன்றாவது சன்னிதியில் ராமானுஜரும், விஷ்வக்ஸேனரும் வீற்றிருக்கின்றனர்.

இக்கோவிலில் ஒவ்வொரு ஏகாதசி தினத்தன்றும் காலை 9 மணிமுதல் 12 மணி வரை திருமஞ்சனம், நாம சங்கீர்த்தனம் ஆகியவற்றுடன் பூஜைகள் நடைபெறுகின்றன. மேலும் இத்திருக்கோவிலில் கார்த்திகை ஏகாதசி, ஆஷாட ஏகாதசி, யுகாதி, மகாசிவராத்திரி, கிருஷ்ண ஜெயந்தி, வைகுண்ட ஏகாதசி போன்ற உற்சவங்கள் வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகின்றன. இத்தினங்களில் திருமஞ்சனம் மற்றும் நாமசங்கீர்த்தனம் போன்றவை நடைபெறுகின்றன. கிருஷ்ண ஜெயந்தி அன்று மட்டும் மாலையில் திருமஞ்சனம் செய்யப்படுகின்றது.

குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இத்தலத்திற்கு வந்து சந்தானலட்சுமி தாயாரை மனமுருகிப் பிரார்த்தித்து, விட்டலர் சன்னிதியில் தரும் சந்தாகிருஷ்ணர் விக்கிரகத்தை மடியில் வைத்து ‘ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே; ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே’ என்ற மந்திரத்தை உச்சரித்து, விட்டலனையும் தாயாரையும் மனதால் வழிபட குழந்தைப் பேறு வாய்க்கும் என்பது ஐதீகம்.

அமைவிடம்
கல்பாக்கத்தில் இருந்து நெரும்பூர் – திருக்கழுக்குன்றம் வழித்தடத்தில் ஐந்து கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது இந்த ஆலயம். இத்தடத்தில் சில பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கல்பாக்கம் மற்றும் நெரும்பூரில் இருந்து ஷேர் ஆட்டோவில் பயணித்தும் இக்கோவிலை அடையலாம். சென்னை -புதுச்சேரி கிழக்குக்கடற்கரைச் சாலைத் தடத்தில் மாமல்லபுரத்தை அடுத்த வெங்கம்பாக்கத்திலிருந்து நான்கு கிலோமீட்டர் தொலைவில் இளையனார்குப்பம் என்ற ஊர் வரும். அங்கிருந்து வலது புறச்சாலையில் திரும்பினால் இரண்டு கிலோமீட்டரில் விட்டலாபுரம் சென்றுவிடலாம்.

நன்றி-மாலை மலர்

இதையும் படிங்க

வேளாண் மரபில் ஆடி மாதம்!

ஆடி மாதம் என்பது உலகெங்கும் வேளாண் மரபினரின் ஓர் பண்பாட்டு அடையாளம். உலக நாடுகள் எங்கும் இந்நாள் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வந்தது. ஆடி மாதம் பொதுவாக தமிழ்நாட்டில் ஜூலை 14,...

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 24.07.2021

மேஷம்மேஷம்: தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். உடன்பிறந்தவர்கள் வேலைகளை பகிர்ந்து கொள்வார்கள். நெருங்கியவர்களை சந்தித்து எதிர்காலம் குறித்து ஆலோசிப்பீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் தலைமையின் ஆதரவு கிட்டும்....

இன்று ஆடி மாத பவுர்ணமி- விரதம் அனுஷ்டித்தால் கிடைக்கும் பலன்கள்

ஆடி பவுர்ணமி தினத்தில் நாம் செய்ய வேண்டியவை என்ன என்பதையும், அதனால் நமக்கு ஏற்படும் சிறப்பான பலன்கள் என்ன என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.

புத்தபெருமான் முதன்முதலில் தர்ம உபதேசம் நிகழ்த்திய எசல முழு நோன்மதி தினம் இன்று

புத்தபெருமான் முதன்முதலில் தர்ம உபதேசம் நிகழ்த்திய எசல முழு நோன்மதி தினம் இன்றாகும். சித்தார்த்த இளவரசர் அனைத்து அரச...

திருமலை அருகே ஸ்ரீவாரி பாதத்தில் சத்ர ஸ்தாபனோற்சவம்!

திருமலையில் உள்ள 7 மலைகளில் மிக உயரமான மலை நாராயணகிரி மலை. திருமகளை தேடி வந்த சீனிவாசபெருமாள் நாராயணகிரி மலை சிகரத்தில் பாதம் பதித்த முதல் இடம் இதுவாகும்.

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 23.07.2021

மேஷம்மேஷம்: உங்கள் செயலில் வேகம் கூடும். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப் பார்கள். உத்தியோகத்தில் அதிகாரியின்...

தொடர்புச் செய்திகள்

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

இந்தியாவில் டெல்டா வைரஸின் ஆதிக்கம் அதிகம்!

இந்தியாவில் டெல்டா வைரஸின் ஆதிக்கம் அதிகம் உள்ளதாகவும், இதர வைரஸ்கள் குறைந்து விட்டதாகவும் இன்சாகாக் அமைப்பு தெரிவித்துள்ளது. இது குறித்த ஆய்வறிக்கையில், உலகளவில் டெல்டா வைரஸ்...

யாழ்ப்பாணத்தில் கறுப்பு யூலை கலவரத்தின் நினைவு தின அஞ்சலி!

கறுப்பு யூலை கலவரத்தின் நினைவு தினத்தினை முன்னிட்டு யாழ்.மாநகர சபையில் இன்று (வெள்ளிக்கிழமை) அஞ்சலி செலுத்தப்பட்டது. குறித்த நிகழ்வில் யாழ்.மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன்,...

தமிழக அரசின் முடிவுக்காக காத்திருக்கும் வி.கே.சிங்!

சென்னையில் இரண்டாவது விமான நிலையம் அமைப்பது தொடர்பான இடத்தேர்வில் தமிழக அரசின் முடிவுக்காக காத்திருப்பதாக மத்திய சிவில் விமானப்போக்குவரத்துத் துறை இணையமைச்சர் வி.கே.சிங் தெரிவித்துள்ளார். தமிழகத்தில்...

மேலும் பதிவுகள்

ரி-20 தொடரில் விளையாடுவதற்காக பங்களாதேஷ் செல்லும் அவுஸ்ரேலியா அணி!

அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணி, பங்களாதேஷூக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து போட்டிகள் கொண்ட ரி-20 தொடரில் விளையாடவுள்ளது. பங்களாதேஷ் சுற்றுப்பயணத்தை பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் கிரிக்கெட்...

பாலியல் தொல்லை-மாணவர்கள் அச்சமின்றி தெரிவிக்க அனைத்து பள்ளிகளிலும் குழு அமைக்க உத்தரவு!

சென்னை: பாலியல் தொல்லை குறித்து மாணவர்கள் அச்சமின்றி தகவல் தெரிவிக்க அனைத்து பள்ளிகளிலும் குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சமூக நலத்துறை அதிகாரி, மாவட்ட...

எல்லை விவகாரம் : 12ஆவது சுற்று பேச்சுவார்த்தை குறித்த அறிவிப்பு!

இந்தியா – சீனா இடையிலான எல்லைப் பிரச்சினை குறித்து தீர்வுக் காண தளபதிகளிடையே 12ஆவது சுற்றுபேச்சுவாரத்தை நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான திகதியை இறுதி செய்வதற்காக இருதரப்பும்...

இலங்கையில் மேலும் 1,721 பேருக்கு கொரோனா!

இதில் 7 பேர் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய நிலையில் தனிமைப்படுத்தலில் இருந்தவர்கள். ஏனையோர் புத்தாண்டு கொத்தணியுடன் தொடர்புடையவர்களாவர். இதன்படி இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால்...

இலங்கை கொரோனா வைரஸின் நான்காவது அலையின் விளிம்பில்!

கொழும்பில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அச்சங்கத்தின் தலைவர் வைத்திய நிபுணர் பத்மா குணரத்ன இதனை தெரிவித்துள்ளார். மேலும் மக்கள் தொகையில் 8% பேருக்கு...

மீனவர்களின் பிரச்சினைகள் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்!

இலங்கை கடற்படையின் தொல்லை இல்லாமல் மீனவ மக்கள் மீன்பிடி தொழில் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர், ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தேவையேற்பட்டால் வெளியுறுவுத்துறை...

பிந்திய செய்திகள்

வேளாண் மரபில் ஆடி மாதம்!

ஆடி மாதம் என்பது உலகெங்கும் வேளாண் மரபினரின் ஓர் பண்பாட்டு அடையாளம். உலக நாடுகள் எங்கும் இந்நாள் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வந்தது. ஆடி மாதம் பொதுவாக தமிழ்நாட்டில் ஜூலை 14,...

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 24.07.2021

மேஷம்மேஷம்: தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். உடன்பிறந்தவர்கள் வேலைகளை பகிர்ந்து கொள்வார்கள். நெருங்கியவர்களை சந்தித்து எதிர்காலம் குறித்து ஆலோசிப்பீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் தலைமையின் ஆதரவு கிட்டும்....

இந்தியாவில் உயிரிழப்புகள் குறித்து விபரம் காட்டப்படவில்லை!

இது குறித்து மத்திய சுகாதாரதுறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘மற்ற நாடுகளில் பதிவாகியுள்ள கொரோனா உயிரிழப்புகளின் அடிப்படையில் நம் நாட்டில் பதிவான உயிரிழப்புகளை ஒப்பிட்டு ஆய்வறிக்கைகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இது முறையான...

கறுப்பு பணத்தை நாட்டிற்குள் கொண்டு வரும் நடவடிக்கை தொடர்பில் சட்டம் இயற்றப்படுகிறது!

வெளிநாட்டிலுள்ள கறுப்பு பணத்தை நாட்டிற்குள் கொண்டு வரும் நடவடிக்கை தொடர்பில் சட்டம் இயற்றப்படுகின்றதென தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இன்று...

தித்திப்பான நேந்திரம் பழம் அல்வா

குழந்தைகளுக்கு வீட்டிலேயே அல்வா செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று நேந்திரம் பழம் வைத்து சுவையான அல்வா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

ரஃபேல் தொடர்பான விசாரணைகளை தடுக்கவே பெகாசஸ் பயன்படுத்தப்படுகிறது!

நாடாளுமன்ற வளாகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், ‘ரஃபேல் போர் விமானங்கள் தொடர்பான விசாரணையை...

துயர் பகிர்வு